செய்திகள் :

Bigg Boss வீட்டில் மேரி கோம்: அவரின் `knockout' குணம் குறித்து பகிர்ந்த பிரியங்கா சோப்ரா

post image

இந்தியாவின் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோம், சல்மான் கான் தொகுத்து வழங்கும் Bigg Boss 20 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். செப்டம்பர் 6, 2026 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மேரி கோம் அறிமுகமானார்.

மேரி கோமின் வருகை இந்தி Bigg Boss நிகழ்ச்சியில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒலிம்பிக் பதக்கம் வென்றவரும், பலமுறை உலக சாம்பியனுமான மேரி கோம், குத்துச்சண்டைப் போட்டிகளில் காட்டிய ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியை Bigg Boss வீட்டிலும் கடைப்பிடிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், மேரி கோம் குறித்து பிரியங்கா சோப்ரா சிறப்பு வீடியோ செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், மேரி கோமின் குத்துச்சண்டை திறமை மட்டுமின்றி, அவரது தனித்துவமான குணநலன்களையும் குறிப்பிட்டு, மற்ற போட்டியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக, மேரி கோமின் “knockout” குணம் குறித்து போட்டியாளர்களிடம் பிரியங்கா சோப்ரா விளையாட்டாக கூறியுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் தனது திரைப்பட அனுபவத்தை நினைவுகூர்ந்த பிரியங்கா சோப்ரா, மேரி கோமின் பயணத்தை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும், அவருக்கு அன்பு நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.

‘Mary Kom’ திரைப்படம் 2014ஆம் ஆண்டு வெளியானது. ஓமங் குமார் இயக்கிய இந்தப் படத்தை சஞ்சய் லீலா பன்சாலி தயாரித்தார். மேரி கோமின் வாழ்க்கை மற்றும் குத்துச்சண்டைப் பயணத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டது. இப்படம் 62வது தேசிய திரைப்பட விருதுகளில் ‘Best Popular Film Providing Wholesome Entertainment’ விருதையும் பெற்றது.

மேரி கோம் போன்ற சர்வதேச அளவில் புகழ்பெற்ற விளையாட்டு வீராங்கனை Bigg Boss 20 போன்ற பிரபலமான reality show-வில் பங்கேற்பது, நிகழ்ச்சியின் மீதான ரசிகர்களின் கவனத்தை மேலும் அதிகரித்துள்ளது.!

`சட்டமன்றத்துக்கே போய் பேசினாலும்... முதல் மேடை, முதல் நம்பிக்கை கொடுத்தது விகடன் தான்!' - ராஜ்மோகன்

Myna wings சேனலுக்காக `Best Couple Celebrity Channel' விருதை நடிகை மைனாவும் அவர் கணவரும் பெற்றுக்கொண்டனர். அவர்களுக்கு விருதை வழங்கிப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், ``எனக்கு எப்போதும் விகடன்கிழமைதான். விய... மேலும் பார்க்க

``எல்லா சத்தியமும் பலிக்காது தலைவரே..!" - ரஜினிகாந்த் குறித்து விகடன் விருது விழாவில் கோபிநாத்

டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக்கொண்டிருக்கும் கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், 'விகடன் டிஜிட்டல் விருதுகள் 2026' விழாவைக் கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் பிரமாண்டமாக நடத்துகிறது விகடன். '... மேலும் பார்க்க

"குஜிலிமஸ்து, சாக்‌ஷி... அதுல இருந்து வர்ற வார்த்தைங்க தான் இதெல்லாம்"- கலகலப்பூட்டிய லுங்கி பாய்ஸ்

ஐபிஎல் என்றால் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் என்று மட்டுமே ஞாபகத்துக்கு வரும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு, `ஹம்சா’, `துரந்தர்’ என எந்த வீடியோவை இவர்கள் இன்று வெளியிடுவார்கள் என்று ஆவலுடன் காத்... மேலும் பார்க்க

`தளபதி... GOAT... வாரணம் ஆயிரம்!' - `ஃபேவரைட்ஸ்' சொன்ன கயாடு லோஹர்

`டிராகன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் தனி வரவேற்பைப் பெற்று, தனது ஒவ்வொரு படைப்பிலும் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிவரும் கயாடு லோஹருக்கு, இந்த ஆண்டின் `Most Celebrated Star' விருதை ... மேலும் பார்க்க

``Goat 2 Years - இதைவிட பெரிய Manifestation செய்திருக்கிறோம்..!" - இயக்குநர் வெங்கட் பிரபு

நடிகை கயாடு லோஹாருக்கு Most Celebrated Heroine' விருது வழங்கப்பட்டது.விருதை வழங்கிய இயக்குநர் வெங்கட் பிரபு பேசுகையில், ```கோட்’ படம் ரிலீஸாகி இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. ஒரே வாரத்தில்தான் `மங்கா... மேலும் பார்க்க