செய்திகள் :

``சென்னை விமான நிலையம் தனியார்மயமாகிறதா?" - அமைச்சர் நிர்மல் குமார் பதில்

post image

டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட பன்னாட்டு விமான நிலையங்களை ‘ஜிஎம்ஆர்’ நிறுவனம் நிர்வகித்து வரும் சூழலில், சென்னை விமான நிலைய நிர்வாகத்தையும் தனியார் அல்லது பிற அமைப்புகளின் நிர்வாகத்திற்கு மாற்றுவது போன்ற நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு முயன்று வருவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த நிலையில், மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகளுக்குத் துணைபோகும் வகையில், சென்னை விமான நிலையத்தின் நிர்வாகத்தை மாற்றக் கோரி முதலமைச்சர் விஜய் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களுடைய கடுமையான கண்டனங்களைப் பதிவுசெய்து வருகின்றனர். மேலும், பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள உள்கட்டமைப்புகளின் உரிமையைப் பாதுகாக்கும் வகையில், இந்த விவகாரம் குறித்து முதலமைச்சர் விஜய் உடனடியாகத் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜிஎம்ஆர் குழுவினருடன் முதல்வர் விஜய்
ஜிஎம்ஆர் குழுவினருடன் முதல்வர் விஜய்

இந்த செய்திக்கு விளக்கமளிக்கும் வகையில், இராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், ``பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அடிப்படை வசதிகளும் கட்டமைப்பு வசதிகளும் எப்போதும் அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும். மின்சார விநியோகம், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்கள் போன்ற பொதுமக்கள் நாள்தோறும் பயன்படுத்தும் கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டில் இயங்குவதே மிக அவசியமாகும்.

இவை அனைத்தும் மக்களின் அன்றாட வாழ்க்கையோடு நேரடித் தொடர்புடைய அடிப்படைச் சேவைகளாக இருப்பதால், இதில் அரசின் முழுமையான கண்காணிப்பு இருக்க வேண்டும். இத்தகைய பொதுச் சேவைகள் தனியார்மயமாக்கப்பட்டு, எந்தவொரு தனியார்க் குழுமத்தின் கைக்கும் செல்லும்போது, சாதாரணப் பொதுமக்களுக்கு அவை விலை உயர்ந்தவையாகவும் எட்டாக்கனியாகவும் மாறிவிடும் அபாயம் உள்ளது. வணிக நோக்கம் கொண்ட தனியார் நிர்வாகத்தின் கீழ் இவை செல்லும் போது, எளிய மக்களுக்கான அணுகல் பாதிக்கப்படக்கூடும்.

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்

மக்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் பொதுமக்களுக்கான கட்டமைப்பு வசதிகள் முழுமையாக அரசிடம் இருக்கும்போது மட்டுமே, அதில் 100% உரிமையும் பாதுகாப்பும் மக்களுக்குத் தடையின்றிச் சென்றடையும். அரசு சேவைகளின் நோக்கம் மக்கள் நலன் சார்ந்ததாகவே இருக்கும் என்பதால், பொதுப் பயன்பாட்டு இடங்கள் தனியார்மயமாவதைத் தவிர்த்து, அரசின் பொறுப்பிலேயே வைத்திருப்பதே ஆரோக்கியமான சமூகத்திற்கு உகந்தது. அதுவே நம் எண்ணம். நம் அரசும் அதை நோக்கித்தான் இருக்கும், பார்க்கலாம்." என்றார்.

அயலக மாணவர் விவகாரம்; அடித்து ஆடிய திமுக; பேக் அடித்த சமூகநீதித்துறை! - பின்னணி என்ன?

அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் கல்வி பயின்று வரும் மாணவன் பாரதிதாசனுக்கு விடுவிக்க வேண்டிய நிதி சம்பந்தமாக சர்ச்சை எழுந்திருந்தது. முறையான ரசீதுகளை சமர்பிக்காமல் மாணவருக்கு ... மேலும் பார்க்க

திருச்சி: ரூ.50 கோடி மதிப்பிலான ஸ்ரீரங்கம் கோயில் நிலம் மோசடி - திமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு!

திருச்சி, ஸ்ரீரங்கம் திருக்கோயிலுக்கு சொந்தமான சுமார் ரூ. 50 கோடி மதிப்பிலான நிலத்தை போலியான ஆவணங்களை கொடுத்து அந்த பகுதியின் தி.மு.க செயலாளர் ராம்குமார் என்பவர் தனது பெயருக்கு கடந்த 2022-ம் ஆண்டு பத்... மேலும் பார்க்க

டெங்கு: ``அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்புக்கு அலட்சியமே காரணம்" - அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் புதிதாக 253 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பா... மேலும் பார்க்க

சமூக வலைதளங்களில் குழந்தைகள் பாதுகாப்பு: Meta-வின் முடிவு போதுமா? நிபுணர் கருத்து!

Lசமூக வலைதளங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகத்தைச் சித்தரிக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் கான்டென்ட்கள் (Child Sexual Abuse Material - CSAM) தொடர்பாக கண்டறியப்படும் வழக்குகள் ... மேலும் பார்க்க

அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை: மலேசியாவில் படிக்கும் மாணவர் பாரதிதாசனுக்கு நிதி விடுவிப்பு!

அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், மலேசியாவில் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பைப் படித்து வருகிறார் மாணவர் பாரதிதாசன்.இவருக்கு இரண்டாம் ஆண்டு உதவித் தொகை கிடைக்கவில்லை. இதில் பிரச... மேலும் பார்க்க

'கட்சி மாறிய அதிமுக எம்எல்ஏ-களுக்கு ரூ.35 கோடி கொடுக்கப்பட்டுள்ளது'- பொள்ளாச்சி ஜெயராமன் புகார்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள கோட்டூர் மலையாண்டிபட்டிணம் பகுதியில் அ.தி.மு.க சார்பில் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 118 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற பொ... மேலும் பார்க்க