செய்திகள் :

BRICS மாநாடு: இந்தியா வரும் ஜி ஜின்பிங், புதின், ஈரான் அதிபர் மற்றும் இன்னும் பலர் - ஏன் முக்கியம்?

post image

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பே பிரிக்ஸ்.

இந்த ஆண்டு பிரிக்ஸின் தலைமை சுழற்சி முறையில் இந்தியாவிற்கு வந்துள்ளது. இதையொட்டி வருகிற 12, 13 தேதிகளில் இந்தியா புதுடெல்லியில் பிரிக்ஸ் மாநாடு நடக்கவுள்ளது.

> சீன அதிபர் ஷி ஜின்பிங்,

> ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்,

> தென்னாப்பிரிக்கா அதிபர் சிரில் ரமபோசா,

> ஈரான் அதிபர் மசூத் பெஜெஷ்கியான்,

மோடி - ஜி ஜின்பிங்
மோடி - ஜி ஜின்பிங்

> எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி,

> எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது,

> இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியாந்தோ,

> ஐக்கிய அரபு அமீரகம், அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான்,

> பிரேசில் வெளியுறவுத் தலைவர் மௌரோ வியெய்ரா.

இவர்கள் பிரிக்ஸின் உறுப்பு நாடுகளிலிருந்து டெல்லியில் நடக்கவிருக்கும் மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கும் தலைவர்களின் லிஸ்ட்.

இதைத் தாண்டி, இன்னும் பல நாடுகளிலிருந்து தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

இந்தப் பிரிக்ஸ் மாநாடு மிகவும் முக்கியமான நேரத்தில் நடைபெறுகிறது.

ஈரான் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. கூடவே, ஈரான் மீது பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளது அமெரிக்கா. ஆனால், இந்தப் பொருளாதாரத் தடைகளுக்கு எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளது சீனா.

ஈரானுக்கு ரஷ்யா உதவுவதாக அமெரிக்காவும், மத்திய கிழக்கு நாடுகளும் குற்றம் சாட்டுகின்றன. ஆக, இந்த மூன்று நாடுகளின் அதிபர்களும் இந்த மாநாட்டில் ஒன்றாகக் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.

மோடி - புதின்
மோடி - புதின்

இன்னொரு பக்கம், ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடப்பட்டுள்ளதால், எண்ணெய் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதைச் சமாளிக்க ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது இந்தியா.

மேலும், ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தத்தை நோக்கி நகர்வதுபோலத் தெரிகிறது.

அடுத்ததாக, 2019-ம் ஆண்டுக்குப் பிறகு, இந்தியாவிற்கு வருகிறார் ஜி ஜின்பிங். இது இந்தியா-சீனா உறவில் முக்கிய முன்னேற்றத்தை ஏற்படுத்தலாம்.

இப்படிப் பல்வேறு முக்கிய உலகச் சூழலுக்கு இடையில் இந்தியாவின் தலைமையின் கீழ், இந்தியாவில் பிரிக்ஸ் மாநாடு நடக்கிறது.!

"சுயநல அரசியல் செய்துவரும் சீமான், நா.த.க-வின் சர்வாதிகாரி!" - கொதிக்கும் மு.களஞ்சியம்

நாம் தமிழர் கட்சியில் பயணித்துவந்த மு.களஞ்சியம், அண்மையில் அக்கட்சியிலிருந்து விலகினார். தொடர்ந்து தனது விலகலுக்கான காரணம் குறித்து அறிக்கையும் வெளியிட்டிருந்தார். ஆனாலும், வேறொரு கட்சியில் இணையாமலும்... மேலும் பார்க்க

'புதின் முயற்சி, தென்னாப்பிரிக்கா என்ட்ரி, மன்மோகன் சிங் யோசனை' - 'BRICS' கதையைப் பகிர்ந்த காங்கிரஸ்

வருகிற செப்டம்பர் 12, 13 தேதிகளில், BRICS மாநாடு புதுடெல்லியில் நடக்கவிருக்கிறது. இந்த ஆண்டு மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்துகிறது. இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் உள்ளி... மேலும் பார்க்க

``ஆதவ் அர்ஜுனா முதல்வராகிவிடக் கூடாது என்ற பயத்தில்..." - முதல்வர் விஜய்யைச் சாடும் அப்பாவு

தமிழக முதல்வர் விஜய் இன்றிரவு லண்டனுக்குச் செல்லவிருக்கிறார். ஆனால், லண்டனில் அரசு முறையாக முதல்வர் யாரையெல்லாம் சந்திக்கிறார் என எந்தத் தகவலையும் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த நிலை... மேலும் பார்க்க

மிசா: `ஷா கமிஷன் அறிக்கை'; கைதிகள் பட்டியலில் `மிஸ்'ஸான ஸ்டாலின் பெயர் - ஏன்... என்னதான் நடந்தது?

தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் பதிலுரையின் போது, முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் குறித்தும், அவர் மிசா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட விவகாரம் குறித்தும் பேசினார். அப்போது அவரின் உடல்மொழி வி... மேலும் பார்க்க

திராவிடக் கட்சிகளின் கோட்டைகளில் `விசில்' சவால் - மதுராந்தகம் தாராபுரம் தொகுதிகளின் தேர்தல் வரலாறு!

செங்கல்பட்டு மாவட்டத்தின் மதுராந்தகம் (தனி), திருப்பூர் மாவட்டத்தின் தாராபுரம் (தனி) ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிற... மேலும் பார்க்க

"எங்கள் கட்சியை வெற்றி பெற செய்தால் $5,000 தருகிறேன்" - அமெரிக்க மக்களுக்கு ட்ரம்ப் தூண்டில்!

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் காங்கிரஸ் தேர்தல் வரவுள்ளது. காங்கிரஸ் என்பது அமெரிக்காவின் நாடாளுமன்றம். இந்தத் தேர்தலை ‘மிட்-டேர்ம் தேர்தல்’ என்று கூறுவார்கள். பெரும்பான்மை வேண்டும் இதுவரை அமெரிக... மேலும் பார்க்க