செய்திகள் :

`பொறுப்புணர்வுடன் முன்னெடுத்துச் செல்வேன்' - தவெக எம்.எல்.ஏ. கனிமொழிக்கு கூடுதல் பொறுப்பு!

post image

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக த.வெ.க-வைச் சேர்ந்த கனிமொழி சந்தோஷ் இருக்கிறார். இந்த நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய பொறுப்பு வழங்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து கனிமொழி சந்தோஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக என்னைத் தேர்வு செய்து, கூடுதல் பொறுப்பு வழங்கிய முதலமைச்சர் விஜய், சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோருக்கு எனது மரியாதையுடன் கூடிய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எம்.எல்.ஏ கனிமொழி
எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்

ஜனநாயகத்தின் மாண்பை முன்னிறுத்தி செயல்படுவதற்கான மற்றுமொரு வாய்ப்பாக இந்தப் பொறுப்பை கருதுகிறேன். சட்ட விதிகள் தொடர்பான முக்கிய விவகாரங்களை பொறுப்புணர்வுடன் அணுகி, சட்டப்பேரவை செயல்பாடுகளின் சிறப்பை வலுப்படுத்தும் வகையில் எனது பங்களிப்பை வழங்குவேன். எனக்கு வழங்கப்பட்டுள்ள இந்தக் கூடுதல் பொறுப்பை முழு அர்ப்பணிப்புடனும், பொறுப்புணர்வுடனும் நிறைவேற்றி முன்னெடுத்துச் செல்வேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தலைமைச் செயலகம்: ``முதலமைச்சர் விஜய்யின் நோக்கம் இதுதான்" - அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டுவதற்கான அறிவிப்பு வெளியானதிலிருந்து எதிர்க்கட்சிகளும், தவெக-வின் கூட்டணியில் இருக்கும் சி.பி.ஐ உள்ளிட்ட இடதுசாரிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பட்டினப... மேலும் பார்க்க

`விஏஓ-வுக்கு லஞ்சம் கொடுக்கணும், பிச்சை போடுங்க!' - தட்டுடன் வலம் வந்த கள்ளக்குறிச்சி விவசாயி

கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூர்கோட்டை வருவாய் கிராமம், நொணைவாடி பகுதியைச் சேர்ந்த அப்துல் சலீம் ஷேக், பூர்வீகச் சொத்துப் பட்டாவில் தன்னுடைய பெயரை சேர்ப்பதற்காக எலவனாசூர்கோட்டை வருவாய் கிராம அலுவலகத... மேலும் பார்க்க

`வரலாற்றில் எவருக்கும் கிடைத்திராத ஒரு பேரதிசயத்தை தந்த தமிழக மக்களே நன்றி!'- முதல்வர் விஜய் அறிக்கை

தமிழ்நாடு, புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இதற்கு நன்றி தெரிவித்து தவெக-வின் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அறிக்கை ஒன... மேலும் பார்க்க

``நாடாளுமன்றம் கட்டவே ரூ.900 கோடி; சட்டமன்றம் கட்ட ரூ.1200 கோடியா?" - நயினார் நாகேந்திரன் கேள்வி!

பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நகேந்திரன் சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் பேசுகையில், ``சட்டமன்றத்தில் பொதுமக்கள... மேலும் பார்க்க

"சுயநல அரசியல் செய்துவரும் சீமான், நா.த.க-வின் சர்வாதிகாரி!" - கொதிக்கும் மு.களஞ்சியம்

நாம் தமிழர் கட்சியில் பயணித்துவந்த மு.களஞ்சியம், அண்மையில் அக்கட்சியிலிருந்து விலகினார். தொடர்ந்து தனது விலகலுக்கான காரணம் குறித்து அறிக்கையும் வெளியிட்டிருந்தார். ஆனாலும், வேறொரு கட்சியில் இணையாமலும்... மேலும் பார்க்க

BRICS மாநாடு: இந்தியா வரும் ஜி ஜின்பிங், புதின், ஈரான் அதிபர் மற்றும் இன்னும் பலர் - ஏன் முக்கியம்?

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பே பிரிக்ஸ். இந்த ஆண்டு பிரிக்ஸின் தலைமை சுழற்சி முறையில் இந்தியாவிற்கு வந்துள்ளது. இதையொட்டி வருகிற 12, 13 தேதிகளில் இந்தியா ப... மேலும் பார்க்க