செய்திகள் :

ECI `பல உத்தரவுகள் எங்கள் அனுமதி இன்றியே வெளியாகின்றன'- SIR விவகாரத்தில் தேர்தல் ஆணையர்கள் அதிருப்தி

post image

இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) நாடு முழுவதும் மேற்கொண்ட ‘சிறப்பு தீவிர திருத்தம்’ (SIR) நடவடிக்கையின்போது, சுமார் 1.3 கோடி வாக்காளர் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இது பெரிய பொது விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் உள்ளேயே அதிகாரிகளிடையே கடுமையான கருத்து வேறுபாடுகளும் மோதல்களும் நிலவுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்
தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்

தேர்தல் ஆணையாளர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகிய இருவரும், தங்களின் கவனத்திற்கு வராமலேயே பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவதாகக் கூறி, கடந்த 10 மாதங்களில் 14 முறை எழுத்துப்பூர்வமாகத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட இந்த ஆவணங்களில், ஆணையத்தின் நடைமுறைகள் சட்டவிரோதமாக மீறப்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முக்கியமாக, புதிய வாக்காளர்களைச் சேர்க்கும் 'படிவம் 6'-ல் விதிகளை மீறி மாற்றங்கள் செய்யப்பட்டது, வாக்காளர் பட்டியலின் தரவுத்தளத்தை (Database) மத்திய மயமாக்கி உள்ளூர் அதிகாரிகளின் அணுகலைக் குறைத்தது போன்ற குற்றச்சாட்டுகளை இவர்கள் எழுப்பியுள்ளனர். மேலும், மேற்கு வங்கத்தில் தகுதிபெற்ற வாக்காளர்களுக்கு எதிராக ஏன் மேல்முறையீடு செய்ய வேண்டும்? அப்படி ஆணையத்தின் சார்பில் மேல்முறையீடு செய்ய உத்தரவிட்டது யார்? அதற்கு யார் அதிகாரம் கொடுத்தது? எனக் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

தேர்தல் ஆணையர்கள்; சுக்பீர் சிங் சாந்து, ஞானேஷ்குமார், விவேக் ஜோஷி
தேர்தல் ஆணையர்கள்; சுக்பீர் சிங் சாந்து, ஞானேஷ்குமார், விவேக் ஜோஷி

மேலும், கோவாவில் மென்பொருள் கோளாறால் தகுதியான 97 வாக்காளர்கள் விடுபட்டதையும் இவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அரசியலமைப்புச் சட்டப்படி, தேர்தல் ஆணையத்தின் அனைத்து முடிவுகளும் அனைத்து ஆணையர்களின் ஒருமனதான ஒப்புதலுடனே எடுக்கப்பட வேண்டும். ஆனால், பல உத்தரவுகள் தங்கள் அனுமதி இன்றியே வெளியாகின்றன என இரு ஆணையர்களும் கவலை தெரிவித்துள்ளனர். நாட்டின் தேர்தல்களை நேர்மையாக நடத்த வேண்டிய உச்சபட்ச அமைப்பிற்குள் ஏற்பட்டுள்ள இந்த உட்கட்சிப் பூசல் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வழக்கு; ``தவெகவினருக்காக மட்டும் 'Compromise' செய்துகொள்கிறாரா முதல்வர்?" - டிடிவி தினகரன்

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களில் அடுத்தடுத்து சிக்கும் தவெக நிர்வாகிகள் குறித்து அமமுக தலைவர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டிருக்கு... மேலும் பார்க்க

GEM வீரமணி வழக்கு: ``அரசியல்வாதிகளையும் காவல்துறையையும் விசாரிக்க வேண்டும்" - அண்ணாமலை வலியுறுத்தல்

GEM கிரானைட்ஸ் உரிமையாலர் வீரமணி மீதான போக்சோ வழக்கில் ஆரம்பத்தில் தமிழ்நாடு காவல்துறை காட்டிய அலட்சியமும், நீதிமன்ற தலையீட்டிற்குப் பின் எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கைகளும் அதிகார வர்க்கத்தின் பின்னணிய... மேலும் பார்க்க

"IIT-களில் 45 மாணவர்கள் தற்கொலை; 62%க்கும் மேல் SC/ST/OBC மாணவர்கள்" - மாணிக்கம் தாகூர் கண்டனம்

"SC/ST/OBC மாணவர்களின் பாதுகாப்பு, சமத்துவம் மற்றும் கண்ணியத்தை உறுதி செய்ய மோடி அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?" என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியிருக்கிறார்.... மேலும் பார்க்க

"ரஷ்ய எண்ணெய்க்காக அமெரிக்கா இந்தியா மீது வரி விதிப்பதற்கு முன் யோசிக்க வேண்டும்.!" - JP Morgan CEO

அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழ்சபை ஒப்புதல், மேல்சபை ஒப்புதல், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கையெழுத்து எனத் தேவையான அனைத்து ஒப்புதலும் பெற்றுவிட்டது அமெரிக்காவின் ‘ரஷ்ய தடைச் சட்டம்’.இந்தச் சட்டத்தின் மூல... மேலும் பார்க்க

"ஒரு குழந்தையின் கனவு நனவானது போல உணர்கிறேன்.!" - நடிகை பார்வதி

ஷஹத் நிலம்பூர் இயக்கத்தில், பார்வதி திருவோத்து, மேத்யூ தாமஸ், உன்னிமாயா பிரசாத், சித்தார்த் பரதன் உள்ளிட்டோர் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகியிருக்கும் படம் 'பிரதம திருஷ்டியா குற்றக்கார்'. இப்படம் மக்... மேலும் பார்க்க

பாசிட்டிவ் ரூட்டில் ஈரான் போர் நிறுத்தம்? 'நவம்பருக்கு பின் ஒப்பந்தம்' - ட்ரம்ப் சொன்ன தகவல்கள்!

ஈரான் போர் அடுத்தடுத்து பாசிட்டிவ் நகர்வுகளை நோக்கி நகர்ந்து வருகிறது.“அமெரிக்கா எங்களின் 7 கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால் போர் விரைவில் முடியும்... ஹார்முஸ் நீர்ச்சந்தி திறக்கப்படும்” என்று ஈரான் தரப்பி... மேலும் பார்க்க