செய்திகள் :

பெண்டிங்கில் சாய் `இசையில்' முதல் படம் `டு' பிரமாண்ட Pan India படம் - ராகவா லாரன்ஸின் பிஸி லைன்அப்!

post image

ஹாரர் படங்களின் மூலம் பேய்த்தனமான வெற்றிகளை குவித்து வந்த ராகவா லாரன்ஸ், அடுத்து புராண கதைகளின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். அதன் முன்னோட்டமாக 'மஹாவீர் கர்ணா'வை அறிவித்திருக்கிறார்கள்.

பூஜா ஹெக்டே

மகாபாரத இதிகாச நாயகர்களில் ஒருவரான மஹாவீர் கர்ணன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். தெலுங்கில் பல படங்களை இயக்கிய ரமேஷ் வர்மா இயக்கத்தில் 'மஹாவீர் கர்ணா' படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது. இப்போது ஒரே சமயத்தில் பல படங்களில் கவனம் செலுத்தி வருவதால், அவற்றின் அப்டேட்கள் குறித்து விசாரிக்கையில் கிடைத்த தகவல்கள் இனி...

'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்திற்குப் பிறகு லாரன்ஸின் லைன் அப் பலரையும் பிரமிக்க வைத்தது. 'அதிகாரம்', 'கால பைரவா', 'ஹன்டர்', 'பென்ஸ்', 'காஞ்சனா 4' என படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஜானராக மிரள வைத்தது. ஆனால், சில காரணங்களால் 'பென்ஸ்', 'காஞ்சனா 4' மட்டுமே டேக் ஆஃப் ஆனது. 'பென்ஸ்' படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரிக்கிறார். ரெமோ' பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இதில் லாரன்ஸுடன் நிவின்பாலியும், ரவிமோகனும் இணைந்து நடிக்கிறார்கள். பாண்டிச்சேரி, சென்னையில் அதன் படப்பிடிப்புகள் சில நாள்கள் நடந்திருக்கிறது. இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். அதாவது, சாய் அபயங்கர் இசையமைப்பாளராக முதலில் கமிட் ஆனது இந்த படத்தில் தான். ஆனால், இந்த படம் வேகம் எடுக்காமல் போனதால், சாய்யின் அடுத்தடுத்த படங்கள் ரிலீஸ்களில் முந்திவிட்டன. இப்போது சென்னையில் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. ரவிமோகனும் நடித்து வருகிறார். இந்த ஷெட்யூல் இன்னும் சில வாரங்கள் நீளும் என்கிறார்கள்.

படப்பிடிப்பில்..

அடுத்து ராகவலா லாரன்ஸ் இயக்கி நடித்து வரும் 'காஞ்சனா 4'ம் வேகம் எடுத்து வருகிறது. லாரன்ஸின் திரைப்பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் 'முனி'. அதன் வெற்றிக்கு பின் பேய் கதையை கையில் எடுத்தார். 'முனி 2'விற்கு 'காஞ்சனா' என டைட்டில் வைத்தனர். இப்போது 'காஞ்சனா 4' ஆக உருவாகி வருகிறது. இதில் பூஜா ஹெக்டே, நோரா பதேஹி என இரண்டு ஹீரோயின்கள் உள்ளனர். தவிர கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன், ஆனந்த்ராஜ், கிங்ஸ்லி, சாய்தீனா, கருடா ராம் என 'காஞ்சனா' டீம் ஆட்களும் இருக்கிறார்கள். பெரும் பகுதி படப்பிடிப்பு நடந்து முடிந்த சூழலில் தான் இன்ன்னொரு ஹீரோயினாக நயன்தாராவும் இணைகிறார் என்ற பேச்சு இருக்கிறது. அடுத்தாண்டு கோடை விடுமுறையை டார்க்கெட் ஆக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது.

ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா

'பென்ஸ்' அல்லது 'காஞ்சனா 4' படங்களின் அப்டேட்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்த்த சுழலில்தான் 'மஹாவீர் கர்ணா' அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. டோலிவுட் ரமேஷ் வர்மா இயக்கும் இப்படத்தில் பிரமாண்டமான சிறப்பு அரங்குகள், புராண காலத்தை கண்முன் நிறுத்தும் கலை வடிவமைப்புகள், அசர வைக்கும் போர்க்காட்சிகள் மற்றும் உலகத்தர VFX தொழில்நுட்பம் என அனைத்தும் சேர்ந்து, மொத்தத்தில் ஒரு பிரமிக்க வைக்கும் காட்சி விருந்தாக இப்படம் உருவாக்கப்பட இருக்கிறது என அறிவித்துள்ளனர். இந்த படம் குறித்து விசாரித்தால் லாரன்ஸின் முந்தைய படமான 'கால பைரவா' டீம் தான் 'மஹாவீர் கர்ணா'வையும் எடுக்க உள்ளது என்கிறார்கள். காரணம் அதன் இயக்குநரும் ரமேஷ் வர்மா தான்.

லாரன்ஸ்

இதன் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்குகிறது. இதுவும் அடுத்தாண்டு வெளியீடு தான். படத்திற்கு ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் இருப்பதை கருத்தில் கொண்டு இப்போதே டைட்டிலையும் ஃபர்ஸ்ட் லுக்கையும் அறிவித்துள்ளனர் என்கின்றனர். இது தவிர, அடுத்து ஒரு படத்தை இயக்கி நடிக்கவும் திட்டமிட்டுள்ளார் லாரன்ஸ். அதன் ஸ்கிரிப்ட் வேலைகளும் நிறைவடையும் தருவாயில் உள்ளனவாம்.

"இந்த சமயத்தில் விஜயகாந்த் சார் இருந்திருக்கலாம், அவர் இருந்திருந்தால்.!" - நடிகை அம்பிகா கண்ணீர்

நடிகை அம்பிகா மீது அவரது சகோதரியும் நடிகையுமான ராதா செக் மோசடி புகார் ஒன்றை சில முன்புகளுக்கு முன்பு கொடுத்திருந்தார். அந்தப் புகாரில் 46 கோடி ரூபாய் காசோலை மோசடி செய்ததாக அம்பிகா மீது குற்றச்சாட்டை ம... மேலும் பார்க்க

“பெரிய பெரிய ஹீரோக்கள் எல்லாம் தேடி அலையும் SUBJECT இது..!"- ‘மண்டாடி’ படக்குழுவைப் பாராட்டிய கமல்

நடிகர் சூரியின் 'மண்டாடி’ படத்தைப் பார்த்து படக்குழுவினரை நடிகர் கமல்ஹாசன் பாராட்டியிருக்கிறார். மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், சூரி, சத்யராஜ், மஹிமா நம்பியார், சுஹாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான '... மேலும் பார்க்க

The Dark Heaven: "அப்படி கமென்ட் பண்ணவங்களுக்கு இந்த ஆக்ஷன்ல பதில் சொல்ல விரும்புறேன்!" - பிரதீப்

இயக்குநர் பாலாஜி இயக்கத்தில், நடிகர்கள் சித்து, ரித்விகா, 'பிக் பாஸ்' தர்ஷிகா ஆகியோர் நடிப்பில் உருவான படம் 'தி டார்க் ஹெவன்'. இந்தப் படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. The Dark Heave... மேலும் பார்க்க

"இந்தத் தேடலில் நிறைய அவமானங்களைச் சந்தித்திருக்கிறேன்; தூக்கம் இல்லாத நாள்கள்..!"- சித்து எமோஷனல்

இயக்குநர் பாலாஜி இயக்கத்தில், நடிகர்கள் சித்து, ரித்விகா, 'பிக் பாஸ்' தர்ஷிகா ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'தி டார்க் ஹெவன்'. இந்தப் படத்தின் வெற்றி விழா நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்ற... மேலும் பார்க்க

இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டு சாதனை; ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கிடைத்த அரிய கௌரவம்!

ஒரு நாட்டுடைய பாராளுமன்ற மன்றத்தில் பிற நாட்டு இசைக் கலைஞருக்குச் சிறப்பு அங்கீகாரம் அளிக்கப்படுவது உலக வரலாற்றிலேயே மிக அரிதான நிகழ்வு. தனது முதல் படமான அன்னக்கிளி (1976) மூலம் திரையிசையில் காலடி எடு... மேலும் பார்க்க

Dorothy: "'டோரதி' என்ற பெயருக்கு இதான் அர்த்தம்" - கீர்த்தி சுரேஷ்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'டோரதி' திரைப்படம் வருகிற 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு இளை... மேலும் பார்க்க