செய்திகள் :

அயலக மாணவர் விவகாரம்; அடித்து ஆடிய திமுக; பேக் அடித்த சமூகநீதித்துறை! - பின்னணி என்ன?

post image

அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் கல்வி பயின்று வரும் மாணவன் பாரதிதாசனுக்கு விடுவிக்க வேண்டிய நிதி சம்பந்தமாக சர்ச்சை எழுந்திருந்தது. முறையான ரசீதுகளை சமர்பிக்காமல் மாணவருக்கு நிதியை விடுவிக்க முடியாது என சமூகநீதித்துறை உறுதியாக இருந்த நிலையில், இப்போது மாணவனுக்கான நிதி விடுவிக்கப்படும் என அரசு அறிவித்திருக்கிறது. பின்னணியில் என்ன நடந்தது என்பதை விசாரித்தோம்.

மாணவர் பாரதிதாசன்
மாணவர் பாரதிதாசன்

இதுசம்பந்தமாக நம்மிடம் பேசிய கோட்டை வட்டாரத்தினர் சிலர், 'மாணவன் பாரதிதாசன் விவகாரம் சட்டமன்றம் வரை விவாதமாகியிருந்தது. சட்டமன்றத்திலேயே எதிர்க்கட்சிகள் மாணவனின் கல்விக்கட்டணம் சார்ந்து சரமாரியாக கேள்வியையும் எழுப்பின. ஆனாலும், அமைச்சர் மிக உறுதியாக மாணவன் உரிய ரசீதுகளை சமர்பிக்காமல் பணத்தை விடுவிக்க முடியாது என தீர்க்கமாக கூறினார்.

அமைச்சரின் முடிவு சரியானதுதான். நிதிப் பற்றாக்குறை நிலவும் சூழலில், அரசின் கஜானாவிலிருந்து செலவழிக்கப்படும் ஒவ்வொரு ரூபாயும் முறையாக செலவழிக்கப்பட வேண்டுமென அமைச்சர் நினைக்கிறார். மேலும், ஒரு வருடத்துக்கு ஒரு மாணவருக்கு 36 லட்சம் வரைக்கும் உதவித்தொகையாக கொடுக்கலாம் என்றுதான் திட்டத்தில் இருக்கிறது. 36 லட்சத்தையும் முழுமையாக கொடுக்க வேண்டும் என்றில்லை. உதாரணமாக மாணவருக்கு 20 லட்சம்தான் செலவு எனில், அதை மட்டும் கொடுத்தால் போதும். ஆனால், மாணவர் பாரதிதாசன் 36 லட்ச ரூபாயையும் வாங்கிவிட வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டிருக்கிறார். அதனால்தான் அவர் வைத்த சில செலவு ரசீதுகளில் ஆட்சேபனை ஏற்பட்டது. அதற்கு முறையான ரசீதுகளை கொடுங்கள் என்றுதான் துறை சார்பில் மாணவரிடம் கேட்கப்பட்டது.

