செய்திகள் :

ஹாலிவுட் வரை பிரபலம்... 108 ஆண்டு பழமையான ஒலிம்பியா காபி ஹவுஸ் லைசென்ஸ் சஸ்பெண்ட்! - ரெய்டில் ஷாக்

post image

மகாராஷ்டிராவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கமிஷனராக ஐ.ஏ.எஸ். அதிகாரி துகாராம் முண்டே பதவியேற்ற பிறகு சுகாதாரமற்ற முறையில் இயங்கும் உணவகங்களுக்கு எதிராக தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகிறார். சுகாதாரம் இல்லாமல் இயங்கிய உணவகங்களில் ரெய்டு நடத்தி அவற்றின் லைசென்ஸை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்து வருகிறார். மும்பையில் மாநகராட்சி நிர்வாகத்தால் நடத்தப்படும் நாயர் மருத்துவ்மனையில் செயல்பட்டு வந்த கேண்டீன் சுகாதாரம் இல்லாமல் இருந்ததால் அதன் லைசென்ஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா முழுவதும் 14 ரெஸ்டாரண்ட்கள், உணவகங்களின் உரிமங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.

தற்போது பண்டிகைக் காலம் என்பதால் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட ரெய்டில் ரூ.7,38,230 மதிப்புள்ள 2,813 கிலோ கலப்பட பால் மற்றும் பால் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டள்ளது. இவை மும்பை, கொங்கன், புனே, சத்ரபதி சம்பாஜிநகர் மற்றும் நாசிக் ஆகிய இடங்களில் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ரூ.4.66 லட்சம் மதிப்பிலான கலப்படம் மற்றும் தரமற்ற நமக்கீன், வெல்லம், பாக்கு, கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

கரப்பான் பூச்சி

108 ஆண்டு காபிஷாப் லைசென்ஸ் சஸ்பெண்ட்

வாடிக்கையாளர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் மும்பை கொலாபாவில் உள்ள 108 ஆண்டுகள் பழமையான ஒலிம்பியா காபி ஹவுஸில் அதிரடி சோதனை நடத்தப்பட்டதை தொடர்ந்து அதன் உரிமத்தை மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. உணவு சேமிப்பு பகுதிக்குள் சிறுநீர் கழிக்கும் இடம், கரப்பான் பூச்சிகள் மற்றும் ஈக்களின் தொற்று மற்றும் குளிர்சாதன பெட்டியில் இறைச்சி மற்றும் இரத்த எச்சங்கள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்ததை அடுத்து, அதிகாரிகள் இந்நடவடிக்கையை எடுத்தனர்.

ரெய்டு குறித்து துகாராம் முண்டே கூறுகையில்,''ஒலிம்பியா காபி ஹவுஸ் ஆய்வில் பல தீவிர உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதார மீறல்கள் காணப்பட்டது . உணவு சேமிப்பு பகுதியில் உள்ள சிறுநீர் கழிப்பிடத்தை தவிர, சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்தல் மற்றும் பாத்திரம் கழுவும் வசதிகள், உணவு நேரடியாக தரையில் கையாளப்படுவது, அசுத்தமான நீரை பயன்படுத்துதல் ஆகியவற்றை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். சைவம் மற்றும் அசைவ உணவு பொருட்கள் சரியாகப் பிரிக்கப்படவில்லை.

இந்த ஆண்டு ஜூலை மாதம், ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் கிறிஸ்டோபர் நோலன் மற்றும் நடிகர்கள் டாம் ஹாலண்ட் மற்றும் மாட் டாமன் ஆகியோர் மும்பையில் தங்களின் 'ஒடிஸி' திரைப்படத்தின் பிரீமியர் காட்சிக்கு முன்னதாக ஒலிம்பியா காபி ஹவுஸுக்கு சென்று மூவரும் பன் மாஸ்கா மற்றும் சில இனிப்புகளுடன் தேநீர் அருந்தினர் என்பது குறிப்பிடத்தாக்கது .

'ஷாருக், அஜய் தேவ்கன்; உங்களுக்கு நட்சத்திரங்களாக இருக்கலாம்; ஆனால் சட்டத்தை மீறியவர்கள்' - துகாராம்

மகாராஷ்டிராவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கமிஷனராக இருப்பவர் துகாராம் முண்டே. இவர் மாநிலம் முழுவதும் உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு எதிராக எடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக பல உணவகங்... மேலும் பார்க்க

'அஸ்ஸலாமு அலைக்கும்' என்று சொன்ன பெண் ஐ.பி.எஸ். அதிகாரி - இடமாற்றம் செய்த மேற்கு வங்க அரசு!

முஸ்லிம்கள் தங்களது முஸ்லிம் நண்பர்களை பார்க்கும் போது அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறுவது வழக்கம். அப்படி அழைத்து பெண் போலீஸ் அதிகாரி சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார். மேற்கு வங்கத்தில் கூடுதல் போலீஸ் கண்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: கையில் குழந்தை; தோளின் மீது விழுந்த பாம்பு; அருவியில் அலறிய மக்கள்! | video

அருவியில் குளிக்கவும், இயற்கையை ரசிக்கவும் சென்ற இடத்தில் திடீரென பாம்பு ஒன்று மேலிருந்து விழுந்தால் எப்படி இருக்கும்? அதுவும் கையில் குழந்தையை வைத்திருக்கும் ஒருவரின் தோளிலேயே விழுந்தால்?மகாராஷ்டிராவ... மேலும் பார்க்க

Donald Trump நடாலி ஹார்ப்பை முத்தமிட்டாரா? - வைரலான புகைப்படத்தின் உண்மை பின்னணி!

“ட்ரம்ப், நடாலி ஹார்ப்பை முத்தமிடுகிறார்...” – இந்தப் புகைப்படம்தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்க அதிபர் Donald Trump, அவருடைய Executive Assistant நடாலி ஹார்ப்பை கோல்ஃப் மைதானத... மேலும் பார்க்க

விநாயகருக்கு ஆரத்தி தட்டை மாற்றி சுற்றிய சல்மான்கான்; சரி செய்த சகோதரி அர்பிதா - பெண் தோழி பங்கேற்பு

மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. இவ்விழாவில் பாலிவுட் பிரபலங்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர். நடிகர் சல்மான் கான் சகோதரி அ... மேலும் பார்க்க

ஆதரவாளர்களுடன் மும்பை நோக்கி பேரணி; மீண்டும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் மனோஜ் ஜராங்கே!

மகாராஷ்டிராவில் மராத்தா இட ஒதுக்கீடு ஆர்வலர் மனோஜ் ஜராங்கே கடந்த மாதம் 29-ம் தேதியில் இருந்து ஜல்னாவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தார். மராத்தா மக்களுக்கு சாதிச்சான்று விரைந்து வழங்க வேண்டும் என... மேலும் பார்க்க