செய்திகள் :

அமெரிக்காவில் வட்டி விகித உயர்வு அறிவிப்பு; இந்திய மக்களைப் பாதிக்கப் போகும் 5 முக்கிய விஷயங்கள்?

post image

அனைத்து உலக நாடுகளின் சந்தைகளும் அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பிற்காகக் காத்திருந்தன.

அந்த அறிவிப்பும் வந்துவிட்டது... ஃபெடரல் ரிசர்வ் வங்கி தங்களது வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதம் உயர்த்தியுள்ளது. ஒருவிதத்தில் இந்த அறிவிப்பு அனைவரும் எதிர்பார்த்ததுதான்.

ஏன் இந்த அறிவிப்பு முக்கியமானது?

உலக நாடுகளிடையே வர்த்தகங்கள் அமெரிக்க டாலர்களில்தான் நடந்து வருகிறது. வட்டி விகித மாற்றங்கள் டாலரின் மதிப்பை மாற்றும். இது சர்வதேச அளவில் மாற்றத்தை உண்டாக்கும்.

தற்போது ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால், அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவாகியிருக்கிறது.

அமெரிக்க டாலர்
அமெரிக்க டாலர்

டாலரின் மதிப்பு வலுவாகும் போது, பிற நாடுகளின் நாணயங்களின் மதிப்பு குறையும். இதனால், பிற நாடுகளின் இறக்குமதிகளின் விலை அதிகரிக்கும்.

இன்னொரு பக்கம், அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் பிற பொருட்களின் விலை அங்கே குறையும். இதனால், அமெரிக்காவிற்குச் செய்யப்படும் ஏற்றுமதிகள் பாதிக்கப்படும்.

பிற உலக நாடுகள் வெளிநாட்டு வங்கிகளிடமிருந்து அமெரிக்க டாலரில்தான் கடன் வாங்கியிருக்கும். இதனால், இதிலும் நாடுகளுக்குக் கடன் சுமை கூடும்.

அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டிருப்பதால், பெரு நிறுவன முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை அமெரிக்காவிற்கு மாற்றுவார்கள்.

தங்கம் விலை இனி குறையலாம். காரணம், தங்கம் என்பது வட்டி தராத முதலீடு. தற்போது வட்டி அதிகரிக்கப்பட்டுள்ளதால், தங்கத்தில் செய்திருக்கும் முதலீடுகளை வட்டி தரும் முதலீடுகளுக்கு மாற்றுவார்கள். இதனால், தங்கம் விலை சரிவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

சரி... இது இந்தியாவில் என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதைப் பார்க்கலாம்...

> அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரியலாம். தற்போது இந்திய ரூபாய் மதிப்பு ரூ.95-97-ல் வர்த்தகமாகி வருகிறது.

> அடுத்தடுத்து இந்தியாவில் பண்டிகைகள் லைனில் இருப்பதால், தங்கம் விலை குறைவு (ஒருவேளை குறைந்தால்) இந்திய மக்களுக்குச் சாதகமாக இருக்கலாம்.

தங்கம்
தங்கம்

ஆனால், அந்நிய செலாவணி கையிருப்பை உறுதி செய்யத் தேவையின்றித் தங்கம் வாங்க வேண்டாம் என்று மத்திய அரசு இந்திய மக்களை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், தங்க இறக்குமதியைக் குறைக்க தங்கம், வெள்ளி இறக்குமதி வரியை 15 சதவீதம் உயர்த்தியுள்ளது. இந்த இரண்டு செக்குகளும் இந்தியாவில் தங்கம் விலை குறைவைப் பாதிக்கலாம்.

> மத்திய கிழக்கில் நடக்கும் பிரச்சினையால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. டாலர் மதிப்பு உயரும் போது, இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் விலையை உயர்த்தும்.

