செய்திகள் :

`விஏஓ-வுக்கு லஞ்சம் கொடுக்கணும், பிச்சை போடுங்க!' - தட்டுடன் வலம் வந்த கள்ளக்குறிச்சி விவசாயி

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூர்கோட்டை வருவாய் கிராமம், நொணைவாடி பகுதியைச் சேர்ந்த அப்துல் சலீம் ஷேக், பூர்வீகச் சொத்துப் பட்டாவில் தன்னுடைய பெயரை சேர்ப்பதற்காக எலவனாசூர்கோட்டை வருவாய் கிராம அலுவலகத்திற்குச் சென்றிருக்கிறார். அப்போது பட்டாவில் பெயர் சேர்ப்பதற்கு அங்கிருந்த வி.ஏ.ஓ, அவரிடம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

அதையடுத்து, `பூர்வீகச் சொத்துப் பட்டாவில் என்னுடைய பெயரை சேர்க்க வி.ஏ.ஓ லஞ்சம் கேட்கிறார். அவருக்கு லஞ்சம் கொடுக்க என்னிடம் பணம் இல்லை. அதனால் உங்களால் முடிந்த பணத்தை பிச்சையாகப் போடுங்கள். இப்படிக்கு ஏமாந்த தமிழன்' என்ற வாசகங்கள் எழுதப்பட்ட அட்டையுடன், உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் இன்று யாசகம் செய்தார். அதைக் கேட்ட பொதுமக்களும் தங்களால் முடிந்த தொகையை அவரது தட்டில் போட்டுவிட்டுச் சென்றனர்.

அப்துல் சலீம் ஷேக்கிடம் இது குறித்துக் கேட்டபோது, ``வருவாய்த்துறையில் இருக்கும் ஒருசில அதிகாரிகள் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்காமல் எந்த ஒரு வேலையையும் செய்வதில்லை. மக்களிடம் பிச்சையைப் போல லஞ்சம் வாங்குகிறார்கள். நான் ஒரு விவசாயி. நான் முறைகேடாக என் பெயரைச் சேர்க்கும்படி கூறவில்லை.

என்னுடைய பூர்வீகச் சொத்தில் என் பெயரை சேர்க்க வேண்டும் என்று உரிய சான்றிதழ்களை வைத்து மனு கொடுத்தேன். அதற்குத்தான் வி.ஏ.ஓ அசோக் குமார் என்னிடம் லஞ்சம் கேட்டார். அவர் லஞ்சம் கேட்ட ஆடியோ என்னிடம் இருக்கிறது. ஆனால், `உன்னால் என்ன செய்ய முடியுமோ செய். யாரிடம் போகனுமோ போ' என்று தைரியமாகச் சொல்கிறார். அதனால் வேறு வழியின்றி அவருக்கு லஞ்சம் கொடுக்க பிச்சை எடுக்கிறேன்" என்றார்.

`பொறுப்புணர்வுடன் முன்னெடுத்துச் செல்வேன்' - தவெக எம்.எல்.ஏ. கனிமொழிக்கு கூடுதல் பொறுப்பு!

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக த.வெ.க-வைச் சேர்ந்த கனிமொழி சந்தோஷ் இருக்கிறார். இந்த நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் தேர்வு செ... மேலும் பார்க்க

`வரலாற்றில் எவருக்கும் கிடைத்திராத ஒரு பேரதிசயத்தை தந்த தமிழக மக்களே நன்றி!'- முதல்வர் விஜய் அறிக்கை

தமிழ்நாடு, புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இதற்கு நன்றி தெரிவித்து தவெக-வின் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அறிக்கை ஒன... மேலும் பார்க்க

``நாடாளுமன்றம் கட்டவே ரூ.900 கோடி; சட்டமன்றம் கட்ட ரூ.1200 கோடியா?" - நயினார் நாகேந்திரன் கேள்வி!

பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நகேந்திரன் சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் பேசுகையில், ``சட்டமன்றத்தில் பொதுமக்கள... மேலும் பார்க்க

"சுயநல அரசியல் செய்துவரும் சீமான், நா.த.க-வின் சர்வாதிகாரி!" - கொதிக்கும் மு.களஞ்சியம்

நாம் தமிழர் கட்சியில் பயணித்துவந்த மு.களஞ்சியம், அண்மையில் அக்கட்சியிலிருந்து விலகினார். தொடர்ந்து தனது விலகலுக்கான காரணம் குறித்து அறிக்கையும் வெளியிட்டிருந்தார். ஆனாலும், வேறொரு கட்சியில் இணையாமலும்... மேலும் பார்க்க

BRICS மாநாடு: இந்தியா வரும் ஜி ஜின்பிங், புதின், ஈரான் அதிபர் மற்றும் இன்னும் பலர் - ஏன் முக்கியம்?

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பே பிரிக்ஸ். இந்த ஆண்டு பிரிக்ஸின் தலைமை சுழற்சி முறையில் இந்தியாவிற்கு வந்துள்ளது. இதையொட்டி வருகிற 12, 13 தேதிகளில் இந்தியா ப... மேலும் பார்க்க

'புதின் முயற்சி, தென்னாப்பிரிக்கா என்ட்ரி, மன்மோகன் சிங் யோசனை' - 'BRICS' கதையைப் பகிர்ந்த காங்கிரஸ்

வருகிற செப்டம்பர் 12, 13 தேதிகளில், BRICS மாநாடு புதுடெல்லியில் நடக்கவிருக்கிறது. இந்த ஆண்டு மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்துகிறது. இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் உள்ளி... மேலும் பார்க்க