செய்திகள் :

வேறொருவருடன் நெருக்கம்; விஷம் கொடுத்து மாணவியை கொன்று `ஸ்கெட்ச்' போட்ட பேராசிரியர் சிக்கியது எப்படி?

post image

தெலங்கானாவில் உள்ள நஸ்பூர் என்ற இடத்தில் இருக்கும் பால்டெக்னிக்கில் பேராசிரியராக இருப்பவர் நவீன் குமார். இவர் பணியாற்றிய பாலிடெக்னிக்கில் தந்திரா (20) என்ற மாணவி படித்து வந்தார். அவரும் நவீன் குமாரும் நெருங்கி பழகினர். பாலிடெக்னிக் முடித்த மாணவி இன்ஜினீயரிங் படிப்பதற்காக ஐதராபாத்துக்குச் சென்றார். அங்கு படித்தபோது ரவிகுமார் என்பவருடன் தந்திராவுக்கு தொடர்பு ஏற்பட்டது. இதனால் நவீன் குமாருடனான தொடர்பு தந்திராவுக்கு குறைந்தது.

அத்தோடு ரவிகுமாருடன் தந்திராவுக்கு தொடர்பு ஏற்பட்டது குறித்து நவீன் குமாருக்குத் தெரிய வந்தது. ரவிகுமாருடன் தந்திரா நெருங்கி பழகுவது நவீன் குமாரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதையடுத்து அவர்கள் இருவர் மீதும் நவீன் குமாருக்கு கடும் கோபம் ஏற்பட்டடு, தந்திராவை பழிவாங்க முடிவு செய்தார்.

Crime

நஸ்பூரில் தந்திரா தனது வீட்டிற்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை நவீன் குமார் காரில் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றார். பின்னர் ரவிகுமார் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து கட்டாயப்படுத்தி விஷம் குடிக்க வைத்ததாக தந்திராவை கட்டாயப்படுத்தி கடிதம் எழுத வைத்தார். பின்னர் தந்திராவிற்கு கட்டாயப்படுத்தி விஷம் கொடுத்து குடிக்க வைத்தார்.

அதன் பிறகு தந்திராவை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதை தாமதப்படுத்தி, தந்திராவின் போனை பயன்படுத்தி அவரது தந்தைக்கு இது குறித்து தகவல் கொடுத்தார். தந்திரா தற்கொலைக்கு முயன்றதாக நவீன் குமார் தெரிவித்தார். தந்திராவை அவரது தந்தை மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் சிகிச்சை பலனலிக்காமல் அடுத்த நாள் உயிரிழந்தார். போலீஸார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். கண்காணிப்பு கேமரா மற்றும் போன் பதிவுகளை ஆய்வுசெய்து நவீன் குமார் மற்றும் ரவிகுமாரை கைது செய்தனர். இருவரிடமும் விசாரித்தபோது உண்மையான குற்றவாளி நவீன் குமார் என்று தெரிய வந்தது. ரவிகுமாரை இதில் சிக்கவைக்க நவீன் குமார் முயன்றதும் தெரிய வந்தது.

ரூ.10,000 சம்பள பாக்கி; ரூ.150-க்கு பெட்ரோல் வாங்கி, ரூ.24 கோடி மதிப்பிலான பொருள்களை எரித்த தொழிலாளி

குஜராத்தில் உள்ள சூரத்தில் ஷ்யாம் சங்கினி ஜவுளி சந்தை என்கிற சந்தை இருக்கிறது.அங்கே உள்ள 639-ம் எண் கடையில், கடந்த ஏப்ரல் மாதம் வினோத் பண்டிட் சாவ்லே கணக்காளராகச் சேர்ந்துள்ளார். ஆனால், அந்த வேலை அவரு... மேலும் பார்க்க

சாதி பாகுபாட்டால் IIT Bombay மாணவர் தற்கொலை; "அவனிடம் நான் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது" - தந்தை

ஐ.ஐ.டி பாம்பேயில் பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் மாணவர் சாஹில் வாகோடே.இரண்டாம் ஆண்டு மிட் செமஸ்டர் தேர்வின்போது, ChatGPT பயன்படுத்தி தேர்வறையில் பேராசிரியரிடம் இவர் மாட்டியதாகக் கூறப்படுகிறது.... மேலும் பார்க்க

தீய சக்தியை விரட்ட சடங்கு; பூசாரிகளைச் சுட்டுக்கொன்ற கணவன்; மனைவி, மகனுக்கு நேர்ந்த கொடூரம்

உத்தரப் பிரதேச மாநிலம் ஆசம்கர் நகரைச் சேர்ந்த அரவிந்த் சிங் என்பவர் மாலை 6 மணியளவில் வீடு திரும்பியபோது, ​​அவரது மனைவி பபிதா சிங் (32), பூசாரிகள் மகேந்திர பதக் (60) மற்றும் அகிலேஷ் மிஸ்ரா (50) ஆகிய இர... மேலும் பார்க்க

சேகர் ரெட்டி வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் திருட்டு; பணிப்பெண்கள் கைது; நடந்தது என்ன?

வேலூர் மாவட்டம், காட்பாடி உட்கோட்டத்துக்கு உட்பட்ட விருதம்பட்டு காவல் நிலையத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீடு உள்ளது. இந்த வீட்டில் நம்பத் தகுந்த பணியாட்... மேலும் பார்க்க

TVK: வார்டு செயலாளர் பதவி பறிப்பு; தற்கொலை செய்த தவெக நிர்வாகி; மாவட்ட செயலாளர் மீது மனைவி புகார்

ராமேஸ்வரம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பரந்தாமன். முன்னாள் ராணுவ வீரரான இவர் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின் வெளிநாடு சென்று வேலை பார்த்து வந்தார். இவருக்கு தேவகி என்ற மனைவியும், இரு குழந்தை... மேலும் பார்க்க

திடீர் என்ட்ரி கொடுத்த விஜிலென்ஸ்; ரூ.1,45,000 பணத்துடன் ஓட்டம் பிடித்த ஜீப் டிரைவர்; என்ன நடந்தது?

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சி அலுவலத்தில் நேற்று மாலை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி தலைமையில்‌ ஆய்வாளர் உள்ளிட்ட 10 போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நகராட்சியின் அனைத்துக் கதவுகளையும் ... மேலும் பார்க்க