செய்திகள் :

"எனக்கு போன் பண்ணாரு; நான் 'அதை' எதிர்பார்க்கவே இல்ல" - முதல்வர் விஜய் குறித்து விஜய் சேதுபதி

post image

தற்போது தமிழில் பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியின் வீக் எண்ட் எபிசோட் ஒன்றில், பிக்பாஸ் தமிழ் தொகுப்பாளர் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி நாற்காலி குறித்துப் பேசியிருந்தார்.

அவர் தமிழ்நாடு முதலமைச்சர் விஜயைத்தான் சாடுகிறார் என்று சமூக வலைதளங்களில் விஜய் சேதுபதிக்கு ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்டுகள்.

இந்த நிலையில், பத்தா திரைப்பட நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி விஜய் குறித்துப் பேசியிருக்கிறார்.
முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

விஜய் சேதுபதி மேடையில் பேசும் போது, “சஞ்சய் பிறந்தநாளுக்கு போன் பண்ணி வாழ்த்து சொல்லியிருந்தேன். அப்போ, அவர் (விஜய்) எனக்கு போன் பண்ணி, ‘ரொம்ப நன்றி நண்பா. அவன் ரொம்ப சந்தோஷமா இருந்தான்’னு சொன்னார். நான் அதை எதிர்பார்க்கவே இல்லை.

ஏன்னா, அவரே ஒரு பெரிய சூப்பர் ஸ்டார். அவர் மகன் சஞ்சய்க்கு என்னைப் பிடிச்சிருக்குங்கறது எனக்குப் பெரிய ஆச்சர்யம்.

நான் அவனிடமே கேட்டேன். ‘என்னடா உன் வீட்டிலேயே எவ்வளவு பெரிய ஆள் வச்சிருக்க’னு.

அவன் ரொம்ப தங்கமான பையன். அவனோட படமும் இங்கே நம்ம படத்தோடு வருது. அவன் ஷூட் பண்ணும்போது நான் அவன் செட்டுக்குப் போயிருந்தேன்.

எனக்கு அவனை ரொம்ப பிடிக்கும். ரொம்ப கியூட் ஃபெல்லோ அவன்.

அப்போ என்னோட ஃபிரெண்ட் ரோகன் ஜனநாயகன் படத்தில் நடிச்சுட்டு இருந்தான். நான் சஞ்சய் செட்டுக்குப் போனது தெரிஞ்சதும், ரோகனைக் கட்டுப்பிடிச்சு, நான் இதைக் கொடுத்ததா சொல்லுன்னு சொல்லி அனுப்பினார் அவர்.

அது அவரோட அன்பு” என்று கூறியிருக்கிறார்.

"குறும்படங்களுக்கான தளம் இது'' - இயக்குநர் பத்ரி வெங்கடேஷின் மகள் தீக்ஷாவின் முன்னெடுப்பு!

குறும்படங்கள் இன்று பல இயக்குநர்களுக்கு சினிமாவில் முகவரியை தேடி தருகிறது. தற்போது தீக்ஷா என்பவர் குறும்பட திரையிடல்களுக்காகவே, 'தி திரை ஆன்சம்பிள்' என்கிற பெயரில் பிரத்யேகமாக ஒரு தளத்தை உருவாக்கியிரு... மேலும் பார்க்க

The Dark Heaven Review: அமானுஷ்யம், மர்மப் புத்தகம், துப்பறியும் களம் - ஆனாலும் சொதப்புவது எங்கே?

25 வருடங்களுக்கு முன்பு நூலகத்தில் பணியாற்றிய தன் அப்பாவின் மரணத்துக்குக் காரணமாக இருந்த 'டார்க் ஹெவன்' புத்தகத்தைப் பற்றி அறிந்துகொள்ள தென்காசி மாவட்டம், மேக்கரைக்கு வருகிறார் அவரின் மகள். அங்கே அவரு... மேலும் பார்க்க

என்ன விலை விமர்சனம்: `சாமானியன் vs அரசு' - முக்கியமான கேள்விகளை எழுப்பும் படைப்பு ஏமாற்றுவது எங்கே?

ராமேஸ்வரம் தீவின் அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் காணிக்கையாகக் கடலில் வீசும் சில்லறைகளைச் சேகரிக்கும் தொழிலைச் செய்து வருகிறார் தவசி (கருணாஸ்). மனைவி, பிள்ளைகள், தங்கையுடன் வறுமையில் வாழ்ந்து வரு... மேலும் பார்க்க

Paris Cafe Review: ஆணவக்கொலை பற்றிப் பேசும் கஃபே; ஆனால் இந்த அதீத நாடகத்தன்மை தேவைதானா?

அமெரிக்காவின் போஸ்டன் நகரில் வசித்து வரும் ஒலிக்கு (அர்ச்சனா) ஓர் உயரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துகொள்ள அப்பா கௌதம் (குரு சோமசுந்தரம்), அம்மா தாரா (அனுமோல்),... மேலும் பார்க்க

"நாங்கள் ஒரு மேடைக்கு சென்றால் கீபோர்டு ப்ளேயர் எழுந்து சென்றுவிடுவார்.!"- கானா வினோத்

2017 ஆம் ஆண்டு வெளியான 'மீசைய முறுக்கு’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து ‘மீசைய முறுக்கு 2’ படத்தை ஹிப் ஹாப் ஆதி இயக்கி, கதாநாயகனாக நடித்திருக்கிறார். சுந்தர் சி - கு... மேலும் பார்க்க

தி பாரடைஸ்:`நடிகை கயாடு லோஹர் ஏன் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில்லை?' - நடிகர் நானி பதில்!

நானி நடிப்பில், இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'தசரா'. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து நானி - ஸ்ரீகாந... மேலும் பார்க்க