செய்திகள் :

ட்ரம்ப் கையெழுத்து 'Done'; ரஷ்ய எண்ணெய் வாங்குவதால் இந்தியா மீது 100% வரி விதிக்கும் ரூட் Clear?

post image

‘ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குபவர்கள் எல்லாம் ரஷ்யா-உக்ரைன் போருக்கு நிதி அளிக்கின்றனர்’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார்.

ரஷ்யா மீது பல பொருளாதார தடைகள் விதித்து நெருக்கடி கொடுத்தது அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும். ஆனால், ரஷ்யா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி மூலம் மற்ற பொருளாதார தடைகளைச் சமாளித்து விடுகிறது.

இதற்குச் செக் வைக்கத்தான் அமெரிக்கா இப்போது ‘ரஷ்யா தடைகள் சட்டத்தை’ கொண்டுவந்துள்ளது. இந்தத் தடை சட்டம் ரஷ்யாவிற்கு மட்டுமல்ல... ஈரானுக்கும்தான்.

புதின் - ட்ரம்ப்
புதின் - ட்ரம்ப்

என்ன சொல்கிறது இந்தச் சட்டம்?

இந்தச் சட்டத்தின் மூலம், ரஷ்யாவுடன் எண்ணெய் வர்த்தகம் செய்யும் நாடுகள், அமெரிக்காவிற்கு ஏதேனும் ஏற்றுமதி செய்தால், அதற்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும்.

இந்தச் சட்டத்தை முதன்முதலில் ட்ரம்பிற்கு நெருக்கமான லிண்ட்சி ஓ. கிரஹாம் பரிந்துரைத்தார். அவர் காலமாகிவிட்டார். இதனால், அவர் நினைவாக, இந்தச் சட்டத்திற்கு அவருடைய பெயரே வைக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப் போட்ட கையெழுத்து

இந்தச் சட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம், அமெரிக்காவின் மேல்சபையான செனட்டில் 86-11 என ஒப்புதல் பெற்றது. இந்த வாரம் கீழ்சபையில் 262-159 வாக்குகள் என ஒப்புதல் பெற்றுள்ளது.

அடுத்ததாக, இது அமெரிக்க அதிபர் கையெழுத்திற்காகத்தான் காத்திருந்தது. அந்தக் கையெழுத்தையும் நேற்று (செப்டம்பர் 18) ட்ரம்ப் போட்டுவிட்டார்.

அதிபர் கையெழுத்திட்ட 30 நாள்களுக்குள் இந்தச் சட்டம் அமலுக்கு வரும்.

எந்த நாடுகள் பாதிக்கும்?

இந்தச் சட்டம் ரஷ்யா இயற்கை எரிவாயுவை 15 சதவீதத்திற்கும் குறைவாக இறக்குமதி செய்யும் நாடுகள், ரஷ்ய இறக்குமதியைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வரும் நாடுகள் மீது பாயாது.

ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யும் டாப் ஐந்து நாடுகள் சீனா, இந்தியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி மற்றும் அஜர்பைஜான்.

மதுரை: பள்ளி மாணவன் இறப்பு விவகாரத்தில் நீதி கேட்டு போராடியவர்கள் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு!

மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெரு பகுதியை சேர்ந்தவர் 11-ம் வகுப்பு பள்ளி மாணவன் தமிழ்ச்செல்வன். இவர் கடந்த வாரம் முட்புதர் குட்டை ஒன்றில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக காவல்த... மேலும் பார்க்க

’அறிவிக்கப்படாத மின்வெட்டால் பெரும் இடி விழுந்தது போல உள்ளது’ – கோவை தொழில் துறையினர் வேதனை!

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக ஏற்பட்டு வரும் மின் தடை காரணமாக, பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதுவரை மின் தடை பிரச்சனை இல்லாமல் இருந்து வந்த தொழில் நகரமான கோவையிலும் கடந்த 2 ந... மேலும் பார்க்க

"மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் யாருக்கும் பாமக ஆதரவு இல்லை!" - அன்புமணி 'ட்விஸ்ட்'

வருகிற அக்டோபர் 6-ஆம் தேதி, தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது.மதுராந்தகம் தொகுதியில் வன்னியர் சமூக மக்கள் அதிகம். இதனால், இந்தத் தேர்தலில் பாமக எந... மேலும் பார்க்க

மீனாட்சி அம்மன் கோயில்: 'புனித நீர்தெளிப்பு, நீதிபதி அவமதிப்பு?' - அரசு நியமன அர்ச்சகர்கள் சங்கம்

'புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழுக்கு வாய்ப்பளிக்கப்பட்டதா? நீதிபதி அலட்சியப்படுத்தப்பட்டாரா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்' என்று அர்ச்சகர் பய... மேலும் பார்க்க

“இந்தி வேண்டாம் என்பதால் தமிழ்நாடு தனிநாடு ஆகவில்லை; தனித்தன்மையுடன் இயங்குகிறது” - உதயநிதி

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்."தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் வேண்டாம்; தேவைப்பட்டால், சிறப்புச் சட்டமன்றக் கூட்டத்தொடர் க... மேலும் பார்க்க

'உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்...' - முதல்வர் விஜய்யின் இடைத்தேர்தல் பிரசார பிளான் என்ன?

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் தொடங்கியிருக்கிறது. தவெக சார்பில் இரண்டு தொகுதிகளிலும் முதலமைச்சர் விஜய்யே களமிறங்கி பிரசாரம் செய்யவிருக்கிறார். இடைத்தேர்தலும் முதல்வர் விஜ... மேலும் பார்க்க