செய்திகள் :

டெங்கு: ``அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்புக்கு அலட்சியமே காரணம்" - அன்புமணி ராமதாஸ்

post image

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் புதிதாக 253 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தன் எக்ஸ் பக்கத்தில், ``சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் அண்மைக்காலங்களில் இல்லாத வகையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாலும், இதுவரை 9 பேர் உயிரிழந்திருப்பதாலும் மக்களிடம் பெரும் அச்சமும், கவலையும் ஏற்பட்டிருக்கிறது.

டெங்கு காய்ச்சலுக்கான மருத்துவம் அளிப்பது ஒருபுறம் இருக்க, டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன? டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் என்ன?

டெங்கு
டெங்கு

அவை தென்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது தான் இன்றைய முதன்மைத் தேவை ஆகும். தமிழ்நாட்டில் நடப்பாண்டில் இதுவரை 16,830 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பது சோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையே இவ்வளவு என்றால் குறைந்தபட்சம் இதை விட 10 மடங்கு பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு, அது குறித்த புரிதலும், விழிப்புணர்வும் இல்லாமல் சாதாரண காய்ச்சலுக்கான மருத்துவத்தை பெற்றுக் கொண்டிருக்கக் கூடும்.

மருத்துவ ஆய்வுகளை மேற்கொண்டு டெங்கு காய்ச்சலுக்கான மருத்துவத்தை பெறாததால் தான் உயிரிழப்புகள் அதிகரித்திருக்கின்றன. அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் மட்டும் மூவர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களில் கடைசியாக இறந்த மாணவரின் உயிரிழப்புக்கு காரணம் டெங்கு அல்ல... விஷக்காய்ச்சல் என்று அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. உண்மையில் அந்த மாணவரின் உயிரிழப்புக்கு காரணம் அலட்சியமும், விழிப்புணர்வு இல்லாமையும் தான். மாணவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு 2 அல்லது 3 நாள்களில் குணமடையாத நிலையில், மருத்துவ ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தால் காய்ச்சலின் தன்மையைக் கண்டறிந்து மருத்துவம் அளித்திருக்க முடியும்.

சுகாரதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ்
சுகாரதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ்

அதை செய்யுமாறு அவருக்கு மருத்துவ ஆலோசனை வழங்கத் தவறியது தான் உயிரிழப்புக்கு காரணம் ஆகும். டெங்கு காய்ச்சல் குணப்படுத்த முடியாத நோய் அல்ல. அதற்கான சிகிச்சை வசதிகளும், மருந்துகளும் அரசு மருத்துவமனைகளில் போதிய அளவில் உள்ளன. டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி, அவர்களின் ஒத்துழைப்புடன் கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தினால் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க முடியும். பொதுமக்களும், அரசு அமைப்புகளும் இணைந்து நீர் தேங்குவதற்கான வாய்ப்புகளை சரி செய்ய வேண்டும்.

பயன்படுத்தப்படாமல் கிடக்கும் கொள்கலன்கள், வாகனங்களின் டயர்கள், சிரட்டைகள், பூந்தொட்டிகள், வாளிகள் உள்ளிட்டவற்றை அகற்ற உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதை ஒரு சிறப்பு இயக்கமாக நடத்த வேண்டும். பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதியில் தண்ணீர் தேங்கும் வகையில் உள்ள அனைத்துப் பொருட்களையும் அகற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். அதன் மூலம் டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும். டெங்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகள், அதற்காக மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள் குறித்து தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

அன்புமணி
அன்புமணி

டெங்கு காய்ச்சல் தாக்குவதைத் தடுக்க மக்களும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். நில வேம்பு கசாயம் குடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முடியும். அதேபோல், ரத்த அணுக்கள் குறையும் போது பப்பாளி சாறு அருந்தினால் அடுத்த இரு நாட்களில் ரத்த அணுக்களின் எண்ணிக்கை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். இத்தகவல்களை முதன்மை ஊடகங்கள் வாயிலாகவும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் மக்களிடம் கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அயலக மாணவர் விவகாரம்; அடித்து ஆடிய திமுக; பேக் அடித்த சமூகநீதித்துறை! - பின்னணி என்ன?

அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் கல்வி பயின்று வரும் மாணவன் பாரதிதாசனுக்கு விடுவிக்க வேண்டிய நிதி சம்பந்தமாக சர்ச்சை எழுந்திருந்தது. முறையான ரசீதுகளை சமர்பிக்காமல் மாணவருக்கு ... மேலும் பார்க்க

திருச்சி: ரூ.50 கோடி மதிப்பிலான ஸ்ரீரங்கம் கோயில் நிலம் மோசடி - திமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு!

திருச்சி, ஸ்ரீரங்கம் திருக்கோயிலுக்கு சொந்தமான சுமார் ரூ. 50 கோடி மதிப்பிலான நிலத்தை போலியான ஆவணங்களை கொடுத்து அந்த பகுதியின் தி.மு.க செயலாளர் ராம்குமார் என்பவர் தனது பெயருக்கு கடந்த 2022-ம் ஆண்டு பத்... மேலும் பார்க்க

சமூக வலைதளங்களில் குழந்தைகள் பாதுகாப்பு: Meta-வின் முடிவு போதுமா? நிபுணர் கருத்து!

Lசமூக வலைதளங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகத்தைச் சித்தரிக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் கான்டென்ட்கள் (Child Sexual Abuse Material - CSAM) தொடர்பாக கண்டறியப்படும் வழக்குகள் ... மேலும் பார்க்க

அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை: மலேசியாவில் படிக்கும் மாணவர் பாரதிதாசனுக்கு நிதி விடுவிப்பு!

அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், மலேசியாவில் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பைப் படித்து வருகிறார் மாணவர் பாரதிதாசன்.இவருக்கு இரண்டாம் ஆண்டு உதவித் தொகை கிடைக்கவில்லை. இதில் பிரச... மேலும் பார்க்க

'கட்சி மாறிய அதிமுக எம்எல்ஏ-களுக்கு ரூ.35 கோடி கொடுக்கப்பட்டுள்ளது'- பொள்ளாச்சி ஜெயராமன் புகார்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள கோட்டூர் மலையாண்டிபட்டிணம் பகுதியில் அ.தி.மு.க சார்பில் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 118 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற பொ... மேலும் பார்க்க

`` `ஆள்மாறி கொன்றுவிட்டோம்' என்கிறார்கள்; காற்றில் பறக்கிறது சட்டம் ஒழுங்கு" - உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவருவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``Dummy முதலமைச்சரின் ஆட்சி அமைந்த நாள் முதல் தமிழ்ந... மேலும் பார்க்க