செய்திகள் :

ஆற்காடு பள்ளி மாணவியைக் கர்ப்பமாக்கி கொன்ற வழக்கு - கொடூர இளைஞனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை!

post image

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகேயுள்ள கே.வேளூர் கிராமத்தைச் சேர்ந்தவன் புருஷோத்தமன் என்கிற ரஞ்சித் ( 30). இவன் கடந்த 2018-ம் ஆண்டு, ஒழலை கிராமத்தில் வசித்துவந்த பதினோராம் வகுப்பு மாணவியிடம் பழகி வந்திருக்கிறான்.

தந்தையைப் பிரிந்து தாயைப் பறிகொடுத்த மாணவி, உறவினரின் அரவணைப்பில் வாழ்ந்துவந்திருக்கிறார். மாணவியின் சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்து, அவரிடம் அடிக்கடி தகாத முறையில் நடந்துகொண்டதோடு பாலியல் வன்முறையிலும் ஈடுபட்டிருக்கிறான் புருஷோத்தமன்.

இதில் அந்த மாணவி கர்ப்பமடைந்திருக்கிறார். இந்த நிலையில்தான் 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ம் தேதி, தனது வீட்டுக்கு வருமாறு புருஷோத்தமனை அழைத்திருக்கிறார் மாணவி. அப்போது, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு புருஷோத்தமனிடம் கெஞ்சி வற்புறுத்தியிருக்கிறார்.

புருஷோத்தமன்

இதனால், ஆத்திரமடைந்த புருஷோத்தமன் செல்போன் சார்ஜர் ஒயரால் மாணவியின் கழுத்தை நெரித்து துடிக்கத் துடிக்க கொலை செய்திருக்கிறான். பிறகு கட்டிலுக்கு அடியில் மாணவியின் பிணத்தை மறைத்துவிட்டு தப்பி ஓடியிருக்கிறான் புருஷோத்தமன்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, ஆற்காடு தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து புருஷோத்தமனை கைது செய்து சிறையிலடைத்திருந்தனர். இவ்வழக்கு விசாரணையும் ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் துரிதமாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இவ்வழக்கில் நேற்றைய தினம் தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில், புருஷோத்தமனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, புருஷோத்தமன் சிறையில் அடைக்கப்பட்டான்.

திருச்சி: மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; பள்ளியை முற்றுகையிட்ட மக்கள்; தப்பியோடிய தலைமை ஆசிரியர்

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள பள்ளிவிடை பகுதியில் புனித மரியன்னை அரசு உதவி பெறும் பள்ளி இயங்கி வருகிறது. இந்த உயர் நிலைப் பள்ளியில் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவிகள் கல்வி பயின்று வர... மேலும் பார்க்க

லால்குடி: செப்டிக் டேங்க் சுத்தம் செய்தபோது நிகழ்ந்த சோகம்; இரு இளைஞர்கள் விஷவாயு தாக்கி உயிரிழப்பு!

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள வடுகர்பேட்டை, அன்னை நகர் பகுதியில் உள்ள தேவனாதன் என்பவரது வீட்டில் உள்ள செப்டிக் டேங்கை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இதற்காக, சகானா என்ற தனியார் கழிவு அகற்று... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: மரகத முருகன் சிலை திருட்டு - மர்ம கும்பல் கைவரிசை காட்டியது எப்படி?

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே பெருங்கருணை கிராமத்தில் மலையின் மீது பால தண்டாயுதபாணி கோயில் உள்ளது. இந்த கோயிலில் மரகதத்தால் ஆன மூலவர் முருக்ன் சிலை இருந்தது. சம்பவத்தன்று இரவு கோயிலின் பூட்... மேலும் பார்க்க

சென்னை: லவ் டார்ச்சர்; மார்பிங் போட்டோஸ் - இரண்டு குழந்தைகளின் தந்தை கைதான பின்னணி!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் வளசரவாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையின் மருந்தகத்தில் வேலை செய்து வந்தார். இவருடன் ரஞ்சித்குமார் என்பவரும் வேலை செய்து வந்தார். ரஞ்சித்... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: முன்னாள் அமைச்சரின் மகன்கள் மோதல்: தம்பியை கத்தியால் குத்தி கொடூரமாகக் கொன்ற அண்ணன்!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதி முன்னாள் அதிமுக அமைச்சரான மறைந்த வெங்கடாசலத்தின் மகன்களுக்கு இடையே ஏற்பட்ட சொத்து தகராறில், தம்பியை அண்ணனே கொடூரமாகக் கொலைசெய்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபர... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: இளம்பெண் பாலியல் வன்கொடுமை; 3 இளைஞர்களுக்குக் கடுங்காவலுடன் கூடிய ஆயுள் தண்டனை!

ராணிப்பேட்டையில், பாலாறு - பொன்னை ஆறு சங்கமிக்கும் படுகையையொட்டி, ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கிறது `நவ்லாக்’ அரசுப் பண்ணை (State Horticulture Farm - Navlock). நவாப் ஆட்சிக்காலத்தில், ... மேலும் பார்க்க