செய்திகள் :

தூத்துக்குடி: "பலமுறை கண்டித்தும் கேட்கவில்லை" - மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கணவன்

post image

நெல்லை மாவட்டம், கீழ நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவரது மனைவி அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகக்கனி.

இவர்களுக்குக் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆறுமுகப்பாண்டி மீது நெல்லை தாலுகா, பாளைங்கோட்டை, தச்சநல்லூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ரெளவுடிகள் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளார். இவர் அடிக்கடி சிறைக்குச் சென்று வந்ததால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

முறப்பநாடு காவல் நிலையம்
முறப்பநாடு காவல் நிலையம்

இதனையடுத்து கீழநத்தத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகேயுள்ள முறப்பநாட்டில் தன் மனைவியுடன் ஆறுமுகப்பாண்டி குடியேறினார். இங்கு வந்தும் ஆறுமுகப்பாண்டியின் நடவடிக்கை மாறாததால் மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், நேற்று மாலை குளிக்க அழைத்துச் செல்வதாகக் கூறி முறப்பநாடு அருகேயுள்ள ஓர் ஓடைப்பகுதிக்கு மனைவியை அழைத்துச் சென்றுள்ளார் ஆறுமுகப்பாண்டி.

அப்போது துண்டால் ஆறுமுகக்கனியின் கழுத்தை இறுக்கி, ஓடைத் தண்ணீரில் மூழ்கடித்துள்ளார். இதில், ஆறுமுகக்கனி உயிரிழந்தார். பின்னர் முறப்பாடு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

அவரிடம் நடத்திய விசாரணையில், “நான் பல்வேறு வழக்குகளில் கைதாகி அடிக்கடி சிறை சென்று வந்ததால் திருமணமானதில் இருந்தே எனக்கும் என் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில், நான் வீட்டில் இருக்கும்போதும், இல்லாமல் இருக்கும் நேரத்திலும் யாருடனோ போனில் அடிக்கடி பேசிக்கொண்டே இருந்தாள்.

முறப்பநாடு காவல் நிலையம்
முறப்பநாடு காவல் நிலையம்

இன்ஸ்டாகிராமிலும் சாட்டிங் செய்து கொண்டிருந்தாள். பலமுறை கண்டித்தும் அவள் கேட்கவில்லை. இது தொடர்பாக அடிக்கடி எங்களுக்குள் சண்டை வந்தது. பின்னர் அவளைச் சமாதானப்படுத்திவிட்டு ஓடையில் குளித்துவிட்டு வருவோம் எனக்கூறி அழைத்துச் சென்றேன். கழுத்தில் துண்டால் இறுக்கினேன். அவள் மயங்கியதும் ஓடையில் மூழ்கடித்துக் கொன்றேன்” என்றார்.  

திருப்பதி: '2 கிலோ தங்கம்; 6 கிலோ வெள்ளி' - லஞ்ச ஒழிப்புத்துறையினரால் தேவஸ்தான அதிகாரி கைது

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திருப்பதி தேவஸ்தான அதிகாரி லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருமலை திருப்பதிதிருமலை திருப்பதி தேவஸ்தானத்தில்... மேலும் பார்க்க

சமைக்க நேரமில்லை எனக் கூறிய மனைவி; அடித்துகொன்ற கணவன்; நாக்பூரில் கொடூரம்

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் யாமினி.(38). இவரது கணவர் கிருஷ்ணா லால்(41). கிருஷ்ணா நேற்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். வீட்டில் சாப்பிட நினைத்தார். ஆனால் அவரது மனைவி சமையல் செய்த... மேலும் பார்க்க

பெரம்பலூர்: கமிஷன் கேட்ட வீடியோ வைரல்; பி.டி.ஓ-வை சஸ்பெண்ட் செய்த ஆட்சியர்; என்ன நடந்தது?

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுக்காவிற்கு உட்பட்ட வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலராக சித்தார்த் என்பவர் பணியாற்றி வந்தார். இவர், அரசுப் பணிகளுக்கான ஒப்பந்ததாரர்களிடம் பணி முடிந்து பில் தொகை பெறுவதற்க... மேலும் பார்க்க

திருச்சி: சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த 4 சிறுவர்கள்; சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு

திருச்சி மாநகரம், காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. பெற்றோர் இருவரும் இல்லாத நிலையில் அவருடைய உறவினர் அரவணைப்பில் அந்தச் சிறுமி வளர்ந்து வருகிறார். அந்... மேலும் பார்க்க

நெல்லை: குடிநீர்க் குழாயில் தண்ணீர் வராததால் ஆத்திரம்; பஞ்சாயத்து தலைவர் அடித்துக் கொலை

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கண்ணநல்லூர் ஊராட்சிக்கு உள்பட்ட தாமரைக்குளம், தெற்குத் தெருவில் வசித்து வந்தவர், மகாராஜன் (65). அவர் கண்ணநல்லூர் பஞ்சாயத்து தலைவராகச் செயல்பட்டு வந்தார். அவரது வீட... மேலும் பார்க்க

அமெரிக்காவில் 6 லட்சம் டாலர் மோசடி; எப்.பி.ஐயால் தேடப்படும் முக்கியக் குற்றவாளி பஞ்சாப்பில் கைது

பஞ்சாப்பைச் சேர்ந்த அதிகமானோர் கனடா மற்றும் அமெரிக்காவில் வசிக்கின்றனர். அவர்கள் அந்த நாடுகளில் குற்றங்களில் ஈடுபட்டுவிட்டு இந்தியாவிற்கு வந்துவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அது போன்று அமெரிக்காவில்... மேலும் பார்க்க