செய்திகள் :

"சினிமாவில் நடித்தவர் இப்போது மக்கள் முன் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார்"- விஜய் குறித்து டிடிவி

post image

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்னையில் இன்று (செப்.15) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

அப்போது முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், "முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக பல்வேறு கருத்துகள் சமூக வலைதளங்களில் வந்துகொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் அது குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

முதல்வர் வந்த பிறகு என்ன முதலீடு செய்திருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டு பேசுவதுதான் நன்றாக இருக்கும். ஏற்கெனவே தவெக-வினர் அனுபவம் இல்லாதவர்கள். முதல்வர் விஜய் முதல் அக்கட்சியில் இருக்கும் அனைவருக்குமே அனுபவம் கிடையாது.

அவர்கள் எதிர்பாராத விதமாக ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் செயல்பாடு என்பது அவர்களுக்கு வாக்களித்தவர்கள்கூட ஏன் வாக்களித்தோம். தவறு செய்துவிட்டோம் என்று சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள்.

இந்த ஆட்சியாளர்கள் தலை, கால் புரியாமல் ஆடுவதை நிறுத்திவிட்டு இருக்கின்ற வரை சரியான முறையில் ஆட்சி செய்தால் அவர்களுக்கு அது நல்லது.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்

இல்லையென்றால் தமிழ்நாட்டு மக்கள் அவர்களுக்கு முடிவுரை எழுதுவார்கள். சினிமாவில் நடித்தவர் இப்போது மக்கள் முன் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். அவர் மக்களை ஏமாற்றுகிறார் என்பதை மக்களும் உணர்ந்துள்ளனர்" என்று விமர்சித்திருக்கிறார்.

BRICS: ஒன்றுகூடிய இந்தியா, சீனா, ரஷ்யா; ட்ரம்பிற்கு சொல்லும் Lesson! De Dollarisation புது வடிவிலா?

இந்தியாவின் தலைமையின் கீழ், டெல்லியில் 18-வது பிரிக்ஸ் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், தென்னாப்பிரி... மேலும் பார்க்க

'கணக்கு போட்டு காத்திருக்கும் கழகங்கள்!' - இடைத்தேர்தலில் பாமக-வின் ஆதரவு யாருக்கு?

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது. பெரிய கட்சிகள் அத்தனையும் தங்களின் நிலைப்பாட்டை அறிவித்துவிட்ட நிலையில், பாமக இன்னும் அமைதி காக்கிறது. நிலை... மேலும் பார்க்க

ஈரோடு: பேரறிஞர் அண்ணா 'விடுதலை' ஆசிரியராகப் பணியாற்றியபோது... குடும்பத்துடன் வாழ்ந்த இல்லம் | Photos

ஈரோட்டில் அறிஞர் அண்ணா பயன்படுத்திய பொருட்கள்ஈரோட்டில் அறிஞர் அண்ணா பயன்படுத்திய பொருட்கள்ஈரோட்டில் அறிஞர் அண்ணா பயன்படுத்திய பொருட்கள்ஈரோட்டில் அறிஞர் அண்ணா பயன்படுத்திய பொருட்கள்ஈரோட்டில் அறிஞர் அண்... மேலும் பார்க்க

"பதவி ஆசையால் கூட்டணியைவிட்டு வெளியே வந்ததாக ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள்" - திருமா காட்டம்

விசிக தலைவர் திருமாவளவன் சென்னையில் இன்று (செப்.15) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "மின்வெட்டு இருக்கிறது என்பது உண்மைதான். அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்தி இதனைச் சீர் செய்ய உரிய நடவடி... மேலும் பார்க்க

BRICS : `வயதுக்கு வந்துவிட்டதா' பிரிக்ஸ்? `டில்லிப் பிரகடனம்' - முழு அலசல்! | மணிவண்ணன் திருமலை

மணிவண்ணன் திருமலை, மேனாள் ஆசிரியர் , பிபிசி உலக சேவை, லண்டன்பிரிக்ஸுக்கு வயது 20 - அதன் செல்வாக்குக்கு? டில்லியில் நடந்து முடிந்த பிரிக்ஸ் நாடுகளின் 18வது உச்சி மாநாடு, இந்த மாதிரி மாநாடுகளின் முடிவில... மேலும் பார்க்க

Stalin: "ஸ்டாலினுக்கு வைரல் காய்ச்சல்" - திமுக முப்பெரும் விழாவை ஒத்திவைப்பதாக துரைமுருகன் அறிவிப்பு

இன்று மாலை சென்னை அறிவாலயத்தில் திமுக முப்பெரும் விழா நடைபெற இருந்தது.ஆனால், அது தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.சென்னையில் அண்ணா பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொள்ளவில்... மேலும் பார்க்க