செய்திகள் :

``இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை உரிய நேரத்தில் அறிவிப்போம்" - ஜி.கே.வாசன்

post image

"தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் ஆதரவு யாருக்கு என்பதை நிர்வாகிகளுடன் ஆலோசித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்" என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தல்

தருமபுரி மாவட்டம், அரூரில் நடந்த த.மா.கா நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "தருமபுரியை வறட்சி மாவட்டமாக அரசு அறிவிக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

யு.பி.ஐ பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கும் அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். தமிழகச் சட்டமன்றத்தில் சபாநாயகர் நேர்மையாகவும் நடுநிலையாகவும் செயல்படுகிறார்.

தமிழகத்தில் காவிரிப் படுகையில் 5 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க அமெரிக்க நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளதற்கு அனுமதி அளித்தால், விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படும். எனவே, இத்திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது.

ஜி.கே. வாசன்
ஜி.கே. வாசன்

தாராபுரம், மதுராந்தகம் தொகுதிக்கான இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை த.மா.கா தலைவர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசித்து உரிய நேரத்தில் அறிவிப்போம்" என்றார்.

US Fed வங்கியின் வட்டி விகித உயர்வை விரும்பாத ட்ரம்ப்; Upset-ல் பிற நாடுகளை குற்றம்சாட்டுவது என்ன?

நேற்று அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் 0.25% வட்டி விகித உயர்வை அறிவித்தது. இந்த வட்டி விகித உயர்வு வட்டியை 3.75-4% ரேஞ்சிற்குள் கொண்டுள்ளது. ஆனால், இந்த வரி விகித உயர்வு அமெரிக்க அதிபர்... மேலும் பார்க்க

`பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையை ஏற்கவில்லை என தைரியமாக சொன்னவர் எங்கள் தலைவர்!'- அமைச்சர் ரமேஷ்

தந்தை பெரியாரின் பிறந்த தினத்தையொட்டி மதுரை அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள பெரியாரின் சிலைக்கு அறநிலையத்துறைஅமைச்சர் ரமேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தி... மேலும் பார்க்க

'முதல்வர் விஜய்யின் லண்டன் பயணமும் கேள்விக்குறியான வெளிப்படைத்தன்மையும்!'

முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றிருந்தார். ஒரு வார பயணத்தை முடித்துவிட்டு இன்று சென்னை திரும்பியிருக்கிறார். இந்தப் பயணத்தில் கிட்டத்தட்ட 15,000 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்... மேலும் பார்க்க

"உங்களுக்கு கிடைக்கும் மரியாதையும், செல்வாக்கும் தகுதியானதே!" - மோடிக்கு புதின் பிறந்தநாள் வாழ்த்து

இன்று இந்தியப் பிரதமர் மோடியின் பிறந்தநாள்.மோடி, ரஷ்ய அதிபர் புதின் அரசியலையும் தாண்டி நல்ல நண்பர்கள்.கடந்த வாரம், ரஷ்ய அதிபர் புதின் டெல்லியில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா வந்திருந்... மேலும் பார்க்க

"எங்க அப்பா கோவக்காரர்; நான் திமுகவில் சேர்ந்துவிடுகிறேன் என்று சொன்னவர் துரை வைகோ.!"- கே.என் நேரு

மதிமுக எம்.பி துரை வைகோ நேற்று முன்தினம் (செப்.15) செய்தியாளர்களைச் சந்தித்தப்போது, “திமுக என்ன மன்னர் கட்சியா? அவர்கள் கொடுக்கும் பிச்சையை பெற்றுத்தான் எம்.பி. ஆக வேண்டுமா? தனது எம்.பி பதவி அப்படியே ... மேலும் பார்க்க

"ஒரு எம்பி பதவிக்காக திமுக உடன் கூட்டணி வைத்தார்கள்" - பிரேமலதாவுக்கு வன்னி அரசு பதிலடி

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்கு அமைச்சர் வன்னி அரசு பதிலடி கொடுத்திருக்கிறார். விசிக தலைவரும், எம்பியுமான திருமாவளவன் சமீபத்தில் கலந்துகொண்ட திருமண நிகழ்ச்சியில் பேசியபோது, "நீண்டகாலம் திமுகவோடு... மேலும் பார்க்க