செய்திகள் :

"தமிழ்நாடு, சர்க்கஸ் கும்பலிடம் மாட்டிக்கொண்டிருக்கிறது.!"- உதயநிதி ஸ்டாலின்

post image

சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டிருக்கிறார்.

திருமண நிகழ்ச்சியில் பேசிய அவர், "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கரங்களை மென்மேலும் வலுப்படுத்துவோம்... என்றும் களத்தில் நின்று தமிழ்நாட்டு மக்களுக்காக உழைத்திடுவோம்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

திமுகவுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இருக்கும் உறவு, இன்று நேற்று உருவானது அல்ல. மறைந்த கண்ணியமிகு காயிதே மில்லத் காலத்தில் உருவான உறவு. இந்த உறவு நாளுக்கு நாள் வலிமையாகி கொண்டே போகிறது. இன்றைக்கு தமிழ்நாடு என்ன நிலைமையில் இருக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

திராவிட மாடல் ஆட்சியில் நல்ல நிலையில் இருந்த தமிழ்நாடு, தற்போது சர்க்கஸ் கும்பலிடம் மாட்டிக்கொண்டுள்ளது. சட்டம் ஒழுங்கு எந்த நிலையில் இருக்கிறது என்பது மக்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

நம் கழகத் தலைவர், “ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டி.. ஒன்னு மின்வெட்டு.. இன்னொன்னு அரிவாள் வெட்டு..” என்று கூறியதுபோலத் தான் தமிழ்நாடு இருக்கிறது. தாங்கள் ஆட்சிக்கு வந்துவிட்டோம் என்பதையே தவெகவினர் இன்னும் நம்பவில்லை.. எதற்கெடுத்தாலும் முந்தையை ஆட்சி மீது பழி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்" என்று பேசியிருக்கிறார்.

``தமிழ்நாட்டில் இப்போது பல பவர் சென்டர்கள் உருவாகிவிட்டன" - ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்

புதுச்சேரியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``புதுச்சேரியை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்ட கட்சி தற்ப... மேலும் பார்க்க

`3 மணிக்கே எழுந்து ஆய்வுக்குச் செல்கிறேன்; சின்னச்சின்ன பிரச்னைகளை...' - அமைச்சர் தமிழன் பார்த்திபன்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சரிவர பேருந்து வசதி செய்துதரவில்லை என்ற புகார் கடந்த சில தினங்களாக பரபர செய்திகளாயின.இந்தச் ச... மேலும் பார்க்க

"ஆதவ் அர்ஜூனா ஒரு வேடந்தாங்கல் பறவை" - எடப்பாடி பழனிசாமி சொல்வது என்ன?

சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில்‌ பேரறிஞர் அண்ணாவின் 118- வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், தாதகாப்பட்டியில் நேற்றிரவு நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ப... மேலும் பார்க்க

தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியல்: ``இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறுமா?" - கராத்தே தியாகராஜன் கேள்வி

தவெக ஆட்சி அமைத்ததற்குப் பிறகு அ.தி.மு.க-வின் எம்.எல்.ஏ-க்கள் சிலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்தனர். அதைத் தொடர்ந்து, அந்தத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்... மேலும் பார்க்க

`பிரதமர் மோடியை கிண்டல் செய்த ராகுல் காந்தி' பாஜக தலைவர்கள் கண்டனம்! - என்ன நடந்தது?

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் 'சத்ரோன் கி கூஞ்ச்' (மாணவர்களின் குரல்) என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், பிரதமர் மோடியை மறைமுகமாகக் குறிப்பிட்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் ஸ்டாண்டப் க... மேலும் பார்க்க

“முதல்வர், மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் மீண்டும் மீண்டும்...”- அன்புமணி காட்டம்!

சிப்காட், என்.எல்.சி சுரங்கத்திற்கு கூடுதல் நிலங்களை கையகப்படுத்த துடிப்பதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதுகுறித்து தவெக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், " கடலூர் மாவட்... மேலும் பார்க்க