செய்திகள் :

ஹர்திக் பாண்டியாவுடன் காதலா?:``ஆமாம்பா... நீ சொல்வது உண்மைதான்" - நடிகை அமீஷா பட்டேல் கிண்டல்!

post image

பாலிவுட் நடிகை அமீஷா பட்டேலும், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவும் சமீபத்தில் மும்பையில் உள்ள தாஜ் மகால் பேலஸ் ஹோட்டலில் சந்தித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ‘கதர்’ படப் புகழ் அமீஷா பட்டேல், ஹார்திக் பாண்டியாவைத் தனது நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார். அப்போது அமீஷா, ஹார்திக்கின் தோள் மீது கை வைத்தபடி இயல்பாகப் பேசிக்கொண்டிருந்தார்.

அமீஷா பட்டேல்
அமீஷா பட்டேல்

இந்த வீடியோவைப் பகிர்ந்த 'எக்ஸ்' பயனர் ஒருவர், ``பெங்களூரில் உள்ள ஹோட்டலில் நடந்த பார்ட்டியில் ஹார்திக் பாண்டியாவின் தோளில் அமீஷா பட்டேல் கை வைத்த விதம்... ரெடிட் (Reddit) தளத்தில் பரவிய வதந்திகள் அனைத்தும் உண்மையாகிவிடும் போலிருக்கிறதே!" எனக் குறிப்பிட்டிருந்தார்.

அமீஷாவின் இந்தச் சாதாரணமான சைகையை, இருவருக்கும் இடையே காதல் இருப்பது போன்ற தோரணையில் அந்தப் பயனர் சித்தரித்திருந்தார். தங்கள் சந்திப்பு குறித்த இத்தகைய வதந்திக்கு நடிகை அமீஷா பட்டேல் தனது எக்ஸ் பக்கத்தில் காரசாரமான மற்றும் நையாண்டியான பதிலடி கொடுத்துள்ளார்.

ஒரு சாதாரணமான நட்பான சைகைக்குக் காதல் சாயம் பூசிய நெட்டிசனின் கருத்தைக் கடுமையாகச் சாடியுள்ள அவர், ``ஆமாம்பா, ரொம்ப சரி! My God... நீ சொல்வது உண்மைதான்.. அவர் மீது நான் கை வைத்திருந்த விதம் அவ்வளவு 'ரொமான்டிக்' ஆகவா இருந்தது! எனக்கு உன்னை யார் என்று தெரியாது, ஆனால் நிச்சயம் உனக்கு ஒரு பெண் தோழி கூட இல்லை என்று மட்டும் புரிகிறது. இனிமேல் இதுபோன்ற பதிவுகளைப் போடுவதற்கு முன்பு, உனக்கு ஒரு பெண் தோழியைத் தேடிக்கொள்வது நல்லது." எனக் குறிப்பிட்டு அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Harry Potter TV Series: 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' பாணியில் ஹாரி பாட்டர்! HBO-வின் புதிய முயற்சி!

'மாயாஜாலம்' என்ற ஃபேண்ட்டஸி உலகத்தை ஹாரி பாட்டர் என்ற பெயரில் ஏழு பாக நாவலாக செதுக்கியவர் ஜெ.கே.ரெளலிங். இந்நாவலை தழுவி, 2001-ல் ஆரம்பித்து 2011 வரை ஹாரி பாட்டர் திரைப்படம் எட்டு பாகங்களாக வெளிவந்தன. ... மேலும் பார்க்க

Insidious: Out of the Further Review: அதிரடி க்ளைமாக்ஸும் அமானுஷ்யமும்! புதிய `இன்சிடியஸ்' எப்படி?

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற `இன்சிடியஸ்' (Insidious) ஹாரர் யுனிவர்ஸில் ஆறாவது பாகமாக வந்திருக்கிறது `இன்சிடியஸ்: அவுட் ஆஃப் தி ஃபர்தர்'. `தி ரெட் டோர்' படத்துக்குப் பிறகு நடக்கும் இந்தக் கதை, லேம்பர்ட் கு... மேலும் பார்க்க

Tom Holland: `ஸ்பைடர் மேனுக்கு கல்யாணம்' - நீண்ட நாள் காதலியான நடிகையை கரம்பிடித்தார்!

ஹாலிவுட் நட்சத்திரங்களான ஜெண்டயா (Zendaya) மற்றும் டாம் ஹாலண்ட் (Tom Holland) ஆகியோர் 'ஸ்பைடர்மேன்' படங்களில் ஜோடியாக நடித்து உலகளவில் பிரபலமானவர்கள். 2016 முதல் காதலித்து வந்த இந்த ஜோடி, தங்கள் ரகசிய... மேலும் பார்க்க