செய்திகள் :

``என்னை எப்படியாவது காப்பாத்துங்க; சித்ரவதை செய்யுறாங்க.!"- குவைத்தில் தவிக்கும் கள்ளக்குறிச்சி பெண்

post image

குவைத்தில் வீட்டு வேலைக்குச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், தான் அங்கே கடுமையாகச் சித்ரவதை செய்யப்படுவதாகவும், கடந்த இரண்டு மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் கூறி உருக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வனிதா (35). இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். தன் குடும்பத்தின் வறுமையைப் போக்கி, பிள்ளைகளின் எதிர்காலத்தைக் காப்பாற்றும் நோக்கத்துடன் வனிதா வெளிநாடு செல்ல முடிவெடுத்தார். இதற்காக ஒரு ஏஜென்ட்டை அணுகியுள்ளார்.

குவைத்

அதன் மூலம், மூன்று மாதங்களுக்கு முன்பு அவர் குவைத் நாட்டிற்குச் சென்றார். குவைத் சென்ற சில நாட்களிலேயே ஏஜென்ட் தன்னை ஏமாற்றிவிட்டதை வனிதா உணர்ந்துள்ளார். அவர் தங்கியிருந்த வீட்டில் அவருக்குக் கடுமையான உடல் ரீதியான மற்றும் மன ரீதியான சித்ரவதைகள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், கடந்த இரண்டு மாதங்களாக அவருக்கு உரிய ஊதியமும் வழங்கப்படவில்லை. ஒரு சிறிய, நெருக்கடியான அறையில் அடைத்து வைக்கப்பட்டு, தாங்க முடியாத கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், ``என் பெயர் வனிதா. நான் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவள். இங்கு வந்து மூன்று மாதங்கள் ஆகின்றன. என்னைச் சித்ரவதை செய்கிறார்கள்; இரண்டு மாதமாகச் சம்பளமும் தரவில்லை. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மேடம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் தான் என்னை மீட்டு, என் தாய்நாடான இந்தியாவிற்குத் திரும்ப அழைத்துச் செல்ல வேண்டும்" எனப் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

காவல்துறை

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, வனிதாவின் தாய் வெண்ணிலா கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார். "ஏஜென்ட் என் மகளை ஏமாற்றிவிட்டார். அவளை உயிருடன் மீட்டுத் தாருங்கள்" என அவர் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இச்சம்பவம் குறித்துப் பேசிய கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஷாநவாஸ், ``வனிதா கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினரிடம் புகார் பெறப்பட்டு, வெளியுறவுத்துறை மற்றும் உரிய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவரைப் பாதுகாப்பாக மீட்பதற்கான அனைத்து முயற்சிகளும் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது." என்றார்.

முதல்வர் செயலக அலுவலகம் புதுபிப்பு: ரூ.5.54 கோடிக்கு டெண்டர்; `ரூ.3.78 கோடி போதும்' - ராசி பில்டர்ஸ்

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் பிரதான கட்டடத்தில் செயல்பட்டு வரும் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அலுவலகத்தை, நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்ற... மேலும் பார்க்க

திமுக : `செந்தில் பாலாஜிக்கு மட்டும் ஏன் ஸ்பெஷல் ஆஃபர்?' - கொதிப்பில் சீனியர்கள்!

சட்டமன்றத் தேர்தல் தோல்வியிலிருந்து மீண்டுவரும் நோக்கில் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டிவருகிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். பல்வேறு கறார் முடிவுகளை எடுத்துவரும் கட்சித் தலைமை, `செந்தில... மேலும் பார்க்க

`பிரதமர் முகம் விஜய்'- தவெக ஸ்டன்ட், அப்செட்டில் விசிக; கொந்தளிக்கும் இரண்டாம் கட்ட நிர்வாகிகள்!

'இன்றைய முதல்வர் விஜய், நாளைய பிரதமர்' என தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பிரசாரம் செய்துவருவதால், கடும் அப்செட்டில் இருக்கிறார்கள் வி.சி.க நிர்வாகிகள். 'பாஜக-வை வீழ்த்துவதே நோக்கம்' என்பதை முதல்வர் வி... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் 52 கோயில்களுக்கு செல்போன் எடுத்துச் செல்லத் தடை; எந்தெந்தக் கோயில்கள்?|முழுப் பட்டியல்

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 52 முதுநிலை திருக்கோயில்களுக்குள் பக்தர்கள், பொதுமக்கள் புகைப்படம் மற்றும் விடியோ எடுக்கும் வசதி கொண்ட கைப்பேசியை எடுத்துச் செல்லக் கூடாது எ... மேலும் பார்க்க

Mettur Dam: `93 ஆண்டுக்கால மேட்டூர் அணை வரலாற்றில் இது 62- வது‌ முறை!' - அதிகாரிகள் சொல்வதென்ன?

தமிழ்நாட்டில் சுமார் 16 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கும் அதிகமாக சாகுபடி மேற்கொள்ளப்படும் காவிரி ஆற்றுப்படுகையின் உயிர் நாடியாக விளங்குகிறது, மேட்டூர் அணை. சேலம் மாவட்டம், மேட்டூரில் அமைந்துள்ள இந்த பிரமா... மேலும் பார்க்க

சேகர் பாபு, மா.சுப்பிரமணியனுக்கே முன்னுரிமை - கொதிப்பில் உதயநிதி! தலைநகர் திமுக-வில் என்ன நடக்கிறது?

தலைநகர் தி.மு.க-வில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்ய அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் முடிவெடுத்திருந்தாலும், இன்னமும் சீனியர்கள் ஆதிக்கம் அதீதமாக இருப்பதாக குமுறத் தொடங்கியிருக்கிறார்கள் உதயநிதி ஆத... மேலும் பார்க்க