செய்திகள் :

’அறிவிக்கப்படாத மின்வெட்டால் பெரும் இடி விழுந்தது போல உள்ளது’ – கோவை தொழில் துறையினர் வேதனை!

post image

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக ஏற்பட்டு வரும் மின் தடை காரணமாக, பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதுவரை மின் தடை பிரச்சனை இல்லாமல் இருந்து வந்த தொழில் நகரமான கோவையிலும் கடந்த 2 நாட்களாக மின் வெட்டு தலைதூக்கி வருகிறது. முன்னறிவிப்பு இன்றி அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் தொழில் பாதிப்பு ஏற்படுவதாக தொழில் துறையினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் (டாக்ட்) தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது, “கடந்த பல நாட்களாக தமிழகம் எங்கும் மின் தடையால் பொதுமக்களும், தொழில் முனைவோர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வந்தனர். ஆனாலும்  கோவை மாவட்டத்தில் பெரிய பாதிப்பு இல்லாமல் இருந்த நிலையில், தமிழகத்தில் மின்வெட்டு சரி செய்யப்பட்டதாக மின்சார வாரியமும், அமைச்சர்களும் தெரிவித்து வந்தனர். இந்த  நிலையில் கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக  அறிவிக்கப்படாமல் சில துணை மின் நிலையங்களில் 10 நிமிடங்கள் முதல் 20 நிமிடம் வரை ஒரு நாளைக்கு பத்து முறைக்கு மேல் மின் நிறுத்தமும், சில துணை மின் நிலையங்களில் ஒரு மணி நேரமும் முதல் இரண்டு மணி நேரம் மின் நிறுத்தம் என பல மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டால் தொழில் முனைவோர்களுக்கு பெரும் இடி விழுந்தது போல் ஆகி உள்ளது.

 ஜேம்ஸ்
ஜேம்ஸ்

கோவை தொழில் துறையினரை துயரத்தில் இருந்து மீட்பதற்கு மின்சார துறை அமைச்சர் முன் வரவேண்டும். அறிவிக்கப்படாத இரண்டு நாட்களாக தொடரும் மின்வெட்டால் பல்லாயிரக்கணக்கான ரூபாய் தொழில் முனைவோர்களுக்கு இழப்புகள் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே மின் கட்டணத்தில் நிலை கட்டண உயர்வு, பயன் படுத்தும் மின் கட்டண உயர்வு, மூலப்பொருள் விலை உயர்வு, தொழிலாளர் பற்றாக்குறை, வட மாநிலத் தொழிலாளிகளின் கூலி உயர்வு என்று எண்ணற்ற பிரச்சனைகளை சந்தித்து வரும் குறு சிறு தொழில்கள் இரண்டு நாட்களாக இருண்ட நாட்களாக மாற்றப்பட்டுள்ளன. ஓடி கொண்டிருக்கும் இயந்திரங்கள் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மிஷனரிகள் சடார் என்று நிறுத்தப்படுவதால், ஆட்டோமேட்டிக் இயந்திரங்களில் உள்ள உதிரி பாகங்கள் பயன்படுத்தப்படும் விலை உயர்ந்த டூல்கள் பாதிப்பு என பல நஷ்டங்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றோம்.

எக்காரணத்தைக் கொண்டும் தொழில்துறையின் மேல் மின் வெட்டை திணிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் உண்மையில் மின்பற்றாக்குறை ஏற்பட்டு மின்சாரம் வழங்குவதில் நெருக்கடி ஏற்படுமானால் மின்சார வாரியம் மின்வெட்டு செய்யும் பகுதிகளை முன்கூட்டியாக அறிவித்து, குறைந்தபட்சம் தொழில்துறையினரை இயந்திரங்களும் உதிரி பாகங்களும் பயன்படுத்தும் டூல்களையும் நஷ்டப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து இந்த மின்வெட்டு நடவடிக்கையில் இருந்து கோவையை பாதுகாக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மதுரை: பள்ளி மாணவன் இறப்பு விவகாரத்தில் நீதி கேட்டு போராடியவர்கள் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு!

மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெரு பகுதியை சேர்ந்தவர் 11-ம் வகுப்பு பள்ளி மாணவன் தமிழ்ச்செல்வன். இவர் கடந்த வாரம் முட்புதர் குட்டை ஒன்றில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக காவல்த... மேலும் பார்க்க

"மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் யாருக்கும் பாமக ஆதரவு இல்லை!" - அன்புமணி 'ட்விஸ்ட்'

வருகிற அக்டோபர் 6-ஆம் தேதி, தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது.மதுராந்தகம் தொகுதியில் வன்னியர் சமூக மக்கள் அதிகம். இதனால், இந்தத் தேர்தலில் பாமக எந... மேலும் பார்க்க

மீனாட்சி அம்மன் கோயில்: 'புனித நீர்தெளிப்பு, நீதிபதி அவமதிப்பு?' - அரசு நியமன அர்ச்சகர்கள் சங்கம்

'புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழுக்கு வாய்ப்பளிக்கப்பட்டதா? நீதிபதி அலட்சியப்படுத்தப்பட்டாரா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்' என்று அர்ச்சகர் பய... மேலும் பார்க்க

“இந்தி வேண்டாம் என்பதால் தமிழ்நாடு தனிநாடு ஆகவில்லை; தனித்தன்மையுடன் இயங்குகிறது” - உதயநிதி

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்."தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் வேண்டாம்; தேவைப்பட்டால், சிறப்புச் சட்டமன்றக் கூட்டத்தொடர் க... மேலும் பார்க்க

'உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்...' - முதல்வர் விஜய்யின் இடைத்தேர்தல் பிரசார பிளான் என்ன?

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் தொடங்கியிருக்கிறது. தவெக சார்பில் இரண்டு தொகுதிகளிலும் முதலமைச்சர் விஜய்யே களமிறங்கி பிரசாரம் செய்யவிருக்கிறார். இடைத்தேர்தலும் முதல்வர் விஜ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: நந்திகிராம் தொகுதியில் தேர்தல்; காங்கிரஸுக்கு மம்தா ஆதரவு - வேட்பாளர் திடீர் கைது!

மேற்கு வங்கத்தின் தற்போதைய முதலமைச்சர் சுவேந்து அதிகாரி பவானிபூர், நந்திகிராம் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டிலுமே வெற்றி பெற்றார்.இதில் பவானிபூர் தொகுதி என்பது மேற்கு வங்கத்தின் முன்னாள்... மேலும் பார்க்க