செய்திகள் :

"ஸ்டாலினை கொச்சைப்படுத்தும் வகையில் முதல்வர் பாடி லாங்வேஜ்; அதனால்.!" - எ.வ வேலு

post image

நேற்று (செப்.7) நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது முதல்வர் விஜய், திமுகவை விமர்சித்து பேசியிருந்தார்.

குறிப்பாக சர்க்காரியா கமிஷன், மிசா குறித்தெல்லாம் பேசியிருந்தார். இந்நிலையில் முதல்வரின் பேச்சில் ஆட்சேபத்துக்குரியவற்றை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று இன்றைய சட்டமன்றக் கூட்டத்தொடரில் திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

திமுகவினரின் கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர், "இது பொதுக்கூட்ட மேடை அல்ல, கட்சி கூட்ட மேடை அல்ல. திமுகவினர் அமைதியாக இருந்தால் பேச அனுமதிப்பேன்" என்று கூறியிருக்கிறார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இருப்பினும் தொடர்ந்து திமுகவினர் அமளியில் ஈடுபட்டதால் திமுகவினரை அவையில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டிருக்கிறார். இதனால் அவைக்காவலர்கள் சபைக்குள் வரவழைக்கப்பட்டு, அமளியில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்கள், குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, "நேற்று காவல்துறை மீதான மானியக் கோரிக்கையில் முதல்வர் எதிர்க்கட்சியினரின் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லவில்லை. வேண்டுமென்றே திமுகவை அசிங்கப்படுத்தும் நோக்கத்துடன் பொய்யான செய்திகளை ஒரு மணி நேர சினிமா பாணியில் பேசி முடித்தார்.

அவர் பேசியதற்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டும் என்று கேட்டோம். அதற்கு சபாநாயகர் எங்களுக்கு அனுமதி மறுத்துவிட்டார். பழைய வழக்குகளை எல்லாம் திரும்ப சட்டமன்றத்தில் பேசிக்கொண்டிருக்கிறார்.

மிசாவைப் பற்றி பேசுகிறார். அவர் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என இன்று சபாநாயகரிடம் வலியுறுத்தினோம். சபாநாயகர் மறுத்துவிட்ட காரணத்தினால் இன்று வெளிநடப்பு செய்திருக்கிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

செய்தியாளர்கள் சந்திப்பு
செய்தியாளர்கள் சந்திப்பு

தொடர்ந்து பேசிய திமுக கொறடா எ.வ வேலு, " எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் பதிலளிப்பார் என எதிர்பார்த்தோம். நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் பற்றி பேரவையில் பேசக் கூடாது என விதிகள் உள்ளன.

அமலாக்கத்துறையின் அறிக்கையை படித்த முதல்வர், மிசாவைப் பற்றி பேசும்போது ஒரு பாடி லாங்வேஜ் செய்தார். திமுக தலைவர் ஸ்டாலினை கொச்சைப்படுத்தும் வகையில் முதல்வர் பாடி லாங்வேஜ் செய்து காட்டினார். அது தவறு. அதேபோல சர்க்காரியா கமிஷன் மூலம் எந்த ஒரு குற்றச்சாட்டும் நிரூபிக்காதப்போது அதைப் பற்றி பேசியது தவறு.

எனவே இதையெல்லாம் சபைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். ஆனால் சபாநாயகர் நீக்க மறுத்துவிட்டார். நடுநிலையாக செயல்பட்ட சபாநாயகர் இரண்டு நாட்களாக சர்வாதிகாரிபோல் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்" என்று கூறியிருக்கிறார்.

"மூன்று கோப்புகள் இருப்பதாக முதல்வர் சொன்னார், ஏன் அதைப் பற்றி பேசவில்லை? சம்மந்தமே.!" - பெ.சண்முகம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் சட்டமன்ற செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார். "சட்டமன்றம் சண்டைமன்றமாக மாறிக்கொண்டிருக்கிறது. ஆளுங்கட்சி எதிர்க்கட்சி... மேலும் பார்க்க

"தவெக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் சிபிஎம் பங்கேற்காது"- பெ.சண்முகம்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நாளை (செப்.9) கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என அக்கட்சியின் மாநில செயலாளர் சி.பி சண்ம... மேலும் பார்க்க

'சாப்பாட்டுல உப்பை குறைங்க!' - சட்டமன்றத்தில் புதிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் அருண்ராஜ்

சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாள் கூட்டம் நடந்து வருகிறது. இதில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் 'உப்புக் குறைப்பு' என ஒரு முக்கியமான திட்டத்தை அறிவித்திருந்தார்.அமைச்சர் அருண்... மேலும் பார்க்க

``தவெக கூட்டணிக் கட்சி கூட்டத்துக்கு போகமாட்டோம்; எந்தக் கூட்டணியிலும் இல்லை" - CPIM கே.பாலகிருஷ்ணன்

சிபிஐஎம் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``நாங்கள் அமைச்சரவையில் சேரவில்லை. எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் மிகத் தெ... மேலும் பார்க்க

'வெள்ளை சீருடை போலீஸ்; ஒரு நாளுக்கு 100 ரூபாய் படி.!' - யார் இந்த அவைக்காவலர்கள்?

திமுக உறுப்பினர்கள் சபாநாயகரின் இருக்கையை சூழ்ந்து கோஷம் போட்டதால் அவைக்காவலர்களால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். இந்த அவைக்காவலர்கள் என்பவர்கள் யார்?அவைக் காவலர்கள்அவை எப்போதுமே சுமூகம... மேலும் பார்க்க

ஒன்றரை மணி கெடு; குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்ட திமுக MLAக்கள்!-சபாநாயகரின் கோபத்துக்கு காரணம் என்ன?

சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாள் கூட்டம் இன்று நடந்து வருகிறது. இந்நிலையில் அவை தொடங்கிய 45 நிமிடத்தில் அமளியில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏக்களை அவைக்காவலர்களை அழைத்து குண்டுக்கட்டாக வெள... மேலும் பார்க்க