GEM வீரமணி வழக்கு: ``அரசியல்வாதிகளையும் காவல்துறையையும் விசாரிக்க வேண்டும்" - அண...
"IIT-களில் 45 மாணவர்கள் தற்கொலை; 62%க்கும் மேல் SC/ST/OBC மாணவர்கள்" - மாணிக்கம் தாகூர் கண்டனம்
"SC/ST/OBC மாணவர்களின் பாதுகாப்பு, சமத்துவம் மற்றும் கண்ணியத்தை உறுதி செய்ய மோடி அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?" என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், "நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களாகக் கருதப்படும் IIT-களில் கடந்த 5 ஆண்டுகளில் 53 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் 45 பேர் தற்கொலை செய்துகொண்டவர்கள். அவர்களில் 28 பேர் SC, ST, OBC சமூகங்களைச் சேர்ந்தவர்கள்- அதாவது 62%க்கும் மேல்.

இந்த உண்மையை நாடாளுமன்றத்தில் கேள்வியாக எழுப்பியபோது, 2025 டிசம்பர் 1-ம் தேதியே உயர்கல்வித் துறை IIT-களிடமிருந்து இந்தத் தகவல்களைக் கேட்டுப் பெற்றிருந்தது. ஆனால் டிசம்பர் 8-ம் தேதி நாடாளுமன்றத்தில் அந்தத் தரவு முன்வைக்கப்படவில்லை. (Hindustan Times)
இது வெறும் புள்ளிவிவரம் அல்ல. சமூகத்தின் விளிம்புநிலையிலிருந்து IIT போன்ற உயர்கல்வி நிறுவனங்களுக்கு வரும் மாணவர்களுக்குச் சமத்துவமான, பாதுகாப்பான, பாகுபாடற்ற கல்விச்சூழல் இருக்கிறதா? என்ற மிகப்பெரிய கேள்வி இது.
சமூகநீதி என்பது இடஒதுக்கீடு வழங்குவதோடு முடிந்துவிடுவதில்லை. அந்த வாய்ப்பைப் பெற்ற மாணவர்கள் மரியாதையுடனும் சமத்துவத்துடனும் வாழ்ந்து கல்வி கற்கும் சூழலை உருவாக்குவதும் அரசின் கடமை.
RSS சிந்தனையின் சமூகப் பாகுபாடுகளை எதிர்த்து, அரசியலமைப்பு உறுதி செய்த சமத்துவம், சமூகநீதி, சகோதரத்துவம் ஆகியவற்றை காங்கிரஸ் தொடர்ந்து பாதுகாக்கும்.
சாஹில் வாகோடே போன்ற ஒரு இளம் மாணவரின் மரணம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், உண்மைகளை மறைப்பதற்குப் பதிலாக அரசு வெளிப்படையாகப் பேச வேண்டும்.

சாஹிலின் மரணம் தொடர்பான காரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது; எந்த ஒரு காரணத்தையும் முன்கூட்டியே முடிவுசெய்யாமல், முழுமையான விசாரணை அவசியம். (The Indian Express)
SC/ST/OBC மாணவர்களின் பாதுகாப்பு, சமத்துவம் மற்றும் கண்ணியத்தை உறுதி செய்ய மோடி அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?
நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கான முழுமையான தரவையும், இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கான தெளிவான செயல்திட்டத்தையும் அரசு நாட்டிற்கு வழங்க வேண்டும். சமூகநீதியை மறைப்பதல்ல - பாதுகாப்பதே அரசின் கடமை" என்று தெரிவித்திருக்கிறார்.














