தாராவியைக் நினைவூட்டும் நெரிசலும் 'ஆவோ, ஆவோ' என்ற எளிய குடும்பத்தின் இன்முகமும்
'ஸ்டாலின் மிசாவில் சிறைக்கு செல்லவில்லை; பெண்களை தவறாக பேசியதால்தான்..' - அமைச்சர் சி.டி.ஆர் ஆவேசம்!
காவல்துறை மானியக்கோரிக்கையின் மீது முதல்வர் விஜய் நேற்று பதிலளித்து பேசியிருந்தார். அதில் சர்க்காரியா கமிஷன் பற்றியும் மிசா பற்றியும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் அவற்றை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டுமென திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். அப்போது அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் ஆவேசமாக சில கருத்துகளைப் பேசினார்.

முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் கே.என்.நேரு ஆகியோர் முதல்வர் பேசியதை அவைக்குறிப்பிலிருந்து நீக்கக் கோரினர். உடனே எழுந்த சி.டி.ஆர்.நிர்மல் குமார், 'சர்க்காரியா கமிஷனை பற்றி இந்த அவையில் எவ்வளவோ பேசப்பட்டிருக்கிறது. கலைஞர் எங்கெல்லாம் அமௌண்ட் வாங்கினார் என அந்த அறிக்கையில் இருக்கிறது. அதன் அடிப்படையில்தான் சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது.
மிசா காலத்தில் திருட்டு, கொள்ளை, பெண்களை தவறாக பேசியவர்களையெல்லாம் கைது செய்தார்கள். அதையெல்லாம் மிசா கைது என எடுக்க முடியாது. இந்திரா காந்தியைப் பற்றி ஸ்டாலின் அவதூறாக பேசியிருந்தார். பெண்களை தவறாக பேசியதால்தான் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் என்கிற குறிப்புகள் இருக்கிறது.' என்றார்.
தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் கோவி.செழியன், 'அமலாக்கத்துறை சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அதை முதல்வர் எப்படி பேசலாம்?

சர்க்காரியா கமிஷனில் யாரும் குற்றவாளி என தீர்ப்பு கொடுக்கப்படவில்லை . அதை வைத்தே திமுகவை விமர்சிக்க காரணம் என்ன?
இறந்து போன முரசொலி மாறனை பற்றி முதல்வர் ஏன் பேச வேண்டும்?' என்றார்.
இந்நிலையில், முதல்வர் பேசியதை அவைக்குறிப்பிலிருந்து நீக்க முடியாது என சபாநாயகர் உறுதியாக கூறிவிட்டார்.













