செய்திகள் :

சென்னை விமான நிலையம்: ``ஒரு நல்ல முயற்சி... ஆனால்" - எம்.பி கார்த்தி சிதம்பரம்

post image

சென்னை விமான நிலைய நிர்வாகத்தை தனியார் அல்லது பிற அமைப்புகளின் நிர்வாகத்திற்கு மாற்றுவது போன்ற நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு முயன்று வருவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த நிலையில், மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகளுக்குத் துணைபோகும் வகையில், சென்னை விமான நிலையத்தின் நிர்வாகத்தை மாற்றக் கோரி முதலமைச்சர் விஜய் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்

அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களுடைய கடுமையான கண்டனங்களைப் பதிவுசெய்து வருகின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தன் எக்ஸ் பக்கத்தில், ``AAI அமைப்பை சென்னை விமான நிலைய நிர்வாகப் பொறுப்பிலிருந்து மாற்றக் கோருவது ஒரு சிறிய நல்ல முயற்சிதான் என்றாலும், அது பிரதானப் பிரச்சனைக்கு முழுமையான தீர்வாகாது. தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரத்திற்குப் பொருத்தமான வகையில், சர்வதேசத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளுடன் கூடிய ஒரு புதிய விமான நிலையம் சென்னைக்கு மிகவும் அவசியமாகும்.

பயணிகளின் அனுபவம், உள்கட்டமைப்பு மற்றும் அன்றாடச் செயல்பாடுகள் ஆகியவற்றில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களின் விமான நிலையங்களோடு ஒப்பிடுகையில் நாம் வெகுவாகப் பின்தங்கியுள்ளோம். தற்போதைய சென்னை விமான நிலையத்தின் மோசமான உள்கட்டமைப்பும் அதன் செயல்பாடுகளும் சென்னை நகரத்திற்கும் அதன் வளர்ச்சிக்கும் செய்யப்படுகின்ற பெரும் துரோகமாகும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

"தவெக ஆட்சி வந்தது நல்லதுதான்!" - சொல்கிறார் நாதக பாத்திமா பர்கானா

2026 சட்டமன்றத் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்த நாம் தமிழர் கட்சி, பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் எனச் சொல்லப்பட்ட நிலையில் எதிர்வரும் இடைத்தேர்தலில் மீண்டும் தனித்தேப் போட்டியிடுவதாக அறிவித்திருக்க... மேலும் பார்க்க

DMK: 'சீனியர்கள வச்சிட்டு எதுவும் செய்ய முடியாது' - விரக்தியடைந்த உதயநிதி.. பின்னணி என்ன?

த.வெ.க செயல்பாடுகளை எதிர்கொள்ள முடியாமல் தி.மு.க திணறிவருவதாகச் சொல்லப்படும் சூழலில், சீனியர்களை வைத்து கட்சி நடத்த முடியாமல் உதயநிதி திணறுவதாக சொல்கிறார்கள் உடன்பிறப்புகள். அதன் பின்னணி குறித்து அறிவ... மேலும் பார்க்க

"அமைச்சர் நிர்மல்குமார் கண்ணியக் குறைவாக பேசவில்லை.. பேசியது தி.மு.க-தான்! - விசிக எழில் கரோலின்

விடுதலை சிறுத்தைகள் கட்சிமீதான தே.மு.தி.க-வின் விமர்சனம், வி.சி.க-வின் இடைத்தேர்தல் நிலைப்பாடு உள்ளிட்ட விவகாரங்களை கேள்விகளாக்கிவி.சி.க துணைப் பொதுச்செயலாளர் ஏழில் கரோலினிடம் பேசினேன்."அமைச்சர் பதவிக... மேலும் பார்க்க

கோவில்பட்டி: திறப்பு விழா கண்டும், 19 வருடங்களாக இயங்காமல் இருக்கும் புதிய பேருந்து நிலையம் | Album

கோவில்பட்டி: திறப்பு விழா கண்டும் 19 வருடங்களாக செயல்படாமல் கிடக்கும் புதிய பேருந்து நிலையம்.! மேலும் பார்க்க

அமெரிக்காவில் வட்டி விகித உயர்வு அறிவிப்பு; இந்திய மக்களைப் பாதிக்கப் போகும் 5 முக்கிய விஷயங்கள்?

அனைத்து உலக நாடுகளின் சந்தைகளும் அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பிற்காகக் காத்திருந்தன.அந்த அறிவிப்பும் வந்துவிட்டது... ஃபெடரல் ரிசர்வ் வங்கி தங்களது வட்டி விகிதத்தை 0.... மேலும் பார்க்க

கட்டாய PF வரம்பு ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்வு; நீங்கள் பயன்பெறுவீர்களா? தெரிஞ்சுக்கோங்க!

PF விஷயத்தில் ஒரு ‘குட் நியூஸ்’ சொல்லியுள்ளது மத்திய அரசு.PF - புதிய அறிவிப்புநேற்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “வருங்கால வைப்பு நிதி விதிமுறைகளில் ஊதிய வரம்பு ரூ.15,000-லிருந்து மாத ஊதிய வரம்பு... மேலும் பார்க்க