செய்திகள் :

Trump: "ஹார்முஸ் நீர்ச்சந்திக்குப் பதிலாக சிரியா" - ட்ரம்ப் சொல்லும் ‘புதிய வழி’ என்ன?

post image

ஈரான் போர் தொடங்கிக் கிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆகிவிட்டன.

இந்தப் போரில் அமெரிக்காவிற்கும், இஸ்ரேலிற்கும் நெருக்கடி கொடுக்க ஈரான் தேர்ந்தெடுத்த வழி - ஹார்முஸ் நீர்ச்சந்தி.

உலகின் பெரும்பான்மையான எண்ணெய் போக்குவரத்து ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியாகத்தான் நடக்கிறது.

ஈரான் பிளான்

ஈரான் போர் தொடங்கியதும் ஹார்முஸை மூடிவிட்டது ஈரான்.

இந்த வழியை அடைத்தால் எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்படும். இதனால், உலக நாடுகளில் எண்ணெய் விலை அதிகரிக்கும்... எண்ணெய் சந்தை பாதிப்படையும். இதனால், அமெரிக்காவிற்கும், இஸ்ரேலிற்கும் நெருக்கடி ஏற்படும் என்று பிளான் போட்டது ஈரான்.

இந்தப் பிளான் பெரும்பாலும் நடந்துவிட்டதுதான். ஆனாலும், ஈரான் போர் இன்னும் முடிந்தபாடில்லை.

ஹார்முஸ் நீர்ச்சந்தி
ஹார்முஸ் நீர்ச்சந்தி

ஹார்முஸ் நீர்ச்சந்தி ஈரான் எல்லையில் விரிந்திருப்பது ஈரானுக்குச் சாதகமான ஒன்று.

அதனால், ஈரான் நினைத்த கப்பல்கள் அந்த வழியைக் கடக்கிறது. ஈரானின் தடையைத் தாண்டினால், அந்தக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.

இதனால், பல மில்லியன் டன் எண்ணெய்கள் தாங்கிய கப்பல்கள் ஹார்முஸின் எல்லையில் காத்திருக்கின்றன.

தற்போது ஹார்முஸ் நீர்ச்சந்திக்கு மாற்றுப் பாதையாக மாறுவதற்கு சிரியா ஆர்வம் காட்டுகிறது. இது ஈராக்கில் இருந்து சாலை வழியாக எண்ணெய் எடுத்து செல்லும் போக்குவரத்து ஆகும்.

ட்ரம்ப் பேச்சு

இது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று, “சிரியாவில் இப்போது குழாய்வழிகள் தீவிரமாகக் கட்டப்பட்டு வருகின்றன. சொல்லப்போனால், சிரியா வழியிலான சாலைகள் அமைக்கப்பட்டு, ஏற்கனவே பயன்பாட்டிற்கும் வந்துவிட்டன.

எண்ணெய்யை ஏற்றிச் செல்லும் பிரமாண்டமான லாரிகள் சிரியா வழியாகத் தாராளமாகச் சென்றுகொண்டிருக்கின்றன. ஹார்முஸ் நீர்ச்சந்திக்கு மாற்றாகப் பல புதிய வழிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

உண்மையைச் சொன்னால், ஹார்முஸ் நீர்ச்சந்தி முன்பு போல இப்போது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை” என்று பேசியிருக்கிறார்.

"டாஸ்மாக் பிரச்னை 200 படிகள் கொண்டது; நான் 70 படிகள் ஏறிவிட்டேன்" - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

கோவை பேரூர் அருகே த.வெ.க மேற்கு மாவட்ட மகளிரணி சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்கான வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் கலந்து... மேலும் பார்க்க

"அதிமுகவும் திமுகவும் பாஜகவுடன் சேர்ந்து போட்டியிட வாய்ப்புள்ளது" - அமைச்சர் நிர்மல்குமார்

விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனரின் பிறந்த நாளினை முன்னிட்டு மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள சிதம்பரனாரின் முழு உருவ சிலைக்கு மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி... மேலும் பார்க்க

கே.என். நேரு வீட்டில் சோதனை: "தவெகவின் பூச்சாண்டிகளுக்கு அஞ்சமாட்டோம்" - ஸ்டாலின் பதிவு

முன்னாள் அமைச்சர் மற்றும் திமுக எம்.எல்.ஏ நேரு, அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்குச் சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது.இதற்கு கண்டனம் எதிர்ப்பு தெரிவித்து முன்... மேலும் பார்க்க

’ரூ.2 லட்சத்தில் கமிஷனருக்கு செல்போன் வாங்குவதா?’ - கோவை மாநகராட்சி சர்ச்சை

கோவை மாநகராட்சி பயன்பாட்டிற்கு செல்போன் மற்றும் கேமரா வாங்கியதில் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.இது குறித்து நம்மிடம் பேசிய சவுரிபாளையம் பகுதியைச் சேர்ந்த தகவல் அறிய... மேலும் பார்க்க

"யாராக இருந்தாலும் தப்ப முடியாது" - லஞ்சம் குறித்து அமைச்சர் கீர்த்தனா எச்சரிக்கை

விருதுநகர் வேம்பக்கோட்டையில் மாற்றுத்திறனாளி ஒருவர் பட்டாசுக் கடை வைக்க தடையில்லாச் சான்றிதழுக்கு விண்ணப்பித்திருக்கிறார்.அவரிடம் லஞ்சம் கேட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை வீடியோ எடுத்துச் சமூக வலைத்... மேலும் பார்க்க

இலங்கை: விமான ஒப்பந்தத்தில் 8 லட்சம் டாலர் லஞ்சம்; மஹிந்த ராஜபக்சே மகன் கைதான பின்னணி என்ன?

இலங்கையில் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே. இவரது மகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சேவை நேற்று (செப்டம்பர் 4) இலங்கை நாட்டின் ஊழல் தடுப்பு அதிகாரிகள் கைது செய்திருக்கின்றனர்.என்ன காரண... மேலும் பார்க்க