செய்திகள் :

``24 மணி நேரத்தில் 8 கொலைகள்: முதலமைச்சரைப் போல் காவல்துறையும் ஓய்வில் இருக்கிறதா?"- எம்.பி கனிமொழி

post image

தமிழ்நாட்டில் சிவகங்கை, ராமநாதபுரம், ஆகிய பகுதிகளில் இரட்டைக் கொலை, கரூரில் வடமாநில இளைஞர் கொலை என தமிழ்நாட்டில் கொலைச் சம்பவங்கள் உள்பட பல குற்றங்கள் அரங்கேறியிப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு எம்.பி கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 8 கொலைகள் நடந்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் செயலிழந்துபோயுள்ளது என்பதற்கு இந்தக் கொலைகள்தான் சாட்சி. ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

தமிழ்நாட்டின் Growth Rate-ஐ உயர்த்துவார்கள் என நம்பி வாக்களித்த மக்களுக்கு, தினமும் Crime Rate -ஐ உயர்த்தி தண்டனை கொடுத்துக் கொண்டிருக்கிறது தவெக அரசு. தமிழ்நாட்டில் மக்களின் பாதுகாப்பு அன்றாடம் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கும்போது, என்ன செய்துகொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசு? தமிழ்நாட்டில் காவல்துறை செயல்படுகிறதா? இல்லை அதுவும் முதலமைச்சரைப் போல் ஓய்வில்தான் இருக்கிறதா?" எனக் குறிப்பிட்டுருக்கிறார்.

'நந்திகிராமில் ஒரு நாள்' மேற்கு வங்க இடைத்தேர்தல் களத்தில் நேற்று 'பரபர' காட்சிகள் - என்ன நடந்தது?

மேற்கு வங்கத்தின் நந்திகிராம் தொகுதி நேற்று (செப்டம்பர் 18) ஒரே நாளில் பல ட்விஸ்ட்களைப் பார்த்துவிட்டது.இது மேற்கு வங்கத்தின் முதலமைச்சர் சுவேந்து அதிகாரியின் தொகுதி ஆகும். கடந்த மேற்கு வங்க சட்டமன்றத... மேலும் பார்க்க

விவசாயிகள் போராட்டம்: பேச்சுவார்த்தைக்கு இடையே வெளியேறி சென்ற அமைச்சர் ரமேஷ்! - என்ன நடந்தது?

விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய முழு பயிர்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திருச்சி மாவட்டம், சமயபுரம் பள்ளிவிடை பாலம் சர்வீஸ் சாலை அருகே விவசாயிகள் காத்திருப்ப... மேலும் பார்க்க

அயலக மாணவர் விவகாரம்; அடித்து ஆடிய திமுக; பேக் அடித்த சமூகநீதித்துறை! - பின்னணி என்ன?

அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் கல்வி பயின்று வரும் மாணவன் பாரதிதாசனுக்கு விடுவிக்க வேண்டிய நிதி சம்பந்தமாக சர்ச்சை எழுந்திருந்தது. முறையான ரசீதுகளை சமர்பிக்காமல் மாணவருக்கு ... மேலும் பார்க்க

திருச்சி: ரூ.50 கோடி மதிப்பிலான ஸ்ரீரங்கம் கோயில் நிலம் மோசடி - திமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு!

திருச்சி, ஸ்ரீரங்கம் திருக்கோயிலுக்கு சொந்தமான சுமார் ரூ. 50 கோடி மதிப்பிலான நிலத்தை போலியான ஆவணங்களை கொடுத்து அந்த பகுதியின் தி.மு.க செயலாளர் ராம்குமார் என்பவர் தனது பெயருக்கு கடந்த 2022-ம் ஆண்டு பத்... மேலும் பார்க்க

டெங்கு: ``அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்புக்கு அலட்சியமே காரணம்" - அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் புதிதாக 253 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பா... மேலும் பார்க்க

சமூக வலைதளங்களில் குழந்தைகள் பாதுகாப்பு: Meta-வின் முடிவு போதுமா? நிபுணர் கருத்து!

Lசமூக வலைதளங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகத்தைச் சித்தரிக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் கான்டென்ட்கள் (Child Sexual Abuse Material - CSAM) தொடர்பாக கண்டறியப்படும் வழக்குகள் ... மேலும் பார்க்க