> ஏற்கெனவே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவிலிருந்து முதலீடுகளை வெளியேற்றி வருகிறார்கள். இப்போது அமெரிக்காவில் கிடைக்கும் அதிக வட்டி, இந்திய ரூபாய் மதிப்பின் சரிவு போன்ற காரணங்களால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இன்னும் தங்களது முதலீடுகளை வெளியேற்றலாம்.

> தற்போது ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியிருக்கிறது. இதன் செயல்பாடுகள், இந்தியா மீதான தாக்கங்களைப் பார்க்கும் இந்திய ரிசர்வ் வங்கி.

அடுத்ததாக, இந்தியாவில் பணவீக்கம், வளர்ச்சி, பொருளாதார நிலைகளை ஆராயும்.இதனால், இந்திய ரிசர்வ் வங்கி கூட வட்டி விகித மாற்றத்தை அறிவிக்கலாம்.

ஒருவேளை, வட்டி விகிதம் உயர்ந்தால், கடன்களில் வட்டி விகிதமும் கூடும்.

கோவில்பட்டி: திறப்பு விழா கண்டும், 19 வருடங்களாக இயங்காமல் இருக்கும் புதிய பேருந்து நிலையம் | Album

கோவில்பட்டி: திறப்பு விழா கண்டும் 19 வருடங்களாக செயல்படாமல் கிடக்கும் புதிய பேருந்து நிலையம்.! மேலும் பார்க்க

கட்டாய PF வரம்பு ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்வு; நீங்கள் பயன்பெறுவீர்களா? தெரிஞ்சுக்கோங்க!

PF விஷயத்தில் ஒரு ‘குட் நியூஸ்’ சொல்லியுள்ளது மத்திய அரசு.PF - புதிய அறிவிப்புநேற்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “வருங்கால வைப்பு நிதி விதிமுறைகளில் ஊதிய வரம்பு ரூ.15,000-லிருந்து மாத ஊதிய வரம்பு... மேலும் பார்க்க

நெல்லை: அடர்காட்டுக்குள் பழங்குடியின காணி மக்கள்; நடந்து சென்று சந்தித்த அமைச்சர் வன்னி அரசு |Photos

நெல்லை: பழங்குடியின காணி மக்களை காண அடர் காட்டுக்குள் நடந்து சென்று சந்தித்த அமைச்சர் வன்னி அரசு.!நெல்லை: பழங்குடியின காணி மக்களை காண அடர் காட்டுக்குள் நடந்து சென்று சந்தித்த அமைச்சர் வன்னி அரசு.!வாங்... மேலும் பார்க்க

MDR: மளிகைக் கடைகளில் UPI Payment செய்தால்கூட கட்டணமா? கஸ்டமர் தலையில் விழுமா இது? | Explained FAQ

கையிலும், பர்ஸிலும் பணத்தை வைத்துக்கொண்டு, அதைப் பத்திரமாகப் பொத்திப் பொத்திக் கொண்டுபோய் வந்துகொண்டிருந்த காலமெல்லாம் இப்போது மலையேறிவிட்டது.இப்போதெல்லாம் எங்கே போனாலும் குறைந்தபட்சத் தொகையைக் கையில்... மேலும் பார்க்க

``தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் போல வேண்டுமென்று வடநாட்டில் ஏங்குகிறார்கள்"- அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் கரட்டூர் பகுதியில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் அறிஞர் அண்ணாவின் 118- வது பிறந்தநாள் விழா நிகழ்வில், வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்ச... மேலும் பார்க்க

CM Vijay: தமிழகத்தில் ரூ. 11,000 கோடி முதலீடு - முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்

முதல்வர் விஜய், தன்னுடைய முதல் அரசுமுறைப் பயணமாக லண்டன் சென்றிருக்கிறார். லண்டன் சென்றவர், கடந்த சனிக்கிழமை, லண்டனில் நடிகரும், ரேஸருமான அஜித்குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தை முதல்வர் விஜய் தொடங்கி வ... மேலும் பார்க்க