செய்திகள் :

ஓசூர்: வழி கேட்பது போல் நடித்து பெண்களிடம் நகைப் பறிப்பு; சிக்கிய கர்நாடக தபால்காரர்!

post image

காரில் வந்து வழிகேட்பது போல் நடித்து 4 பெண்களிடம் நகை பறித்த கர்நாடக மாநில தபால்காரர் கைது செய்யப்பட்ட சம்பவம், ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்க சங்கிலி பறிப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே தொட்ட உப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 68 வயதான பாக்கியம்மா, தன் கணவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது கருப்பு நிற காரில் வந்த நபர், தொட்ட உப்பனூருக்கு எப்படி செல்வது என்று வழி கேட்க,

வழி சொன்ன பாக்கியம்மாவை, 'காரில் ஏறுங்கள், ஊரில் இறக்கி விடுகிறேன்' என்று அந்த நபர் கூறவும், கணவரை இருசக்கர வாகனத்தில் வரச்சொல்லிவிட்டு பாக்கியம்மா காரில் ஏறிச் செல்ல, செல்லும் வழியில் அவரை மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த 38 கிராம் தங்கத் தாலி சங்கிலியை பறித்து இறக்கிவிட்டு அந்த நபர் தப்பிச் சென்றுள்ளார்.

அதைத் தொடர்ந்து உப்பாரபள்ளி பேருந்து நிறுத்தம் அருகே பெட்டிக்கடை நடத்தி வரும் 65 வயதான விஜயம்மா என்பவரிடம் காரில் வந்த அதே நபர், தண்ணீர் பாட்டில் வாங்கி குடித்துவிட்டு முகவரி கேட்பது போல் விஜயம்மாவின் கழுத்திலிருந்த 50 கிராம் எடையுள்ள தங்கத் தாலி சங்கிலியை பறித்து தப்பித்துள்ளார்.

ஜீவன்குமார்

இந்த இரண்டு சம்பவங்கள் குறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், அதே நபர் ஓசூர் பாகலூர் பேருந்து நிறுத்தத்தில் நல்லூர் செல்வதற்காக காத்திருந்த 65 வயதான சரோஜம்மாவிடம் வழி கேட்பதுபோல் பேச்சு கொடுத்து அவரை நல்லூரில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்று இறக்கிவிடும்போது அவரது கழுத்திலிருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றவர், மத்திகிரி பகுதியிலும் ஒரு பெண்ணிடம் நகை பறித்துச் சென்றுள்ளார்.

வெவ்வேறு பகுதிகளில் 4 பெண்களிடம் ஒரே பாணியில் நகை பறித்துச் சென்ற நபர் குறித்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், இந்த நகை பறிப்பில் ஈடுபட்டது கர்நாடக மாநிலம் ஆனேக்கல் அருகேயுள்ள கெரட்டினஹள்ளியைச் சேர்ந்த ஜீவன்குமார் (26) என்பதை கண்டுபிடித்தனர்.

சி.டி.ஓசகோட்டா பகுதியில் தபால்காரராக பணிபுரியும் ஜீவன்குமார் அவ்வப்போது திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து ஜீவன்குமாரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து நகைகளை பறிமுதல் செய்தனர்.

தொழிலதிபர் வீரமணி வழக்கு: ``20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த பாலியல் சுரண்டல்" - அதிர்ச்சி தகவல்!

பிரபல கிரானைட் தொழிலதிபர் ஆர். வீரமணி (85) சம்பந்தப்பட்ட போக்சோ (POCSO) வழக்கில், 2003-ம் ஆண்டுக்கும் முன்பிருந்தே பல சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் என்ற திடுக்கிடும் தகவல்... மேலும் பார்க்க

ChatGPT, ஏ.ஐ மூலம் தேர்வில் காப்பிடியத்த மும்பை ஐ.ஐ.டி மாணவர்: பிடிபட்டதால் விபரீத முடிவு!

மும்பை ஐ.ஐ.டியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர் சாஹில் வகோடே. எரிசக்தி அறிவியல் மற்றும் பொறியியல் துறையைச் சேர்ந்த சாஹில் வகோடே தேர்வின்போது விடைகளைக் கண்டரிய காப்பியடித்துள்ளார். அவர் இதற்காக தனது ம... மேலும் பார்க்க

புதுச்சேரி: பொய்ப் புகாரால் பெண்ணை பழிவாங்க நினைத்த முதியவர்! - போலீஸார் செய்த `சைலண்ட்’ சம்பவம்

புதுச்சேரி லாஸ்பேட்டை தாகூர் நகரைச் சேர்ந்தவர் கோபால். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஆர்.வி.ஜானகிராமனின் உதவியாளராகப் பணிபுரிந்த இவர், ஆட்சியாளர்கள், அரசு உயரதிகாரிகள், தனி நபர்கள் என அனைவரையும் விமர்சி... மேலும் பார்க்க

சேலம்: மீன் கடையில் நீர் காகம் இறைச்சி விற்பனை; அத்துமீறும் வேட்டை கும்பல்... அதிர்ச்சி பின்னணி!

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகில் உள்ள கோனேரிப்பட்டி அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஒரு மீன் கடையில் நீர் காகம் ( Cormorant) இறைச்சி விற்பனை செய்யப்பட்டு வருவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இ... மேலும் பார்க்க

9 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: `தோண்டத் தோண்ட கிளம்பும் பூதம்' - தொழிலதிபர் வீரமணி வழக்கு!

சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர் அளித்த ரகசிய புகாரின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவின் பாலியல் தடுப்புப் பிரிவு காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டது. புகார்தாரர் அளித்த பென்டிரைவை ஆய்வு செய்தபோது, ... மேலும் பார்க்க

திண்டுக்கல்: வைக்கோல் லாரியில் சென்ற சிறுவன்; மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம்!

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகேயுள்ள மார்க்கம்பட்டி எல்லைப்பட்டியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (23). லாரி ஓட்டுநரான இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து வைக்கோல் ஏற்றிக்கொண்டு ஈச்சர் லாரியில் எல்... மேலும் பார்க்க