செய்திகள் :

'உங்களிடம் மன்றாடிக் கேட்கிறேன்!'- நா தழுதழுக்க பேசி ஸ்டாலினிடம் கையெடுத்துக் கும்பிட்ட துரைமுருகன்

post image

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (செப்.19) சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் முப்பெரும் விழா நடைபெற்றது.

மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட காய்ச்சல் பாதிப்பு காரணமாக முப்பெரும் விழா தள்ளி வைக்கப்பட்ட நிலையில், நேற்று இந்த விழா நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய துரைமுருகன், " நீங்கள் உடல்நலத்தோடு இருப்பதில் எங்களுக்கு சுயநலம் உண்டு. உங்களை விட்டால் எங்களுக்கு வேறு கதி கிடையாது. எங்களுக்கு மட்டுமல்ல... தமிழ்நாட்டுக்கும் கதி கிடையாது. தமிழுக்கும் கதி கிடையாது.

திமுக முப்பெரும் விழா
திமுக முப்பெரும் விழா

இந்த இயக்கம் ஒன்றுதான் தமிழர்களைக் காக்கிறது. அந்தப் பொறுப்பை ஏற்றிருக்கிறீர்கள். உங்கள் உடல்நிலை முக்கியம். உங்களிடம் மன்றாடிக் கேட்கிறேன். கட்சிக்கு நீங்கள்தான் உயிர்நாடி. அதை நினைத்து உங்கள் உடல்நிலையைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று முப்பெரும் விழாவில் நா தழுதழுக்க, வார்த்தைகளால் மு.க.ஸ்டாலினிடம் கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டிருக்கிறார் துரைமுருகன்.

தொடர்ந்து விழாவில் பேசிய அவர், " நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதை முடிக்கின்ற ஆற்றல் இங்கு வந்திருக்கின்ற கழக தோழனுக்கு உண்டு. நாம் களத்தில் இருக்கிறோம், எத்தனையோ தேர்தல்களை பார்த்திருக்கிறோம், வெற்றி பெற்றிருக்கிறோம், வீழ்த்தியும் இருக்கிறோம், வாகை சூடி இருக்கிறோம். தேர்தலில் அது சகஜம்.

ஆனால் கண்ணுக்கு தெரியாத ஒரு மாயாவி போல் வந்த ஒன்று இங்கே நின்றுவிட்டது. இந்த மாயாவி தமிழ்நாட்டில் பரவி இருக்கிறது, ஆனால் இது வெகு நாளைக்கு நிற்காது. ஒருமுறை ஏமாந்துவிட்டால், இனி திமுககாரனை எந்த கொம்பனாலும் ஏமாற்ற முடியாது.

ஸ்டாலின் - திமுக
ஸ்டாலின் - திமுக

மன்னாதி மன்னனனை எல்லாம் தோற்கடித்த கட்சி. இடைத்தேர்தல் வருகிறது. இந்த களம் நமக்கு ஒரு முக்கியமான களம். இந்த களத்தில் நாம் வென்றாக வேண்டும். நீங்கள் பழைய திமுககாரனாக மாறுங்கள். திமுகக்காரர் என்றால் சாதாரணமானவர் அல்ல.

இந்தக் கட்சியை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்பதை இந்த தேர்தலில் காட்டியாக வேண்டும். எனக்கு என்ன செய்வீர்களோ தெரியாது.. போங்கள் காலில் விழுவீர்களோ, கையை பிடிப்பீர்களோ தெரியாது.. வெற்றியை நம்முடைய தலைவர் காலில் சேர்ப்பது தான் முக்கியம்” என்று பேசியிருக்கிறார்.

“முதல்வர், மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் மீண்டும் மீண்டும்...”- அன்புமணி காட்டம்!

சிப்காட், என்.எல்.சி சுரங்கத்திற்கு கூடுதல் நிலங்களை கையகப்படுத்த துடிப்பதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதுகுறித்து தவெக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், " கடலூர் மாவட்... மேலும் பார்க்க

தவெக: ``ரெட்டி கேங் துணையோடு ஆட்சி..!" - முதல்வர் விஜய்யை விமர்சிக்கும் அப்பாவு

தமிழ்நாட்டின் முதல்வர் ஜோசப் விஜய்க்கு தமிழ்நாட்டின் மீது எந்த அக்கறையும் இல்லை என முன்னாள் சபாநாயகர் அப்பாவு குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``தமிழ்நாட்டில் நவோதயா ... மேலும் பார்க்க

"ஒரு ரூபாய் செலவு செய்துவிட்டு, ஒரு லட்சம் ரூபாய்க்கு விளம்பரம் செய்றாங்க.!"- தவெகவை சாடிய இபிஎஸ்

சேலத்தில் நேற்று (செப்.19) நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் பேசிய அவர், " சத்துணவு திட்டத்தை கொண்டு வந்து சரி... மேலும் பார்க்க

தாய்மாமன் தங்க மோதிர திட்டம்: "உசிலம்பட்டிக்கு 'டிக்' அடித்த முதல்வர்" பின்னணி என்ன?

தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை வருகிற செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி தொடங்கப் போவதாக அரசு தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது. இந்த திட்டத்தை உசிலம்பட்டியில் வைத்து தொ... மேலும் பார்க்க

"துணை பொதுச்செயலாளர் பதவி வேண்டும் என்று என்னிடம் கேட்டார்"- ஆதவ் அர்ஜுனா குறித்து எடப்பாடி

சேலத்தில் நேற்று (செப்.19) நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கும் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவெக மீது பல்வேறு விமர்சனங்களை வைத்திருக்கிறார். அதே கூட்டத்தில் அமைச... மேலும் பார்க்க

'பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகத் திட்டம் ரத்து?' - அமைச்சர் ஆதவ் சூசகம்!

மதுராந்தகம் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வேலைகளில் தவெக முகாம் மும்முரமடைந்திருக்கிறது. தொகுதியில் நடந்த பாக முகவர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா,புதிய தலைமைச் செயலகம் திட்டம் குறித்தும் ... மேலும் பார்க்க