செய்திகள் :

'ஒண்ணு அரிவாள் வெட்டு; இன்னொன்னு மின்வெட்டு; ரெண்டுக்கும்தான் போட்டியே!' - ஸ்டாலின் விமர்சனம்

post image

திமுகவின் முப்பெரும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கில் நடந்திருந்தது. இதில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் விஜய்யையும் தவெக அரசையும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.

Stalin
Stalin

மு.க.ஸ்டாலின் பேசியதாவது, 'ஒரு இயக்கம் 75 ஆண்டுகள் நிலைத்திருப்பது சாதாரண விஷயமல்ல. 75 ஆண்டுகள் கழித்தும் அதே கம்பீரத்தோடு நிற்பதும் சாதாரண சாதனை கிடையாது. நடந்து முடிந்த தேர்தலில் ஆளுங்கட்சிக்கும் நமக்கும் 17 லட்சம் வாக்குகள்தான் வித்தியாசம், பெரும்பான்மை கூட கிடைக்கவில்லை.

எதோ பெரிய அலை அடித்ததை போல பேசுகிறார்கள். நம்முடைய கூட்டணி கட்சிகளால்தான் ஆட்சியே நடக்கிறது. அந்த கட்சிகளையும் நம்பாமல் குதிரை பேரம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை நிறுத்துவதும் பெயரை மாற்றுவதும்தான் மாற்றமா? திமுக ஆட்சியில் பொருளாதார வளர்ச்சியில் நம்பர் 1மாநிலமாக இருந்தோம். இப்போது விலைவாசி உயர்வில் நம்பர் 1 ஆக மாறிக்கொண்டிருக்கிறோம்.

Stalin
Stalin

இந்த துக்ளக் தர்பாரை பற்றி பேசக் கூடாது என்பதற்காக அமைச்சரவை முதல் ஊடகங்கள் வரை டைவர்ட் செய்கின்றனர். முதல்வர் இன்றைக்கு என்ன கோட் போட்டார், வெள்ளிக்கிழமை பட்டு வேட்டி, நெற்றியில் என்ன கலர் பொட்டு வைத்தார் என்று செய்தி வந்துகொண்டிருக்கிறது. முதல்வரும் இதை செய்தால் போதுமென நினைக்கிறார்.தவெக ஆட்சியில் இரண்டே இரண்டுக்கு இடையில்தான் போட்டியே. ஒன்று மின்வெட்டு, இன்னொன்று அரிவாள் வெட்டு' என்றார்.

'பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகத் திட்டம் ரத்து?' - அமைச்சர் ஆதவ் சூசகம்!

மதுராந்தகம் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வேலைகளில் தவெக முகாம் மும்முரமடைந்திருக்கிறது. தொகுதியில் நடந்த பாக முகவர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா,புதிய தலைமைச் செயலகம் திட்டம் குறித்தும் ... மேலும் பார்க்க

'ரிசைன் பண்ணுங்க; கல்லூரி முடித்த இளம்பெண்ணை நிறுத்தி உங்களை தோற்கடிப்போம்!'-எடப்பாடிக்கு ஆதவ் சவால்

மதுராந்தகம் தொகுதியின் இடைத்தேர்தலுக்காக தவெகவின் முக்கியஸ்தர்கள் அந்த தொகுதியில் முகாமிட்டிருக்கின்றனர். தொகுதியில் நடந்த பாக முகவர்கள் கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜூனா, எடப்பாடி பழனிசாமியை கடுமையாக வி... மேலும் பார்க்க

'கலைஞருடன் ஒப்பிட உதயநிதிக்கு என்ன அருகதை இருக்கிறது?' - ஆதவ் கேள்வி!

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேலுக்காக பாக முகவர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா திமுகவை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். Aa... மேலும் பார்க்க

'நல்லவேள நான் ஜெயிக்கல...கொளத்தூர் மக்களுக்கு கோடானு கோடி நன்றி!' - மு.க.ஸ்டாலின் கலாய்!

திமுகவின் முப்பெரும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கில் நடந்திருந்தது. இதில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் விஜய்யையும் தவெக அரசையும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.முப்பெ... மேலும் பார்க்க

'எவருக்கும் மிசா கைதை நிரூபிக்க வேண்டிய தேவை எனக்கில்லை...' - மு.க.ஸ்டாலின் ஆவேசம்

திமுகவின் முப்பெரும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கில் நடந்திருந்தது. இதில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் விஜய்யையும் தவெக அரசையும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.முப்பெ... மேலும் பார்க்க

ஶ்ரீரங்கம் கோயில் நில விவகாரம்: ``நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கும்" - திமுக பிரமுகர் ராம்குமார்

திருச்சி, ஸ்ரீரங்கம் திருக்கோயிலுக்கு சொந்தமான சுமார் ரூ. 50 கோடி மதிப்பிலான நிலத்தை போலியான ஆவணங்களை கொடுத்து அந்த பகுதியின் தி.மு.க செயலாளர் ராம்குமார் என்பவர் தனது பெயருக்கு கடந்த 2022-ம் ஆண்டு பத்... மேலும் பார்க்க