செய்திகள் :

"நான் சிறையில் இருந்தபோதுதான் எனக்கு புற்றுநோய் வந்தது" - உத்தவ் கட்சி எம்.பி பகீர் குற்றச்சாட்டு

post image

சிவசேனா(உத்தவ்) கட்சியில் சர்ச்சைக்குறிய எம்.பியாக இருப்பவர் சஞ்சய் ராவுத். இவரால்தான் பா.ஜ.க மற்றும் சிவசேனா கூட்டணி முறிந்ததாக பா.ஜ.க தெரிவித்துள்ளது.

சஞ்சய் ராவுத் கடந்த 2022ம் ஆண்டு பத்ரா சால் நில மோசடி வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு 101 நாட்கள் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு அவருக்கு வயிற்றில் புற்றுநோய் வந்தது. அதற்கு அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டார். இது குறித்து சஞ்சய் ராவுத் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அவர் அளித்த பேட்டியில்,''சிறையில் இருந்த காலத்துக்கும், புற்று நோய்க்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எனது உணவில் விஷம் கலந்திருக்கிறதா என்பதைச் சரிபார்க்க, நச்சுத்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பரிந்துரைத்திருந்தார்.

தற்போதைய அரசாங்கம் மிகவும் கொடூரமானது. அதை எதிர்ப்பவர்களுக்கு எதிராக எந்த எல்லைக்கும் அவர்கள் செல்வார்கள். சிறையில் இருக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு எதுவும் நடக்கலாம் என்று ராகுல் காந்தியும் சந்தேகப்பட்டார்.

நான் சிறையில் இருந்தபோதுதான் எனக்கு புற்றுநோய் ஏற்பட்டது. ராகுல் காந்தி உணவில் விஷம் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை அறிய நச்சுத்தன்மை பரிசோதனையை மேற்கொள்ளுமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார். சிறையில் அடைக்கப்படும் அரசியல் தலைவர்களுக்கு உடல்நலப்பிரச்னை ஏற்படுகிறது.

சிறையில் உள்ள உணவு அல்லது தண்ணீரை அதிகாரிகள் சேதப்படுத்தலாம். அரசாங்கத்திற்கு எதிராக குரல் எழுப்பும் எங்களைப் போன்றவர்களுக்கு சிறையில் அதற்கான (அது நடக்கலாம்) சாத்தியம் உள்ளது. அத்தகைய சூழ்நிலை ஏற்படலாம் என்று ராகுல் காந்தி எச்சரித்தார்'' என்று தெரிவித்தார்

"தினமும் மலை மீது 10 கிமீ ஏறிச்செல்வேன்" - 2 மாணவிகளுக்காக கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்

மகாராஷ்டிராவில் கட்சிரோலி, பண்டாரா, கோண்டியா, தானே, கோலாப்பூர் போன்ற சில மாவட்டங்களில் அதிக அளவில் மலைப்பகுதிகள் இருக்கின்றன. இந்த மலையில் அதிக அளவில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்... மேலும் பார்க்க

மும்பை: ரயில் இருக்கைகளை ஆக்கிரமித்து சீட்டாட்டம்; பயணிகள் கண்டனம்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

மும்பை புறநகர் ரயில்களில் பயணம் செய்பவர்கள் இருக்கைக்காகவும், வாசலில் நின்று பயணம் செய்வது தொடர்பாகவும் அடிக்கடி சண்டையிட்டுக்கொள்வதுண்டு. மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினஸ், சர்ச்கேட், தாதர் ரயில் நிலைய... மேலும் பார்க்க

5 தங்கப்பதக்கங்கள் வென்ற தேசிய மல்யுத்த வீராங்கனை; 3 குழந்தைகளுடன் 100 அடி பள்ளத்தில் குதிப்பு!

மகாராஷ்டிராவின் தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க நல்துர்க் கோட்டையில் இருந்து 100 அடி பள்ளத்தாக்கில் குதித்து தேசிய அளவிலான பெண் மல்யுத்த வீராங்கனை தனது மூன்று குழந்தைகளுடன் தற்கொலை செ... மேலும் பார்க்க

பன்றியின் சிறுநீரகத்தில் உயிர் வாழ்ந்த நபர்; 271 நாள்களுக்குப் பிறகு கிடைத்த மனித சிறுநீரகம்!

உலகில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். அவர்களுக்கு சிறுநீரகம் கிடைப்பதில் தாமதம் அல்லது. கிடைக்காமல் போவது போன்ற காரணங்களால் உயிரிழக்க நேரிடுகிறது. இ... மேலும் பார்க்க

`யாரும் திருடிட கூடாது' கிரேன் மூலம் ஸ்கார்பியோ காரை வீட்டுமாடியில் வைத்துவிட்டு வெளிநாடு சென்ற நபர்

பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த சுகாராம் யாதவ் என்பவருக்கு மகேந்திரா ஸ்கார்பியோ கார் ஒன்று சொந்தமாக இருக்கிறது. அந்த காரை அவர் தனது வீட்டிற்கு வெளியில் நிறுத்துவது வழக்கம். இதனிடையே அவர் ஒரு வாரம் வெள... மேலும் பார்க்க