செய்திகள் :

``தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் போல வேண்டுமென்று வடநாட்டில் ஏங்குகிறார்கள்"- அமைச்சர் செங்கோட்டையன்

post image

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் கரட்டூர் பகுதியில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் அறிஞர் அண்ணாவின் 118- வது பிறந்தநாள் விழா நிகழ்வில், வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார்.‌ அண்ணாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், ``தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் மேலை நாடுகளுக்குச் சென்று, 11,000 கோடி ரூபாய் அளவுக்கு தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான முதலீடுகளை ஈர்த்துள்ளார். தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக இருக்க வேண்டும், அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும்,

அமைச்சர் செங்கோட்டையன்

அதே நேரத்தில் சட்ட ஒழுங்கு பேணி காக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன், மக்களின் விருப்பங்களை பிரதிபலிக்கக்கூடிய முதலமைச்சராக விஜய் விளங்குகிறார். அனைத்து மாநிலங்களும் அவரை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றன. பிற மாநில மக்கள்கூட‌ தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களைப் போல முதலமைச்சர் கிடைக்க வேண்டும் என்று பேசுகின்றனர். இந்தி பேசும் மாநிலங்களில்கூட விஜய் அவர்களின் தாக்கம் அதிகமாக உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இடைத்தேர்தலில் வெற்றி என்பது முடிவு செய்யப்பட்ட ஒன்று. அதே நேரத்தில், வாக்கு வித்தியாசம் எந்த அளவுக்குப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்றார்.

CM Vijay: தமிழகத்தில் ரூ. 11,000 கோடி முதலீடு - முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்

முதல்வர் விஜய், தன்னுடைய முதல் அரசுமுறைப் பயணமாக லண்டன் சென்றிருக்கிறார். லண்டன் சென்றவர், கடந்த சனிக்கிழமை, லண்டனில் நடிகரும், ரேஸருமான அஜித்குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தை முதல்வர் விஜய் தொடங்கி வ... மேலும் பார்க்க

இடைத்தேர்தல் 2026: நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை அறிவித்த சீமான்! - யார் யார் தெரியுமா?

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தல் வருகிற அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல... மேலும் பார்க்க

`பரந்தூர் அருகே மதுரமங்கலத்தில் புதிய சிப்காட் தொழில் பூங்கா' - தமிழக அரசு எடுத்த முடிவு!

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவிருந்த சென்னையின் 2-வது புதிய பசுமை விமான நிலையத் திட்டத்திற்கு அப்பகுதி விவசாயிகளும் ஏகனாபுரம் மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர... மேலும் பார்க்க

``இன்றுமுதல் 4 நாள்களுக்கு வங்கிகள் இயங்காது" - ஐக்கிய வங்கிகள் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு!

வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாததைக் கண்டித்து, நாடு முழுவதும் சுமார் 8 லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று... மேலும் பார்க்க

தமிழகம் பின்னோக்கிச் சென்றுவிடக் கூடாது... கவனத்தில்கொள்வாரா முதல்வர்?

வேகமாக வளரும் மாநிலம் என பெயரெடுத்த தமிழ்நாடு 2024-25-ல் 15.98% ஜி.எஸ்.டி.பி (Gross State Domestic Product) வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஆனால், இந்த வளர்ச்சி அதே வேகத்தில் அரசின் கஜானாவிலும் பிரதிப... மேலும் பார்க்க

மதுராந்தகம் இடைத்தேர்தல்: 'வெளியூர் வேட்பாளர்களைக் களமிறக்கிய கழகங்கள்...' - பின்னணி என்ன?

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த வேகத்தில், வேட்பாளர்களையும் அறிவித்திருக்கின்றன த.வெ.க, தி.மு.க, அ.தி.மு.க. மதுராந்தகம் தொகுதிக்கு மூன்று த... மேலும் பார்க்க