செய்திகள் :

அமெரிக்கா செல்லும் ஈரான் அதிபர் - எதற்கு? ட்ரம்ப் வைத்திருக்கும் 'மூன்று' ஆப்ஷன்கள்!

post image

இன்னும் ஆறு நாட்களில் ஈரான் போர் தொடங்கி ஏழு மாதங்கள் நிறைவடைந்துவிடும். ஆனால், இந்தப் போரின் முடிவு குறித்த எந்த நேர்மறையான முடிவும் இதுவரை எட்டப்படவில்லை.

இந்த நிலையில், அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியான் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரான் போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்காவிற்கு ஈரான் அதிபர் செல்வது இதுவே முதல்முறை. ஏன்... ஈரானின் அரசியல் பிரதிநிதியே அமெரிக்காவிற்குச் செல்வது இது முதல்முறை.

ட்ரம்ப்
ட்ரம்ப்

ட்ரம்பின் மூன்று ஆப்ஷன்கள்

இந்த நேரத்தில், ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திடம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு முக்கிய கருத்தைப் பகிர்ந்துள்ளார்.அது, “நான் இப்போது ‘முடிவு எடுக்கும்’ மோடில் இருக்கிறேன். விரைவில் அமெரிக்கா-ஈரான் போரில் மிகப்பெரிய விஷயங்கள் நடக்க உள்ளன.

ஈரான் போரில் மூன்று ஆப்ஷன்கள் தான் உள்ளன. ஒன்று ஈரானை முற்றிலும் அழிப்பது, அடுத்தது பொருளாதார ரீதியாக அவர்களை மிகவும் பாதிப்பது, கடைசியாக ஒப்பந்தம் போட்டுக்கொள்வது ஆகும்” என்று கூறியிருக்கிறார் ட்ரம்ப்.

மசூத் பெசேஷ்கியான் அமெரிக்கா வருவது குறித்துப் பேசும்போது, அவரை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று கூறியிருக்கிறார் ட்ரம்ப்.

'ரஷ்ய தடைச் சட்டத்திற்கு நன்றி; பல மாற்றங்கள் வரலாம்'- ட்ரம்பிடம் பேசிய பின் ஜெலன்ஸ்கி சொல்வது என்ன?

2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியது. இன்னும் அது தொடர்ந்துகொண்டிருக்கிறது.அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை பொருளாதாரத் தடை போன்ற நெருக்கடிகளை ரஷ்யாவிற்குக் கொடுத்தும்... மேலும் பார்க்க

`இன்னும் பழைய அரசாங்கத்தையே குறைச் சொல்லிக்கொண்டிருப்பதில் நியாயமில்லை' - விஜய்யை சாடிய எல்.முருகன்

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ``சென்னையில் நேற்று நான் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கொண்ட... மேலும் பார்க்க

``ஸ்டாலின், பி.டி. ஆர்... தோற்றார்களா அல்லது தோற்கடிக்கப்பட்டார்களா?" - நடிகர் பிரகாஷ் ராஜ்

த.வெ.க ஆட்சி சரியில்லை என்றால், நான் கேள்வி கேட்பேன் என நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். திருச்சியில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் பிரகாஷ் ராஜ், `` முன்ன... மேலும் பார்க்க

``தமிழ்நாட்டில் இப்போது பல பவர் சென்டர்கள் உருவாகிவிட்டன" - ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்

புதுச்சேரியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``புதுச்சேரியை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்ட கட்சி தற்ப... மேலும் பார்க்க

"தமிழ்நாடு, சர்க்கஸ் கும்பலிடம் மாட்டிக்கொண்டிருக்கிறது.!"- உதயநிதி ஸ்டாலின்

சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டிருக்கிறார். திருமண நிகழ்ச்சியில் பேசிய அவர், "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கரங்களை மென்மேலும் வலுப்படு... மேலும் பார்க்க