செய்திகள் :

`வேலை எல்லாம் போகல.!' - உயர் சம்பளத்தை விட்டு கனடாவிலிருந்து இந்தியா திரும்ப பெண் சொன்ன காரணம்!

post image

விசா பிரச்னையால் அமெரிக்காவில் இருந்து அதிகமான இந்தியர்கள் வேலையை விட்டுவிட்டு நாடு திரும்பிக்கொண்டிருக்கின்றனர். அமெரிக்கா மட்டுமல்லாது கனடாவை சேர்ந்த இந்தியர்களும் இதே போன்று இந்தியாவிற்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

கனடாவில் குடியுரிமை பெற்று கனடாவில் உள்ள டெலாய்ட் நிறுவனத்தில் மூத்த ஆலோசகராக பணியாற்றிய இந்திய பெண் ஒருவர் தனது உயர் சம்பளத்தை விட்டு விட்டு வேலையை ராஜினாமா செய்துவிட்டு கனடாவில் இருந்து இந்தியாவிற்கு திரும்பி இருக்கிறார்.

ப்ரீத்தி பிஸ்னிக் என்ற அப்பெண் தான் கனடாவில் வேலையை ராஜினாமா செய்துவிட்டு நாடு திரும்ப முடிவு செய்தது குறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் முதன்முதலில் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். உடனே எதற்காக வேலையை விட்டுவிட்டு செல்கிறாய் என்று கேள்வி கேட்டு அவருக்கு நண்பர்களும், தோழிகளும், உறவினர்களும் மெசேஜ் அனுப்ப ஆரம்பித்தனர்.

அதிகமானோர் விசா பிரச்னையா என்று கேள்வி எழுப்பி இருந்தனர்.

இதனால் அவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய நிலைக்கு பிரீத்தி தள்ளப்பட்டார். இது குறித்து பிரீத்தி விரிவான விளக்கம் ஒன்றை கொடுத்து காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் இந்தியாவுக்குத் திரும்புவது பணிநீக்கம் அல்லது விசா பிரச்சனை இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார். மாறாக, வயதான பெற்றோருடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்ற ஆசைதான் தன்னை இந்த முடிவை எடுக்க தூண்டியது என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரீத்தி தான் வெளியிட்டுள்ள காணொலிக்கு "நான் ஏன் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்கிறேன், டெலாய்ட்டில் அதிக ஊதியம் பெறும் வேலையை விட்டுவிட்டு சிறிது காலம் கனடாவை விட்டு வெளியேறுகிறேன். உங்களில் நிறைய பேர் என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள், அதைப் பற்றி ஒரு ரீல் செய்ய நினைத்தேன்" என்று தலைப்பிட்டுள்ளார்.

அவர் தனது காணொலியில், ``நான் ஏற்கனவே கனடாவில் குடியுரிமை பெற்று இருப்பதால் அங்கு எனக்கு விசா பிரச்னை எதுவும் ஏற்படவில்லை. நான் நாட்டை விட்டு வெளியேறும்படி கேட்கப்படவில்லை. அதோடு டெலாய்ட் நிறுவனம் என்னை வேலையை விட்டும் நீக்கவில்லை. உண்மையில், நான் வேலையை ராஜினாமா செய்ய வேண்டுமா என்று எனது மேலாளர் என்னிடம் கேட்டார். என்னுடன் பணிபுரிந்த குழுவை நினைக்கும் போது ஆச்சரியமாக இருந்தது.

எனது ஊதியம் நன்றாக இருந்தது. உண்மையில், கனடாவில் எனக்கு குறுகிய கால மற்றும் நீண்ட கால ரியல் எஸ்டேட் உள்ளது. இந்தியாவில் இருக்கும் எனது பெற்றோர் அருகில் இருக்க வேண்டும் என்று விரும்புவதால்தான் கனடாவில் இருந்து வெளியேறுகிறேன். ஏனென்றால் என் அப்பாவுக்கு இப்போது வயதாகிவிட்டது. மேலும் என் அம்மாவும் நடக்கும்போது சில பிரச்சனைகளை எதிர்கொள்கிறார், மேலும் அவருக்கு பார்வையில் சில பிரச்சனைகள் உள்ளன.

