செய்திகள் :

”டூவீலரில் 229 கிலோ மீட்டர், திருட்டு நகையில் ஜாலி டூர்”- செயின் பறித்த நண்பர்கள் சிக்கியது எப்படி?!

post image

தஞ்சாவூர் அருகே உள்ள மானோஜிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நிருபாமலர் இவரது கணவர் டாக்டர். கடந்த 8ம் தேதி மளிகை கடைக்கு சென்று விட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது, டூவீலரில் வந்த இருவர் நிருபாமலர் கழுத்தில் இருந்த 11 சவரன் தங்க செயினை பறித்துச் சென்றனர். தஞ்சாவூர், மருத்துவக்கல்லூரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்த இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்து நிருபாமலர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள்

தஞ்சாவூர் எஸ்.பி சுந்தரவதனம், குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் ஜெயந்தி தலைமையில் இதன் விசாரணை நடைபெற்றது. குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் தென்னரசு டீம் சிசிடிவி-யில் பதிவான காட்சிகளை அடிப்படையாக வைத்து செயின் பறிப்பில் ஈடுப்பட்ட குற்றவாளிகளை தேடினர். இதில் மதுரையைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகளான தனபாண்டி(27), சதீஷ்(28) ஆகிய இருவரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதை கண்டுபிடித்து போலீஸார் கைது செய்தனர். இருவரிடமும் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.

இது குறித்து உள்விவரம் அறிந்த போலீஸ் தரப்பில் பேசினோம், ``நிருபாமலரிடம் செயினை பறித்து விட்டு டூவீலரில் தப்பிச் சென்ற குற்றவாளிகள் சென்ற சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தோம். டூவீலரிலேயே திருச்சி, கரூர், திருப்பூர் வரை சென்றிருந்தனர். அதை வைத்து இருவரையும் நோட்டமிட்டு வந்தோம். திருப்பூரில் மட்டும் மூன்று வீடுகள் வாடகைக்கு எடுத்து மாறி மாறி தங்கி வந்துள்ளனர். மூன்று வீடுகளையும் கண்காணித்தோம். செயின் பறிப்பில் ஈடுபட்டவர்கள் இவர்கள் தான் என்பதை உறுதி செய்ததும் அந்த இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினோம்.

சதீஷ்

இதில் மதுரையைச் சேர்ந்த, போலீஸாரால் கண்காணிக்க கூடிய சரித்திர பதிவேடு குற்றவாளிகளான தனபாண்டி, சதீஷ் ஆகிய இருவரும் தான் இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தனர். அவர்களும் செயின் பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். தனபாண்டி, சதீஷ் இருவரும் நெருக்கமான நண்பர்கள். எப்போதும் ஒன்றாக இருப்பார்கள். ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு உள்ளே சென்று நகை, பணத்தை கொள்ளையடிப்பது, சாலையில் தனியாக செல்லும் பெண்களிடம் தங்க செயினை பறிப்பது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருவர் மீதும் பல வழக்குள் உள்ளன. தஞ்சாவூர் சம்பவத்தை செய்வதற்கு முன்பு கள்ளக்குறிச்சியில் பெண் டாக்டர் ஒருவரிடம் செயினை பறித்தனர். அப்போது அந்த பெண் டாக்டர் 50 மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டது அதிரச்செய்திருந்தது. இதையடுத்து அடுத்த சம்பவமாக தஞ்சாவூரில் செயின் பறிப்பை நிகழ்த்தியுள்ளனர். இதற்காக திருப்பூரில் இருந்து டூவீலரில் கிளம்பியவர்கள் காங்கேயம் நரப்பகுதி வரை வந்து விட்டு அந்த டூவீலரை ஸ்டாண்டில் போட்டு விட்டு வேறு டூவீலரில் கிளம்பி வந்து காரியத்தை செய்துள்ளனர். திரும்பி போகும் போதும் இதே முறையை கையாண்டுள்ளனர்.

