செய்திகள் :

மதுரை: பள்ளி மாணவன் இறப்பு விவகாரத்தில் நீதி கேட்டு போராடியவர்கள் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு!

post image

மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெரு பகுதியை சேர்ந்தவர் 11-ம் வகுப்பு பள்ளி மாணவன் தமிழ்ச்செல்வன். இவர் கடந்த வாரம்  முட்புதர் குட்டை ஒன்றில் இறந்த நிலையில் சடலமாக  மீட்கப்பட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் பள்ளி மாணவன் தமிழ்ச்செல்வன் மரணத்தை கொலை வழக்காக மாற்ற வேண்டும், விசாரணை அதிகாரியை உடனடியாக மாற்ற வேண்டும், விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளிகளை  கைது செய்ய வேண்டும் என கோரி ஒரு வாரமாக அவரது உடலை வாங்க மறுத்து அவரது குடும்பத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று பள்ளி மாணவன் தமிழ்செல்வனுக்கு நீதி கேட்டு மதுரை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு  இந்திய மாணவர் சங்கத்தினர்   போராட்டம் நடத்த முயன்றதால் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயில் கதவினை பூட்டிய நிலையில்

அவ்வமைப்பை சேர்ந்த இளைஞர்கள் பூட்டப்பட்டிருந்த  கதவுகள் மீது ஏறி குதித்து ஆட்சியர் அலுவலகத்துக்குள்  சரமாரியாக ஓடி வந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்

இதையடுத்து துணை ஆணையர் கார்த்திக் தலைமையில் காவல்துறையினர்  பேச்சுவார்த்தை நடத்தியபோதும் கலைந்து செல்லாத நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து இழுத்துச் சென்றனர்.

இதனால் காவல்துறையினருக்கும் இளைஞர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மேலும் ஆட்சியர் அலுவலகம் வளாகத்திற்குள் அமர்ந்து நீதி வேண்டும் என்கிற கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடையே  காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கலைந்து செல்லாததால் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கை,கால்களை பிடித்து தூக்கி சென்று பேருந்துகளில் ஏற்றி கைது செய்து அழைத்து சென்றனர்.

காவல் துறை அனுப்பியுள்ள சம்மன்

கைது நடவடிக்கையின் போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் கடும் தள்ளுமுள்ளும் வாக்குவாதமும் ஏற்பட்டது.

கைது செய்த 52 பேரையும் தனியார் மண்டபத்தில் அடைத்த வைத்த போலீசார் அவர்கள் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த தல்லாக்குளம் காவல் நிலைய போலீசார் மூன்று நாட்கள் நேரில் ஆஜராக வேண்டுமென சம்மன் அனுப்பியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ட்ரம்ப் கையெழுத்து 'Done'; ரஷ்ய எண்ணெய் வாங்குவதால் இந்தியா மீது 100% வரி விதிக்கும் ரூட் Clear?

‘ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குபவர்கள் எல்லாம் ரஷ்யா-உக்ரைன் போருக்கு நிதி அளிக்கின்றனர்’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார்.ரஷ்யா மீது பல பொருளாதார தடைகள் விதித்து நெருக்க... மேலும் பார்க்க

’அறிவிக்கப்படாத மின்வெட்டால் பெரும் இடி விழுந்தது போல உள்ளது’ – கோவை தொழில் துறையினர் வேதனை!

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக ஏற்பட்டு வரும் மின் தடை காரணமாக, பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதுவரை மின் தடை பிரச்சனை இல்லாமல் இருந்து வந்த தொழில் நகரமான கோவையிலும் கடந்த 2 ந... மேலும் பார்க்க

"மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் யாருக்கும் பாமக ஆதரவு இல்லை!" - அன்புமணி 'ட்விஸ்ட்'

வருகிற அக்டோபர் 6-ஆம் தேதி, தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது.மதுராந்தகம் தொகுதியில் வன்னியர் சமூக மக்கள் அதிகம். இதனால், இந்தத் தேர்தலில் பாமக எந... மேலும் பார்க்க

மீனாட்சி அம்மன் கோயில்: 'புனித நீர்தெளிப்பு, நீதிபதி அவமதிப்பு?' - அரசு நியமன அர்ச்சகர்கள் சங்கம்

'புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழுக்கு வாய்ப்பளிக்கப்பட்டதா? நீதிபதி அலட்சியப்படுத்தப்பட்டாரா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்' என்று அர்ச்சகர் பய... மேலும் பார்க்க

“இந்தி வேண்டாம் என்பதால் தமிழ்நாடு தனிநாடு ஆகவில்லை; தனித்தன்மையுடன் இயங்குகிறது” - உதயநிதி

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்."தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் வேண்டாம்; தேவைப்பட்டால், சிறப்புச் சட்டமன்றக் கூட்டத்தொடர் க... மேலும் பார்க்க

'உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்...' - முதல்வர் விஜய்யின் இடைத்தேர்தல் பிரசார பிளான் என்ன?

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் தொடங்கியிருக்கிறது. தவெக சார்பில் இரண்டு தொகுதிகளிலும் முதலமைச்சர் விஜய்யே களமிறங்கி பிரசாரம் செய்யவிருக்கிறார். இடைத்தேர்தலும் முதல்வர் விஜ... மேலும் பார்க்க