செய்திகள் :

"எங்கள் கட்சியை வெற்றி பெற செய்தால் $5,000 தருகிறேன்" - அமெரிக்க மக்களுக்கு ட்ரம்ப் தூண்டில்!

post image

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் காங்கிரஸ் தேர்தல் வரவுள்ளது. காங்கிரஸ் என்பது அமெரிக்காவின் நாடாளுமன்றம்.

இந்தத் தேர்தலை ‘மிட்-டேர்ம் தேர்தல்’ என்று கூறுவார்கள்.

பெரும்பான்மை வேண்டும்

இதுவரை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொண்டு வந்த சட்டங்கள் எளிதாக நிறைவேறி வந்தன. அதற்குக் காரணம், அமெரிக்க காங்கிரஸில் ட்ரம்பின் குடியரசுக் கட்சிதான் பெரும்பான்மையாக இருந்தது.

மீண்டும் ட்ரம்ப் இதே பிடியைத் தன் கையில் வைத்திருக்க வேண்டுமானால், வருகிற நவம்பர் தேர்தலை குடியரசுக் கட்சி வெற்றி பெற்றாக வேண்டும்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

ஈரான் போர்

ஆனால், அதற்குத் தடையாக ‘ஈரான் போர்’ வந்து நிற்கிறது.

பிப்ரவரி கடைசித் தேதியில் தொடங்கிய ஈரான் போர் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

இந்தப் போரால் உலக அளவில் எண்ணெய் சந்தை பாதிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு அமெரிக்காவும் விதிவிலக்கல்ல. அமெரிக்காவில் பெட்ரோல் விலை அதிகரித்திருக்கிறது... மேலும், இந்தப் போரால் அமெரிக்காவின் கையிருப்பு ஆயுதங்கள் குறைகிறது... அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கு நெருக்கடி ஏற்படுகிறது என்று வேறு அமெரிக்க மக்களுக்கு அதிருப்தி இருந்து வருகிறது.

ட்ரம்ப் என்ன சொன்னார்?

இந்த அதிருப்தியைத் தாண்டி, இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சிப் பெரும்பான்மை பெற்றுவிட வேண்டும் என்று ட்ரம்ப் கணக்குப் போடுகிறார்.

இதற்காக நேற்று அமெரிக்க மக்களுக்குத் தூண்டில் ஒன்றை விரித்துள்ளார் ட்ரம்ப்.

நேற்று (செப்டம்பர் 9) நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ட்ரம்ப், “வருகிற தேர்தலில் மேல்சபை, கீழ்சபை என இரண்டிலும் குடியரசுக் கட்சியினர் வெற்றி பெற்றால், நம்முடைய அபரிவிதமான பொருளாதார வெற்றியால், அனைத்து (adult) அமெரிக்க குடிமக்களுக்கு 5,000 டாலர் டிவிடெண்டாக வழங்குவேன்” என்று கூறியிருக்கிறார்.

ட்ரம்பின் இந்த அறிவிப்பு டிவிடெண்ட் இல்லை... இது லஞ்சம் என்று சமூக லலைத்தளங்களில் சில அமெரிக்கர்கள் விமர்சித்து வருகின்றனர்.

திராவிடக் கட்சிகளின் கோட்டைகளில் `விசில்' சவால் - மதுராந்தகம் தாராபுரம் தொகுதிகளின் தேர்தல் வரலாறு!

செங்கல்பட்டு மாவட்டத்தின் மதுராந்தகம் (தனி), திருப்பூர் மாவட்டத்தின் தாராபுரம் (தனி) ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிற... மேலும் பார்க்க

'இடதுபக்கம் வீடு; வலதுபக்கம் கடற்கரை!' - முதல்வர் விஜய் டிக் அடித்த புதிய தலைமைச் செயலக ஸ்பாட்!

புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக பட்டினப்பாக்கம் போர்ஷோர் எஸ்டேட் இடத்தை தேர்வு செய்து, விரிவான திட்ட அறிக்கையை அளிக்க அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு.புதிய தலைமைச் செயலக ஸ்பாட்!1200 கோடி ர... மேலும் பார்க்க

மிசா: `அண்ணன் ஸ்டாலின், அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட தலைவர்; அதை யாரும் மறுக்க முடியாது!'- திருமா

சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் மிசா கைது குறித்து, முதல்வர் விஜய்-யின் செய்கை பரவலான விமர்சனம் பெற்ற நிலையில், அதற்கு வருத்தம் தெரிவித்திருந்தார். அந்த செய்கை குறித்து முன்னாள் முதல்வர் ஸ... மேலும் பார்க்க

CM Vijay: 'முதல்வரின் லண்டன் பயணம்; பரம ரகசியம் காக்கும் தமிழக அரசு!'

தமிழக முதல்வர் விஜய் இன்றிரவு லண்டனுக்கு செல்லவிருக்கிறார். ஆனால், முதல்வர் எதற்காக லண்டன் செல்கிறார்? லண்டனில் அரசு முறையாக முதல்வர் யாரையெல்லாம் சந்திக்கிறார் என எந்தத் தகவலையும் தமிழக அரசு அதிகாரப்... மேலும் பார்க்க

பிரதீப் ராஜ் கொலை: ``காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறதா?" - டிடிவி தினகரன்

கந்துவட்டிக் காரர்களின் தொல்லையால் தன் உயிருக்கு ஆபத்து இருக்கிறது எனவும், தன்னைக் காப்பாற்றும்படியும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் பிரதீப் ராஜ் (30).காவல்துறை கந்துவட்டிகாரர்களுக்கு ஆதரவா... மேலும் பார்க்க

'வி.எஸ்.பாபுவுக்கு சுவாசக்கருவி உதவியுடன் சிகிச்சை; லைனுக்கு வந்த சி.எம் விஜய்!' - முழு தகவல்

கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் எனத் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், வி.எஸ்.பாபு அனுமதிக்கப்பட்டி... மேலும் பார்க்க