செய்திகள் :

மகளிர் T20I: `அதிக ரன்கள் குவித்தவர்...' - வரலாற்றுச் சாதனை படைத்த ஸ்மிருதி மந்தானா

post image

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, மகளிர் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் கிரிக்கெட் அரையிறுதியில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது அவர் இந்த மைல்கல்லை எட்டியிருக்கிறார். தற்சமயம் 4,765 ரன்களுடன் ஸ்மிருதி முதலிடத்தில் நிலைபெற்றுள்ள வேளையில், சுசி பேட்ஸ் 4,758 ரன்களுடன் அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ளார். சர்வதேச அளவில் ஸ்மிருதியின் இந்த அபார வளர்ச்சி, அவரது நீண்டகால அனுபவத்தை வெளிப்படுத்துகிறது.

ஸ்மிருதி மந்தானா
ஸ்மிருதி மந்தானா


இப்பட்டியலின் முன்னணி இடங்களில் நவீன கிரிக்கெட்டின் சிறந்த வீராங்கனைகள் வரிசைகட்டி நிற்கின்றனர். இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 4,287 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும், அவருக்கு அடுத்தபடியாக இலங்கை அணியின் கேப்டன் சாமரி அத்தபத்து 4,282 ரன்களுடனும், நியூசிலாந்தின் அதிரடி ஆட்டக்காரர் சோஃபி தேவடைன் 3,817 ரன்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

முன்னதாக இந்த மாத தொடக்கத்தில், துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற 2026 மகளிர் ஆசியக் கோப்பை குரூப்-ஏ ஆட்டத்தில் ஹாங்காங் அணிக்கு எதிராக விளையாடிய ஸ்மிருதி மந்தனா, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் மிதாலி ராஜின் சாதனையை முறியடித்து, அனைத்து சர்வதேச கிரிக்கெட் வடிவங்களிலும் சேர்த்து அதிக ரன்கள் குவித்த இந்திய வீராங்கனை என்ற புதிய சாதனையைப் படைத்தார். ஹாங்காங்கிற்கு எதிரான போட்டியில் 64 பந்துகளில் 124 ரன்கள் விளாசியதன் மூலம், மிதாலி ராஜ் வைத்திருந்த 10,868 ரன்கள் சாதனையை அவர் கடந்தார்.

ஸ்மிருதி மந்தானா
ஸ்மிருதி மந்தானா

தற்போது அனைத்து வடிவ மகளிர் சர்வதேச கிரிக்கெட்டிலும் அதிக ரன்கள் குவித்தவர்களில் ஸ்மிருதி மந்தனா 10,880 ரன்களுடன் முதலிடத்திலும், மிதாலி ராஜ் இரண்டாம் இடத்திலும், நியூசிலாந்தின் சுசி பேட்ஸ் (10,740 ரன்கள்) மூன்றாம் இடத்திலும், இங்கிலாந்தின் சார்லோட் எட்வர்ட்ஸ் (10,273 ரன்கள்) நான்காம் இடத்திலும், மேற்கிந்தியத் தீவுகளின் ஸ்டாஃபாணி கெய்லர் (10,007 ரன்கள்) ஐந்தாம் இடத்திலும் உள்ளனர்.

ஹாங்காங்கிற்கு எதிரான போட்டியில் ஸ்மிருதி மந்தனா எடுத்த 124 ரன்கள், மகளிர் டி20 ஆசியக் கோப்பை வரலாற்றிலேயே ஒரு வீராங்கனை பதிவு செய்த அதிகபட்ச தனிநபர் ரன்னாக அமைந்தது. மேலும், மகளிர் டி20 போட்டிகளில் சதம் விளாசிய இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையை ஹர்மன்பிரீத் கவுருடன், ஸ்மிருதி மந்தனா பகிர்ந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்; தமிழக வீராங்கனை இளவேனில் சாதனை

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இளவேனில் வாலறிவன் சோனம் மாஸ்கர், விதர்சா வினோத் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1,898 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. இதன் மூலம... மேலும் பார்க்க

ஆசிய விளையாட்டுகள்: சொகுசு கப்பலில் வீரர்கள்; தங்குமிட திட்டத்தில் சிக்கல்.. ஜப்பானின் முன்னெடுப்பு!

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் என்றாலே பிரமாண்டமான கிராமங்கள், வண்ணமயமான அணிவகுப்புகள் நினைவுக்கு வரும். ஆனால், 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஜப்பான், வழக்கமான நடைமுறைகளை மாற்றி யோசித்து புதி... மேலும் பார்க்க

`ஒரு நாள் விளம்பரத்தில் நடிக்க ரூ.2 கோடி?'- அதிகரிக்கும் இளம் கிரிக்கெட் வீரர் சூர்யவன்ஷி செல்வாக்கு

15 வயதில் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தனது செல்வாக்கை நிலைநாட்டி இருக்கும் வைபவ் சூர்யவன்ஷியின் புகழ், கடந்த ஐ.பி.எல் போட்டியைத் தொடர்ந்து உச்சத்தை தொட்டு இருக்கிறது. அவருக்கு இந்திய அணியில்கூட வாய்ப... மேலும் பார்க்க

'ஆடையின்றி கவர்ச்சி விளம்பரம்' - சிட்னி ஸ்வீனிக்கு எதிராக ஒன்று கூடும் விளையாட்டு வீராங்கனைகள்!

பிரபல ஹாலிவுட் நடிகையான சிட்னி ஸ்வீனி 'நோவிக்' என்கிற ஸ்போர்ட்ஸ் சார்ந்த நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் ஆடைகளின்றி விளையாட்டு வீராங்கனை பாத்திரத்தில் கவர்ச்சியாக நடித்திருக்கிறார். சமூகவலைதளங்களில் இந... மேலும் பார்க்க

'வரலாறு படைத்த தீரஜ் பொம்மதேவரா' - வில்வித்தை உலகக்கோப்பையில் தங்கம் வென்று அசத்தல்!

2026 வில்வித்தை உலகக்கோப்பை இறுதிப்போட்டியானது, மெக்சிகோவின் சால்டிலோவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஆண்கள் தனிநபர் 'ரிகர்வ்' பிரிவில் இந்திய வில்வித்தை வீரர் தீரஜ் பொம்மதேவரா வெற்றி பெற்றார். ... மேலும் பார்க்க

4 வயதில் நோய்; முடியாது என்ற வார்த்தையை தாண்டி… US Open சாம்பியன்! - அம்மாவுக்கு நன்றி சொன்ன Zverev

“உன்னால் முடியாது” என்ற வார்த்தைகள் ஒரு குழந்தையின் கனவை முடக்கிவிடலாம். ஆனால், அந்த வார்த்தைகளையே தாண்டி இன்று உலக டென்னிஸின் உச்சத்தைத் தொட்டிருக்கிறார் ஜெர்மனி வீரர் Alexander Zverev.2026 US Open ஆ... மேலும் பார்க்க