இரண்டாவது விஷயம், நான் கனடாவில் மிகவும் கடினமாக உழைத்து ஆறு வருடங்கள் ஆகிறது. இப்போது வீட்டில் வேலை செய்ததால் எனது எடையை 10 கிலோ வரை குறைக்க முடிந்தது. எனவே, நான் இப்போது கணினியில் வேலை செய்ய விரும்பவில்லை. நான் இப்போது இந்தியாவுக்குத் திரும்பிச் சென்று, என்னுடைய பெற்றோரின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்திற்காக வேலை செய்யப்போகிறேன். அதன் பிறகுதான் அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும். எனக்கு வேலை மற்றும் நாட்டை விட எனது பெற்றோர்தான் முக்கியம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

`மும்பை கடற்கரையோரம் 7 மாடி சொகுசு கட்டடம்' - ரூ.711 கோடிக்கு வாங்கிய `ஏஞ்சல் ஒன்' நிறுவன தலைவர்!

மும்பை ஜுகு, பாந்த்ரா, கோரேகாவ், அந்தேரி பகுதியில் ஆடம்பர குடியிருப்பு கட்டிடங்கள் அதிக அளவில் கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே தொழிலதிபர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் பல நூறு கோடி செலவில் அடுக்கு மாடி... மேலும் பார்க்க

`Views அதிகமாகணும்!’ - 9 வயது சிறுவன் செய்த Click… அப்பாவின் ₹1.13 கோடி காலி!

YouTube-ல் வீடியோ போட்டால் views வரணும், subscribers அதிகமாகணும் என்பதுதான் பல Content Creators-ன் ஆசை. ஆனால், அதற்காக ஒரு 9 வயது சிறுவன் செய்த காரியம் தற்போது இணையத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது!அமெ... மேலும் பார்க்க

"ஏன் வேறு வேலை இல்லையா என்று கேட்கிறார்கள்" - லாரி டிரைவராகப் பணியாற்றும் 25 வயது விமானப் பணிப்பெண்

இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் தான் விமான பணிப்பெண் வேலைக்குப் படித்து விட்டு லாரி ஓட்டிக்கொண்டிருக்கிறார். இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதான நேஹா தாக்கூருக்கு, சிறுவயதிலிருந்தே லாரி அவ... மேலும் பார்க்க

அவதூறு ரீல்ஸ்; செருப்புடன் மன்னிப்பு கேட்கவைத்த ராஜ் தாக்கரே கட்சியினர் - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி

மகாராஷ்டிராவில் நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே மற்றும் அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுபம் குறித்து புனேயை சேர்ந்த சோசியல் மீடியா பிரபலம் மகேஷ் மோடே சோசியல் மீடியாவில் அவதூறாக செய்தி வெளியிட்ட... மேலும் பார்க்க

ஹாலிவுட் வரை பிரபலம்... 108 ஆண்டு பழமையான ஒலிம்பியா காபி ஹவுஸ் லைசென்ஸ் சஸ்பெண்ட்! - ரெய்டில் ஷாக்

மகாராஷ்டிராவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கமிஷனராக ஐ.ஏ.எஸ். அதிகாரி துகாராம் முண்டே பதவியேற்ற பிறகு சுகாதாரமற்ற முறையில் இயங்கும் உணவகங்களுக்கு எதிராக தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகிறார்... மேலும் பார்க்க

'ஷாருக், அஜய் தேவ்கன்; உங்களுக்கு நட்சத்திரங்களாக இருக்கலாம்; ஆனால் சட்டத்தை மீறியவர்கள்' - துகாராம்

மகாராஷ்டிராவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கமிஷனராக இருப்பவர் துகாராம் முண்டே. இவர் மாநிலம் முழுவதும் உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு எதிராக எடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக பல உணவகங்... மேலும் பார்க்க