செய்திகள் :

சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி காலமானார்; திரையுலகத்தினர் இரங்கல்!

post image

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகளான சாந்தி நாராயண சாமி இன்று அதிகாலை சென்னையில் காலமானார்.

மறைந்த சிவாஜி கணேசன்  - கமலாம்பாள் தம்பதிக்கு சாந்தி, தேன்மொழி, என இரு மகள்கள் மற்றும் நடிகர்கள் ராம்குமார், பிரபு என இரு மகன்கள். இவர்களில் சாந்திதான் மூத்தவர். முதல் பெண் குழந்தை என்பதால் சிவாஜிக்கு இவர் மீது எப்பவுமே கொஞ்சம் கூடுதல் பிரியம் உண்டு என்பார்கள்.

சென்னை அண்ணா சாலையில் சிவாஜி திறந்த தியேட்டருக்கு அதனாலேயே சாந்தி திரையரங்கம் என அவரது பெயரை வைத்தார்.

அதேபோல் தங்கள் வீட்டின் முதல் விசேஷம் என்பதால் சாந்தி – நாராயணசாமி ஜோடியின் திருமணத்தையும் மிக பிரமாண்டமாக நடத்தினார் சிவாஜி. காமராஜர், பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜி,.ஆர், பாலிவுட் ஹீரோக்கள், பாடகி லதா மங்கேஷ்கர் என பலரும் கலந்து கொண்டனர் அந்த திருமணத்தில். அண்ணாசாலையே போக்குவரத்தால் ஸ்தம்பித்த திருமணம் என்றால் மிகையில்லை.

சிவாஜி குடும்பம்

சிவாஜியின் மறைவுக்குப் பிறகு சகோதரிகள் இருவருக்கும் சகோதரர்கள் இருவருடனும் கருத்து வேறுபாடு எனச் செய்திகள் அடிபட்டு வந்த நிலையில் தற்சமயம் சிவாஜி ஆரம்பகாலத்தில் வாழ்ந்த பூர்வீக வீட்டில் வசித்து வந்தனர் சாந்தி தேன்மொழி குடும்பத்தினர்.

கடந்த சில தினங்களாக உடல்நலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு வந்த சாந்தி இன்று காலமாகி இருக்கிறார்,

சாந்தி மறைவுக்கு திரையுல பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

"என் பேரு புரோட்டா சூரி இல்ல..!"- நடிகர் சூரி விளக்கம்

'மண்டாடி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சூரி மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். " 'மண்டாடி' திரைப்படம் திரைக்கு வந்து இன்றுடன் 10 நாட்களை கடந்துவிட்டது என நினைக்கிறேன். ஹவுஸ... மேலும் பார்க்க

"குறும்படங்களுக்கான தளம் இது'' - இயக்குநர் பத்ரி வெங்கடேஷின் மகள் தீக்ஷாவின் முன்னெடுப்பு!

குறும்படங்கள் இன்று பல இயக்குநர்களுக்கு சினிமாவில் முகவரியை தேடி தருகிறது. தற்போது தீக்ஷா என்பவர் குறும்பட திரையிடல்களுக்காகவே, 'தி திரை ஆன்சம்பிள்' என்கிற பெயரில் பிரத்யேகமாக ஒரு தளத்தை உருவாக்கியிரு... மேலும் பார்க்க

"எனக்கு போன் பண்ணாரு; நான் 'அதை' எதிர்பார்க்கவே இல்ல" - முதல்வர் விஜய் குறித்து விஜய் சேதுபதி

தற்போது தமிழில் பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது.இந்த நிகழ்ச்சியின் வீக் எண்ட் எபிசோட் ஒன்றில், பிக்பாஸ் தமிழ் தொகுப்பாளர் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி நாற்காலி குறித்துப் பேசியிருந்த... மேலும் பார்க்க

The Dark Heaven Review: அமானுஷ்யம், மர்மப் புத்தகம், துப்பறியும் களம் - ஆனாலும் சொதப்புவது எங்கே?

25 வருடங்களுக்கு முன்பு நூலகத்தில் பணியாற்றிய தன் அப்பாவின் மரணத்துக்குக் காரணமாக இருந்த 'டார்க் ஹெவன்' புத்தகத்தைப் பற்றி அறிந்துகொள்ள தென்காசி மாவட்டம், மேக்கரைக்கு வருகிறார் அவரின் மகள். அங்கே அவரு... மேலும் பார்க்க

என்ன விலை விமர்சனம்: `சாமானியன் vs அரசு' - முக்கியமான கேள்விகளை எழுப்பும் படைப்பு ஏமாற்றுவது எங்கே?

ராமேஸ்வரம் தீவின் அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் காணிக்கையாகக் கடலில் வீசும் சில்லறைகளைச் சேகரிக்கும் தொழிலைச் செய்து வருகிறார் தவசி (கருணாஸ்). மனைவி, பிள்ளைகள், தங்கையுடன் வறுமையில் வாழ்ந்து வரு... மேலும் பார்க்க

Paris Cafe Review: ஆணவக்கொலை பற்றிப் பேசும் கஃபே; ஆனால் இந்த அதீத நாடகத்தன்மை தேவைதானா?

அமெரிக்காவின் போஸ்டன் நகரில் வசித்து வரும் ஒலிக்கு (அர்ச்சனா) ஓர் உயரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துகொள்ள அப்பா கௌதம் (குரு சோமசுந்தரம்), அம்மா தாரா (அனுமோல்),... மேலும் பார்க்க