செய்திகள் :

Sardar 2: "நல்ல பெயர் வாங்க அண்ணன் சூர்யாவை மாட்டிவிடுவேன்" - கார்த்தி ஜாலி டாக்

post image

கார்த்தி நடித்திருக்கும் 'சர்தார் 2' படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

பி.எஸ். மித்ரன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், ரஜிஷா விஜயன், ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

சர்தார் 2 படத்தில்...
சர்தார் 2 படத்தில்...

இப்படத்தின் புரமோஷனுக்காக தெலுங்கில் அளித்த பேட்டி ஒன்றில், தன்னுடைய சகோதரர் சூர்யாவை தந்தை சிவகுமாரிடம் சிக்க வைத்தது குறித்து கார்த்தி பகிர்ந்திருக்கிறார்.

கார்த்தி, "நான் 12-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது, இரவு முழுவதும் உட்கார்ந்து படித்துக்கொண்டிருப்பேன். படிக்காமல் இருந்தாலும்கூட, என் கையில் புத்தகத்தை எப்போதும் வைத்திருப்பேன்.

வீட்டில் நான் நல்லவன் என்கிற தோற்றத்தை உருவாக்க அப்படிச் செய்துகொண்டிருப்பேன் (சிரித்துக்கொண்டே...). அப்போது, சூர்யா அண்ணன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார்.

தினமும் படம் பார்க்கச் செல்வது, நண்பர்களுடன் செல்வது என எப்போதும் சுற்றிக்கொண்டேதான் இருப்பார். அப்போது, 'எங்கு சுற்றினாலும், எங்கு சென்றாலும் இரவில் வீட்டிற்கு வந்துவிட வேண்டும்' என எங்களின் தந்தை கண்டிஷன் போட்டுவிட்டார்.

Sardar 2 - கார்த்தி
Sardar 2 - கார்த்தி

இரவு வெளியே தங்குவதை அவர் அனுமதிக்கமாட்டார். வீட்டின் கதவுகள் இரவு 12 மணிக்குப் பூட்டப்படும். நான் 12 மணி வரை விழித்துத்தான் இருப்பேன்.

சூர்யா அண்ணா வந்து கதவைத் திறப்பார். அப்போது சத்தம் கேட்டதும் உடனடியாக அண்ணனை அப்பாவிடம் மாட்டிவிட்டுவிடுவேன்.

பிறகு என் அப்பா சென்று, என் அண்ணனைத் திட்டிக்கொண்டிருப்பார். முதலில் அப்பாவாகவே தூக்கத்திலிருந்து எழுந்து வந்து தன்னைத் திட்டுவதாக அண்ணா நினைத்துக்கொண்டிருந்தார்.

சில நாட்களுக்குப் பிறகுதான், அவரைச் சிக்க வைத்தது நான்தான் என்பது அவருக்குத் தெரியவந்தது" எனப் பகிர்ந்திருக்கிறார்.

எந்திரன் : தகர்க்கப்பட்ட எல்லைகள்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 22

`சினி'ஸ்கோப் 22எந்திரன்2000க்குப் பிறகு சுமார் 10 வருடங்கள், இந்தியாவின் பெரும்பகுதி சினிமா மார்க்கெட்டை தன்வசம் வைத்திருக்கும் இந்தி சினிமா, காதல் படங்களையும், சிறிய அளவு ஸ்பை ஆக்‌ஷன் படங்களையும் 20 ... மேலும் பார்க்க

என்ன விலை: ``என் நடிப்பை பார்த்து நிமிஷா சஜயன் எனக்கு முத்தம் கொடுத்தாங்க" - நடிகர் கருணாஸ்

சஜீவ் பழூர் இயக்கத்தில் நிமிஷா சஜயன், கருணாஸ் நடித்த ‘என்ன விலை’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகர் கருணாஸ், ``25 வருஷத்துக்கு முன்னாடி, 200... மேலும் பார்க்க

Yuvan Shankar Raja: 'மீண்டும் அந்த OG கூட்டணிகள்' - எதிர்பார்ப்பைக் கூட்டம் யுவன் லைன் அப்!

முன்னணி இயக்குநர்களின் திரைப்படங்கள், புதுமுக இயக்குநர்களுடன் கூட்டணி என யுவன் அடுத்தடுத்து பரபரப்பான லைன்அப்களை வைத்திருக்கிறார். அப்படங்களும் அடுத்தடுத்து ரிலீஸுக்குத் தயாராகிவருகின்றன. அந்த லைன்அப்... மேலும் பார்க்க

Mani Ratnam: 'நீ இஞ்சி, நான் வெல்லம்!' - ஒளிப்பதிவாளரை மாற்றிய மணி ரத்னம் - 'இஞ்சி வெல்லம்' அப்டேட்!

'தக் லைஃப்' படத்திற்குப் பிறகு மணி ரத்னம் இயக்கும் படத்தின் தலைப்பை இன்று அறிவித்திருக்கிறார்கள். விஜய் சேதுபதி, சாய் பல்லவி ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொ... மேலும் பார்க்க

Ajith: ''பில்லா 2' படத்தை நான் இயக்காதது ஏன்?' - இயக்குநர் விஷ்ணுவரதன் விளக்கம்

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் குமாரின் 'பில்லா', 'ஆரம்பம்' போன்ற ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குநர் விஷ்ணுவர்தன். 'பில்லா' படத்தின் வெற்றிக்குப் பிறகு, அதன் இரண்டாம் பாகமான 'பில்லா 2' திரைப்படத்தையும் ... மேலும் பார்க்க

Mandaadi: ``10 வயது சிறுவனிடம் கேட்டால்கூட சொல்கிறான்; ஆரோக்கியமான மாற்றம்" - அரசியல் குறித்து சூரி

விடுதலை, கருடன், மாமன் ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ள புதிய படம் 'மண்டாடி'. இப்படத்தை, இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். நாகையைச் சேர்ந்த மீனவர்களையும், ... மேலும் பார்க்க