அமைச்சர் வன்னி அரசு
அமைச்சர் வன்னி அரசு

மாணவர் இதை அரசியலாக மாற்றிவிட்டார். திமுகவும் இதை நன்றாக பயன்படுத்த தொடங்கிவிட்டது. மாணவனுக்கு கல்வி உதவித்தொகையை அரசு கொடுக்கவில்லையெனில், திமுகவே அந்தத் தொகையை கொடுக்கும் என முன்னாள் முதல்வர் ஸ்டாலின் ஸ்கோர் செய்தார். இதன்பிறகுதான் இந்த விவகாரத்தை முதல்வர் அலுவலகம் சீரியஸாக எடுத்தது. அரசு உதவித்தொகையை விடுவிக்காமல், திமுக அந்தப் பணத்தை கட்டும் சூழல் ஏற்பட்டால் அரசியல் களத்தில் தவெகவுக்கு அது பெரும் பின்னடைவை கொடுக்கும். இதை மனதில் வைத்துதான் முதல்வர் அலுவலகம் தரப்பில், சமூகநீதித்துறைக்கு மாணவரின் விவகாரத்தை பிரச்னையை மேலும் பெரிதாக்காமல் முடித்து வையுங்கள் என மெசேஜ் பாஸ் செய்யப்பட்டது. விசிக தலைவர் திருமாவளவனும் மாணவன் விவகாரம் பெரிதாக வளர்ந்து விசிகவுக்கு எதிராக திரும்புவதை விரும்பவில்லை. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் மாணவனுக்கான உதவித்தொகையை முழுமையாக விடுவிக்கும் முடிவுக்கு சமூகநீதித்துறை வந்திருக்கிறது. மாணவரிடம் முறையான ரசீதுகளை சமூகநீதித்துறை கேட்டது. அந்த ரசீதுகள் எதுவும் இன்னமும் கிடைக்கப் பெறவில்லை. மாணவனின் கல்விக்கட்டணம் தொடர்பாக மாணவர் பயிலும் பல்கலைக்கழகத்துக்கு சமூகநீதித்துறை ஒரு மெயில் அனுப்பியிருந்தது. அந்த மெயிலுக்கும் பல்கலைக்கழகம் இன்னமும் பதில் அனுப்பவில்லை. அரசியல்ரீதியாக பிரச்னை விஸ்வரூபம் எடுப்பதாலயே சமூகநீதித்துறை பேக் அடித்திருக்கிறது' என்கின்றனர் அந்த விவரமறிந்த புள்ளிகள்.

திருச்சி: ரூ.50 கோடி மதிப்பிலான ஸ்ரீரங்கம் கோயில் நிலம் மோசடி - திமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு!

திருச்சி, ஸ்ரீரங்கம் திருக்கோயிலுக்கு சொந்தமான சுமார் ரூ. 50 கோடி மதிப்பிலான நிலத்தை போலியான ஆவணங்களை கொடுத்து அந்த பகுதியின் தி.மு.க செயலாளர் ராம்குமார் என்பவர் தனது பெயருக்கு கடந்த 2022-ம் ஆண்டு பத்... மேலும் பார்க்க

டெங்கு: ``அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்புக்கு அலட்சியமே காரணம்" - அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் புதிதாக 253 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பா... மேலும் பார்க்க

சமூக வலைதளங்களில் குழந்தைகள் பாதுகாப்பு: Meta-வின் முடிவு போதுமா? நிபுணர் கருத்து!

Lசமூக வலைதளங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகத்தைச் சித்தரிக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் கான்டென்ட்கள் (Child Sexual Abuse Material - CSAM) தொடர்பாக கண்டறியப்படும் வழக்குகள் ... மேலும் பார்க்க

அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை: மலேசியாவில் படிக்கும் மாணவர் பாரதிதாசனுக்கு நிதி விடுவிப்பு!

அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், மலேசியாவில் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பைப் படித்து வருகிறார் மாணவர் பாரதிதாசன்.இவருக்கு இரண்டாம் ஆண்டு உதவித் தொகை கிடைக்கவில்லை. இதில் பிரச... மேலும் பார்க்க

'கட்சி மாறிய அதிமுக எம்எல்ஏ-களுக்கு ரூ.35 கோடி கொடுக்கப்பட்டுள்ளது'- பொள்ளாச்சி ஜெயராமன் புகார்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள கோட்டூர் மலையாண்டிபட்டிணம் பகுதியில் அ.தி.மு.க சார்பில் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 118 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற பொ... மேலும் பார்க்க

`` `ஆள்மாறி கொன்றுவிட்டோம்' என்கிறார்கள்; காற்றில் பறக்கிறது சட்டம் ஒழுங்கு" - உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவருவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``Dummy முதலமைச்சரின் ஆட்சி அமைந்த நாள் முதல் தமிழ்ந... மேலும் பார்க்க