தனபாண்டி

போலீஸ், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தால் சிக்காமல் இருக்க இப்படி ஸ்கெட்ச் போட்டுள்ளனர். நுணுக்கமாக ஆய்வு செய்து இதை கண்டு பிடித்து குற்றவாளிகளை நெருங்கினோம். கொள்ளையடிக்கும் பணத்தில் பல ஊர்களுக்கு சென்று ஜாலியாக இருப்பார்கள். பணம் தீர்ந்ததும் மீண்டும் கைவரிசை காட்டுவார்கள். இதுபோல் பல குற்றங்களை செய்து விட்டு பல மாவட்ட போலீஸாரிடம் சிக்காமல் டிமிக்கி கொடுத்து வந்தவர்களை தஞ்சாவூர் போலீஸ் டீம் கையும், களவுமாக கைது செய்துள்ளது. 17 வழக்குகளில் ஆஜராகாததால் நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகை, இரண்டு டூவீலர்கள், இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்" என்றனர்.

ஓசூர்: வழி கேட்பது போல் நடித்து பெண்களிடம் நகைப் பறிப்பு; சிக்கிய கர்நாடக தபால்காரர்!

காரில் வந்து வழிகேட்பது போல் நடித்து 4 பெண்களிடம் நகை பறித்த கர்நாடக மாநில தபால்காரர் கைது செய்யப்பட்ட சம்பவம், ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்க சங்கிலி பறிப்பு!கிருஷ்ணகிரி மாவட்டம் த... மேலும் பார்க்க

தொழிலதிபர் வீரமணி வழக்கு: ``20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த பாலியல் சுரண்டல்" - அதிர்ச்சி தகவல்!

பிரபல கிரானைட் தொழிலதிபர் ஆர். வீரமணி (85) சம்பந்தப்பட்ட போக்சோ (POCSO) வழக்கில், 2003-ம் ஆண்டுக்கும் முன்பிருந்தே பல சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் என்ற திடுக்கிடும் தகவல்... மேலும் பார்க்க

ChatGPT, ஏ.ஐ மூலம் தேர்வில் காப்பிடியத்த மும்பை ஐ.ஐ.டி மாணவர்: பிடிபட்டதால் விபரீத முடிவு!

மும்பை ஐ.ஐ.டியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர் சாஹில் வகோடே. எரிசக்தி அறிவியல் மற்றும் பொறியியல் துறையைச் சேர்ந்த சாஹில் வகோடே தேர்வின்போது விடைகளைக் கண்டரிய காப்பியடித்துள்ளார். அவர் இதற்காக தனது ம... மேலும் பார்க்க

புதுச்சேரி: பொய்ப் புகாரால் பெண்ணை பழிவாங்க நினைத்த முதியவர்! - போலீஸார் செய்த `சைலண்ட்’ சம்பவம்

புதுச்சேரி லாஸ்பேட்டை தாகூர் நகரைச் சேர்ந்தவர் கோபால். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஆர்.வி.ஜானகிராமனின் உதவியாளராகப் பணிபுரிந்த இவர், ஆட்சியாளர்கள், அரசு உயரதிகாரிகள், தனி நபர்கள் என அனைவரையும் விமர்சி... மேலும் பார்க்க

சேலம்: மீன் கடையில் நீர் காகம் இறைச்சி விற்பனை; அத்துமீறும் வேட்டை கும்பல்... அதிர்ச்சி பின்னணி!

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகில் உள்ள கோனேரிப்பட்டி அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஒரு மீன் கடையில் நீர் காகம் ( Cormorant) இறைச்சி விற்பனை செய்யப்பட்டு வருவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இ... மேலும் பார்க்க

9 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: `தோண்டத் தோண்ட கிளம்பும் பூதம்' - தொழிலதிபர் வீரமணி வழக்கு!

சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர் அளித்த ரகசிய புகாரின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவின் பாலியல் தடுப்புப் பிரிவு காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டது. புகார்தாரர் அளித்த பென்டிரைவை ஆய்வு செய்தபோது, ... மேலும் பார்க்க