செய்திகள் :

``எங்களுடன் வந்து பணியாற்றுங்கள்" - இந்திய இளைஞருக்கு நெதர்லாந்து நிறுவனம் அழைப்பு; பின்னணி என்ன?

post image

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பியோரா பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்திர சிங் சவுத்ரி (21). இணைய உலகில் ‘பிட்டு தபாஹி’ என்று பிரபலமாக அறியப்படும் இவர், தனது பகுதியில் கடுமையாக மாசுபடுத்தப்பட்டிருந்த அஜ்னார் நதியை மீட்டெடுக்கத் தனி ஆளாகக் களமிறங்கினார்.

கடந்த ஜனவரி மாதம் முதல் தொடர்ந்து முயற்சியில் ஈடுபட்ட பிட்டு தபாஹி, ஆற்றில் தேங்கிக் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள், பாசிகள் மற்றும் பிற குப்பைகளை அகற்றி நதியை முற்றிலும் தூய்மைப்படுத்தினார். இதற்கு அவர் இதுவரை சுமார் ரூ.30,000 வரை சொந்தமாகச் செலவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சுரேந்திர சிங் சவுத்ரி
சுரேந்திர சிங் சவுத்ரி

இவரது இந்த அசாத்திய முயற்சியைப் பாராட்டி, ஆற்றுப்பாதையின் ‘முன்னர் மற்றும் பின்னர்’ (Before and After) புகைப்படங்களை எக்ஸ் (ட்விட்டர்) பயனர் ஒருவர் இணையத்தில் பகிர்ந்திருந்தார். இந்தத் பதிவு நெதர்லாந்தை மையமாகக் கொண்டு இயங்கும் 'தி ஓஷன் கிளீன்அப்' (The Ocean Cleanup) தொண்டு நிறுவனத்தின் நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான போயன் ஸ்லாட் (Boyan Slat)-ன் கவனத்தை ஈர்த்தது.

உலகளாவிய அளவில் சமுத்திரங்களில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வரும் போயன் ஸ்லாட், அந்தப் பதிவைப் பார்த்து `எங்கள் நிறுவனத்தில் வந்து பணியாற்றுங்கள்' என நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார்.

டச்சு தொழில்முனைவோரான போயன் ஸ்லாட்டின் இந்த அழைப்பு சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளானதுடன், பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

போயன் ஸ்லாட்
போயன் ஸ்லாட்

கடந்த மார்ச் மாதத்தில் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவும் பிட்டு தபாஹியின் சேவையைப் பாராட்டியிருந்தார். சமூக வலைத்தளப் புகழுக்காகவே இவர் நதியைச் சுத்தம் செய்வதாக விமர்சனங்கள் எழுந்தபோதிலும், "லைக்குகளுக்கான ஆசை நன்மையான காரியத்திற்கு வழிவகுக்குமானால் அது வரவேற்கத்தக்கதே" எனக் கூறி, அவரைத் தனது 'திங்கட்கிழமை உத்வேகமாக' (Monday Motivation) ஆனந்த் மஹிந்திரா குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

Viral: சொறிந்துவிடும் வேலை; மாதம் 14 லட்சம் வருமானம்; சீன இளைஞரின் வித்தியாசமான தொழில்!

சீனாவின் ஹூபய் (Hubei) மாகாணத்தைச் சேர்ந்தவர் சாங் சியாவோகியோ (Zhang Xiaoqiao - 32). இவர் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு ஏழு வெவ்வேறு வேலைகளைச் செய்தார். ஒரு கட்டத்தில் சொந்தமாக நிறுவனம் ஒன்றை தொடங்க... மேலும் பார்க்க

I’m Game: `அழகு சில நேரங்களில் அவரது திறமைக்கு ஒரு சிறிய தடை' - கயாடு லோஹர் குறித்து துல்கர் சல்மான்

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம் ‘ஐ அம் கேம்’. ‘ஆர்.டி.எக்ஸ்’ படப்புகழ் நஹாஸ் ஹிதாயத் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் துல்கர... மேலும் பார்க்க

மகள்களின் கல்விக் கனவு: `ரூ.3000 பரிசுக்காக ஒரு தாயின் செருப்பில்லா மாரத்தான்' - நெகிழ்ச்சி வீடியோ

குழந்தைகளின் கல்விக்காக ஓடிய தாயின் தீவிரம் சமூக ஊடகங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் பீட் (Beed) மாவட்டத்தில் உள்ள அம்பாஜோகாயைச் சேர்ந்தவர் ராமபாய் ரன்வீர் (47). கணவன்... மேலும் பார்க்க

``ஒரு நடிகராக சக நடிகருக்குச் சொல்கிறேன்.! " - நடிகர் பிரகாஷ் ராஜ் வெளியிட்ட வீடியோ

கர்நாடக மாநிலம் தார்வாடில் உள்ள ‘கர்நாடகா வித்யாவர்தகா சங்க’ வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 30) ‘மனுஷ்யத்வதெடகே சமுதாயா’ சார்பில் சமூக மற்றும் தேசிய அளவிலான பிரச்னைகள் குறித்த கலந்தாய்வு நிகழ்ச்சி... மேலும் பார்க்க

காதலியின் 3,400 முத்தங்களால் விபரீதம்: வைரலான வீடியோ; காரைப் பறிமுதல் செய்து அபராதம் விதித்த போலீஸ்!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்தவர் ஆதித்ய சிகார்வார். இன்ஸ்டாகிராமில் பிரபலமடைவதற்காக, தனது சுவிஃப்ட் காரை வித்தியாசமான முறையில் மாற்ற திட்டமிட்டுள்ளார். இதற்காக அவருடைய பெண் தோழி ஒருவர் ச... மேலும் பார்க்க

``அமைச்சர் குறைந்தபட்சம் என்னிடம் விவரமாவது கேட்டிருக்கலாம்.!" - வன்னிஅரசு குறித்து அயலக மாணவர்

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் மலேசியா தேசிய பல்கலைக்கழகத்தில் படிக்கச் சென்ற பாரதிதாசன் என்ற மாணவர், கல்வி உதவித்தொகை கிடைக்காமல் தாம் மிகவும் சிரமப்படுவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டி... மேலும் பார்க்க