செய்திகள் :

முதல் நாளிலேயே களமிறங்கிய திமுக : இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் யார் யார்?

post image

தமிழகத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

அதன்படி, இவ்விரு தொகுதிகளுக்கும் அக்டோபர் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அக்டோபர் 9-ம் தேதி, பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தி.மு.க சட்டத்துறை இணைச்செயலாளர் பரந்தாமன்
தி.மு.க சட்டத்துறை இணைச்செயலாளர் பரந்தாமன்

இடைத்தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து போட்டியிட விரும்புபவர்கள் 3 நாள்களில் (செப்8 முதல் 10 வரை) விருப்பமனு அளிக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக தற்போது அறிவித்திருக்கிறது. அதன்படி மதுராந்தகத்தில் திமுக சட்டத்துறை செயலர் பரந்தாமனும், தாராபுரத்தில் வழக்கறிஞர் சுகன்யா ஆகியோரும் போட்டியிடுவதாக திமுக அறிவித்திருக்கிறது.

வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கும் நிலையில் முதல் நாளிலேயே வேட்பாளரை அறிவித்துள்ளது திமுக.!

முதல்வர் விஜய் vs எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி : `ஹீரோ - வில்லன் ஆட்டம் ஆடும் இடமா சட்டமன்றம்?'

சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் 28 நாட்களாக நடந்து முடிந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக 170 மணி நேரத்துக்கு அவை நிகழ்வுகள் நடந்திருக்கிறது. இதில், அவையின் மையமாக இருந்த முதல்வர் விஜய் எதிர்க்கட்சித் த... மேலும் பார்க்க

"பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் வேண்டாம், ஏன்னா.!" - சிக்கலை விளக்கிய அன்புமணி ராமதாஸ்

தமிழக சட்டமன்றத்தில் சில நாட்களுக்கு முன்பு 110 விதியின் கீழ், 1,200 கோடி ரூபாய் செலவில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார். தற்போது அத... மேலும் பார்க்க

அமெரிக்காவின் நீர்மூழ்கி ட்ரோனை கைப்பற்றிய ஈரான்! - பதட்டத்தில் ஹார்மூஸ் ஜலசந்தி

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி மாதத்தில் தொடங்கி நடத்திய தாக்குதல் ஒரு முறை முடிவுக்கு வந்துவிட்ட போதிலும், ஹார்மூஸ் ஜலசந்திக்காக அமெரிக்காவும், ஈரானும் மீண்டும் மீண்டும் ஹார்மூஸ் ... மேலும் பார்க்க

சேதமடைந்த வீட்டில் சிரமப்பட்ட மாற்றுத்திறனாளி விஜய் ரசிகர்; வீட்டைச் சீரமைத்து தந்த தவெக எம்.எல்.ஏ

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிக்கதாசம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கரட்டு மேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் பழனிச்சாமி- சகுந்தலா தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒருமகன் இருக்கின்றனர். மகன் விக்... மேலும் பார்க்க

"மகள் மூலம் ரூ.3.28 கோடி லஞ்சம் பெற்றார்" - பினராயி விஜயன் மீது வழக்குப் பதிய டிஜிபி-க்கு ED கடிதம்

கேரள மாநிலம் ​கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டைல் லிமிடெட் (சி.எம்.ஆர்.எல்) என்ற தனியார் தாது மணல் நிறுவனம், தங்களுக்கு தகவல் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கியதாகக் கூறி பினராயி விஜயனின் மகள் வீணாவின் ‘எக்ஸாலாஜ... மேலும் பார்க்க