செய்திகள் :

"ஒரு ரூபாய் செலவு செய்துவிட்டு, ஒரு லட்சம் ரூபாய்க்கு விளம்பரம் செய்றாங்க.!"- தவெகவை சாடிய இபிஎஸ்

post image

சேலத்தில் நேற்று (செப்.19) நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார்.

கூட்டத்தில் பேசிய அவர், " சத்துணவு திட்டத்தை கொண்டு வந்து சரித்திரம் படைத்தவர் எம்ஜிஆர். இன்று கூட காலை உணவு போடுகிறேன் என்கிறார்கள். ஏற்கனவே வந்த திட்டத்தையே தமிழக வெற்றிக் கழகம் அறிவித்திருக்கிறார்கள். அறிவிக்க தான் முடியும் புதிய திட்டத்தை இந்த ஆட்சியால் கொண்டு வர முடியாது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ஏற்கனவே ஜெயலலிதா தலைமையிலான அரசு இருந்தபோது காலை உணவு திட்டத்தை தனியார் பங்களிப்போடு கொண்டு வந்தோம். நான் முதலமைச்சராக இருந்த காலத்தில் தொடங்கி வைத்த பிறகு திமுக அந்த திட்டத்தை தொடர்ந்தார்கள்.

ஆட்சி மாற்றத்திற்கு பிறகு இந்த அரசாங்கம் வேற பெயரை வைத்து துவங்கி இருக்கிறது. ஆட்சிக்கு வந்ததில் இருந்து தலைகால் புரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். என்ன பேசுவதென்றே தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே அ.தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு பெயர்களை மாற்றி வைத்திருக்கிறார்கள். அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களுக்கு வேறு பெயர் சூட்டி மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்த திட்டங்களை கொண்டு வந்தது அ.தி.மு.க. ஆட்சிதான்.

ஏழை பெண்களின் திருமணத்திற்காக அதிமுக ஆட்சியில் அம்மாவின் சிந்தனையில் உதித்த அருமையான திட்டம் தாலிக்கு தங்கம் திட்டம். அந்த திட்டத்தின் பெயரையும் மாற்றியிருக்கிறார்கள். இன்னும் அந்த திட்டம் தொடங்கப்படவில்லை.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

மூலதனமே ரீல்ஸ்... ரீல்...தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை பொறுத்தவரை, ஏழைகளுக்கு ஒரு கிராம் தங்கம் வழங்குவதில் தவறு இல்லை. ஆனால், அந்த திட்டத்திற்கு எவ்வளவு பெரிய வடிவமைப்பு கொடுக்கிறார்கள் பாருங்கள். அதிமுக ஆட்சியில் தொடங்கபட்ட திட்டங்களுக்கு விளம்பரம் செய்ததில்லை.

ஆனால் தற்போது ஒரு ரூபாய் செலவு செய்துவிட்டு, ஒரு லட்சம் ரூபாய்க்கு விளம்பரம் செய்கிறார்கள். த.வெ.க. கட்சியின் மூலதனமே ரீல்ஸ்... ரீல்... இதை வைத்துக்கொண்டு ஆட்சிக்கு வந்துவிட்டார்கள்” என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்.

தவெக: ``ரெட்டி கேங் துணையோடு ஆட்சி..!" - முதல்வர் விஜய்யை விமர்சிக்கும் அப்பாவு

தமிழ்நாட்டின் முதல்வர் ஜோசப் விஜய்க்கு தமிழ்நாட்டின் மீது எந்த அக்கறையும் இல்லை என முன்னாள் சபாநாயகர் அப்பாவு குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``தமிழ்நாட்டில் நவோதயா ... மேலும் பார்க்க

'உங்களிடம் மன்றாடிக் கேட்கிறேன்!'- நா தழுதழுக்க பேசி ஸ்டாலினிடம் கையெடுத்துக் கும்பிட்ட துரைமுருகன்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (செப்.19) சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் முப்பெரும் விழா நடைபெற்றது. மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட காய்ச்சல் பாதிப்பு காரணமாக முப்பெரும் விழா தள்ளி வைக்கப... மேலும் பார்க்க

தாய்மாமன் தங்க மோதிர திட்டம்: "உசிலம்பட்டிக்கு 'டிக்' அடித்த முதல்வர்" பின்னணி என்ன?

தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை வருகிற செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி தொடங்கப் போவதாக அரசு தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது. இந்த திட்டத்தை உசிலம்பட்டியில் வைத்து தொ... மேலும் பார்க்க

"துணை பொதுச்செயலாளர் பதவி வேண்டும் என்று என்னிடம் கேட்டார்"- ஆதவ் அர்ஜுனா குறித்து எடப்பாடி

சேலத்தில் நேற்று (செப்.19) நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கும் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவெக மீது பல்வேறு விமர்சனங்களை வைத்திருக்கிறார். அதே கூட்டத்தில் அமைச... மேலும் பார்க்க

'பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகத் திட்டம் ரத்து?' - அமைச்சர் ஆதவ் சூசகம்!

மதுராந்தகம் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வேலைகளில் தவெக முகாம் மும்முரமடைந்திருக்கிறது. தொகுதியில் நடந்த பாக முகவர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா,புதிய தலைமைச் செயலகம் திட்டம் குறித்தும் ... மேலும் பார்க்க

'ரிசைன் பண்ணுங்க; கல்லூரி முடித்த இளம்பெண்ணை நிறுத்தி உங்களை தோற்கடிப்போம்!'-எடப்பாடிக்கு ஆதவ் சவால்

மதுராந்தகம் தொகுதியின் இடைத்தேர்தலுக்காக தவெகவின் முக்கியஸ்தர்கள் அந்த தொகுதியில் முகாமிட்டிருக்கின்றனர். தொகுதியில் நடந்த பாக முகவர்கள் கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜூனா, எடப்பாடி பழனிசாமியை கடுமையாக வி... மேலும் பார்க்க