செய்திகள் :

'தலைமைச் செயலகத்தில் அம்மா உணவகம் அமைக்கப்படுமா?' - மக்கள் கோரிக்கை!

post image

தலைமைச் செயலகத்தில் முதல்வர் தனிப்பிரிவிலும் அமைச்சர்களின் அறையிலும் மனு கொடுக்க அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடி வருகின்றனர். அவர்கள் ஏழை எளிய மக்கள் அதிகம் கூடும் தலைமைச் செயலகத்தில் அம்மா உணவகம் இருந்தால் சிறப்பாக இருக்குமென கோரிக்கையும் வைக்கின்றனர்.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

தலைமைச் செயலகத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர். இவர்களின் வசதிக்காக தலைமைச் செயலகத்தில் சில உணவு விடுதிகளும் இருக்கின்றது. இவை குத்தகைக்கு விடப்பட்ட கேண்டீன்கள்.

இவை போக தமிழ்நாடு தோட்டக்கலைத்துறையின் தேநீர் கடைகள், ஆவின் கேண்டீன்கள், தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் உணவு விடுதியும் உள்ளே அமைந்திருக்கிறது. இந்த உணவு விடுதிகள் எல்லாவற்றிலுமே வெளியில் விற்கப்படும் விலைக்கே உணவுப் பொருட்கள் விற்கப்படுகின்றன.

அம்மா உணவகம்
அம்மா உணவகம்

அரசு ஊழியர்கள் அதிகம் பயன்படுத்தும் கேண்டீன்கள் என்பதால் சில கேண்டீன்களில் வழக்கத்தை விட கூடுதலான விலைக்கும் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதுதான் தலைமைச் செயலகத்தை நோக்கி வரும் சாமானியர்களுக்கு சிரமத்தை கொடுத்திருக்கிறது. இதுதொடர்பாக நம்மிடம் பேசிய தலைமைச் செயலக வட்டாரத்தினர் சிலர், 'முதல்வரின் தனிப்பிரிவில் மனு கொடுக்க தினம் தோறும் அதிக எண்ணிக்கையில் மக்கள் வந்து செல்கின்றனர். அமைச்சர்களின் அறையும் எப்போதும் கூட்டம் நிறைந்தே காணப்படுகிறது. ஏழை எளிய மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து அமைச்சர்களை சந்தித்து மனு கொடுத்துவிட்டு செல்கின்றனர். அப்படி அவர்கள் காத்திருக்கையில் உணவு வேளையில் சாப்பிட செல்ல நினைத்தால் வழக்கமான விலையிலான கேண்டீன்கள் மட்டுமே இருக்கிறது. இவற்றோடு அம்மா உணவகத்தையும் நிறுவினால் ஏழை எளிய மக்கள் பசியாற உதவியாக இருக்கும். ஏற்கனவே அரசு மருத்துவமனை வளாகங்களில் அம்மா உணவகங்கள் இருக்கிறது. தலைமைச் செயலகத்திலேயே தோட்டக்கலை, சுற்றுலாத்துறை, ஆவின் கேண்டீன்களெல்லாம் இருக்கிறது. அவற்றைப் போல அம்மா உணவகத்துக்கும் இடம் ஒதுக்கி மலிவு விலையில் உணவு கொடுத்தால் மனு அளிக்கவரும் ஏழைகள் பயன்பெறுவர்' என்கின்றனர்.

'பார்த்து ரொம்ப நாளாச்சுன்னு வந்தோம்!'- கம்யூனிஸ்ட் அலுவலகத்துக்கு தவெக அமைச்சர்களின் திடீர் விசிட்!

தவெக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ், நிர்மல் குமார், ராஜ்மோகன் ஆகியோர் திடீரென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்துக்கு சென்று அக்கட்சியின் தலைவர்களோடு ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். பெ.சண்முகம் - அ... மேலும் பார்க்க

பிரதமர் வேட்பாளராக விஜய்: ’என்னை சிக்கலில் விட்டு விடாதீர்கள்?’ – அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது பேசிய அவர், “முதலமைச்சர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பேணி காக்கவும், போதை பொருளை கட்டுப்படுத்தவும்... மேலும் பார்க்க

"இத்தாலியின் நீண்ட காலப் பிரதமர்; என் தோழிக்கு வாழ்த்துகள்"- மெலோனிக்கு மோடி வாழ்த்து

இந்தியப் பிரதமர் மோடியும், இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனியும் நல்ல நண்பர்கள்.தற்போது மெலோனி ‘இத்தாலியின் பிரதமராக நீண்ட காலம் பதவி வகிப்பவர்’ என்கிற பெருமையை அடைந்துள்ளார்.இதையொட்டி மெலோனிக்குத் த... மேலும் பார்க்க

`Rapido நிறுவனத்தால் மட்டுமே 2.5 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு; எனவே, மாநில அரசுகள்..!' - நிதின் கட்கரி

இந்தியாவின் வேலைவாய்ப்பின்மைப் பிரச்னை குறித்தும், 22 லட்சம் வேலைவாய்ப்புகள் குறித்தும் மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளதாவது...“நமது நாட்டில் கிட்டத்தட்ட 22 லட்சம் டிரைவர்க... மேலும் பார்க்க

`புதுச்சேரி வருகிறார் நித்தியானந்தா!' - முதல்வர் ரங்கசாமியிடம் தியான பீட நிர்வாகிகள் சொன்னதென்ன ?

புதுச்சேரி அடுத்த ஏம்பலம் கிராமத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கைலாசா நித்யானந்தா தியான பீடத்துக்கு, குடமுழுக்கு செய்வதற்கான நடவடிக்கைகளை அதன் நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக புதுச்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: `முதல்நாளே வந்திருப்போம்; ஆனா.!' - அமைச்சர்கள் சொன்ன விளக்கம்!

தூய்மைப் பணியார்களுக்கு பணி நிரந்தரம், குறைந்தபட்ச ஊதியம், வாரவிடுமுறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உழைப்போர் உரிமை இயக்க மாநிலத் தலைவர் கு.பாரதி தலைமையில் தூயமைப் பணியாளர்கள் போராட்டம் நடத... மேலும் பார்க்க