செய்திகள் :

'கட்சி மாறிய அதிமுக எம்எல்ஏ-களுக்கு ரூ.35 கோடி கொடுக்கப்பட்டுள்ளது'- பொள்ளாச்சி ஜெயராமன் புகார்!

post image

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள கோட்டூர் மலையாண்டிபட்டிணம் பகுதியில் அ.தி.மு.க சார்பில் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 118 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதாவது, "மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகியோரின் பெயரை சொல்லவே எனக்கு வாய் வரவில்லை. இரண்டு பேரும் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர்கள். தாராபுரத்தில் சத்யபாமா விசிலை விட 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர். எதற்காக இவர் ராஜினாமா செய்தார் என மக்கள் கேட்டும் சொல்லவில்லை.

பொள்ளாச்சி ஜெயராமன்
பொள்ளாச்சி ஜெயராமன்

நமது ஆட்சி வந்திருந்தால் நம்ம கட்சியில் இருந்திருப்பாராம். நாம் ஆட்சிக்கு வராததால் ஆளுங்கட்சிக்கு செல்ல வேண்டும் என ராஜினாமா செய்து போயியுள்ளார். 35 கோடி ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு கட்சி மாறியுள்ளார். மக்கள் ஓட்டை பெற்று இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்று கட்சி மாறிய அத்தனை பேரும் நபர் ஒருவருக்கு 35 கோடி ரூபாய் கட்சி மாறுவதற்கு கொடுக்கப்பட்டுள்ளது. மைனாரிட்டி ஆட்சியை காப்பாற்றுவதற்காக நபர் ஒருவருக்கு 35 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் வாக்கை வாங்கி ஏமாற்றிய அவர்களுக்கு சரியான பாடம் கற்பிப்பதற்காகதான் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் வந்துள்ளது. இத்தேர்தலில் அ.தி.மு.க அறுதி பெரும்பான்மை உடன் வெற்றி பெறும். தேர்தல் முடிந்த மூன்றே நாள்களில் இந்த ஆட்சி வீட்டுக்கு போகும். மீண்டும் பொதுத்தேர்தல் வரும். மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார்" எனத் தெரிவித்தார்.

``24 மணி நேரத்தில் 8 கொலைகள்: முதலமைச்சரைப் போல் காவல்துறையும் ஓய்வில் இருக்கிறதா?"- எம்.பி கனிமொழி

தமிழ்நாட்டில் சிவகங்கை, ராமநாதபுரம், ஆகிய பகுதிகளில் இரட்டைக் கொலை, கரூரில் வடமாநில இளைஞர் கொலை என தமிழ்நாட்டில் கொலைச் சம்பவங்கள் உள்பட பல குற்றங்கள் அரங்கேறியிப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்ப... மேலும் பார்க்க

அயலக மாணவர் விவகாரம்; அடித்து ஆடிய திமுக; பேக் அடித்த சமூகநீதித்துறை! - பின்னணி என்ன?

அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் கல்வி பயின்று வரும் மாணவன் பாரதிதாசனுக்கு விடுவிக்க வேண்டிய நிதி சம்பந்தமாக சர்ச்சை எழுந்திருந்தது. முறையான ரசீதுகளை சமர்பிக்காமல் மாணவருக்கு ... மேலும் பார்க்க

திருச்சி: ரூ.50 கோடி மதிப்பிலான ஸ்ரீரங்கம் கோயில் நிலம் மோசடி - திமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு!

திருச்சி, ஸ்ரீரங்கம் திருக்கோயிலுக்கு சொந்தமான சுமார் ரூ. 50 கோடி மதிப்பிலான நிலத்தை போலியான ஆவணங்களை கொடுத்து அந்த பகுதியின் தி.மு.க செயலாளர் ராம்குமார் என்பவர் தனது பெயருக்கு கடந்த 2022-ம் ஆண்டு பத்... மேலும் பார்க்க

டெங்கு: ``அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்புக்கு அலட்சியமே காரணம்" - அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் புதிதாக 253 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பா... மேலும் பார்க்க

சமூக வலைதளங்களில் குழந்தைகள் பாதுகாப்பு: Meta-வின் முடிவு போதுமா? நிபுணர் கருத்து!

Lசமூக வலைதளங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகத்தைச் சித்தரிக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் கான்டென்ட்கள் (Child Sexual Abuse Material - CSAM) தொடர்பாக கண்டறியப்படும் வழக்குகள் ... மேலும் பார்க்க

அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை: மலேசியாவில் படிக்கும் மாணவர் பாரதிதாசனுக்கு நிதி விடுவிப்பு!

அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், மலேசியாவில் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பைப் படித்து வருகிறார் மாணவர் பாரதிதாசன்.இவருக்கு இரண்டாம் ஆண்டு உதவித் தொகை கிடைக்கவில்லை. இதில் பிரச... மேலும் பார்க்க