செய்திகள் :

'எண்ணெய்யில் பொறித்த மீன்; பார்சலில் ஈர வெங்காயம்'- விவசாயியிடம் லஞ்சமாக கேட்ட VAO பணியிடை நீக்கம்!

post image

கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், தேவர்மலை கிராம நிர்வாக அலுவலராக கார்த்திக் என்பவர் பணியில் இருந்து வருகிறார். அப்பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்ற விவசாயி வங்கியில் கடன் பெறுவதற்காக சிட்டா கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார். இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக், விவசாயியின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசி, 'விவசாய இடம் எங்கே உள்ளது?' என்று கேட்டு, அலுவலகத்திற்கு வருமாறு கூறியுள்ளார். அப்போது, தான் பாளையத்தில் உள்ளதாகவும், அரை மணி நேரத்தில் வி.ஏ.ஓ அலுவலகத்தில் வந்து சந்திப்பதாகவும் விவசாயி கூறியுள்ளார். அப்போது, கிராம நிர்வாக அலுவலர், 'பாளையம் பஸ் ஸ்டாண்டில் உள்ள பிரண்ட்ஸ் ஹோட்டலில் இரண்டு எண்ணெய்யில் பொறித்த மீன் வருவல், மீன் குழம்பு மற்றும் தனியாக ஈர வெங்காயம் பார்சல் செய்து வாங்கி வா. என் செல்லமில்ல..? பார்சல் கட்டி வாங்கி வா' என்று கேட்டதாக சொல்லப்படுகிறது. இதன் பிறகு விவசாயி தேவராஜின் மகன் செல்போனை வாங்கி கிராம நிர்வாக அலுவலரிடம் பேசியுள்ளார்.

vao

அப்போது, அந்த விவசாயியின் மகன், 'உங்களிடம் ஒரு டவுட் கேட்கலாமா? கிராம நிர்வாக அலுவலரே சொல்லுங்க' என்று கேட்டுள்ளார். வி.ஏ.ஓ-வும், 'சரி கேளு' என்று சொல்ல, 'கவர்மென்ட் உங்களுக்கு சம்பளம் தரவில்லையா? அரசாங்கம் உங்களிடம் இது போல் சிட்டா பட்டா கேட்டு விண்ணப்பித்தவர்களிடம் மீன் வறுவல் குழம்பு எல்லாம் வாங்கி தர சொல்லி கூறியுள்ளார்களா?' என கேட்டபோது, `எனக்கு எதுவும் வேண்டாம். நீங்கள் அலுவலகத்திற்கு வந்து சிட்டா வாங்கிக் கொள்ளுங்கள்' என்று வி.ஏ.ஓ பல்டி அடித்துள்ளார். 'நான் நேரடியாக வருகிறேன்' என்று கூறிய போது, 'நீங்கள் வர வேண்டாம். உங்கள் தந்தையை மட்டும் அலுவலகத்திற்கு அனுப்புங்கள்' என்று கூறியுள்ளார். அதற்கு தேவராஜின் மகன், 'இல்லை சார். நான் உங்களிடம் நேரடியாக சில கேள்விகளை கேட்க வேண்டும். நானே நேரடியாக வருகிறேன்' என்று சொன்னபோது, மீண்டும், 'நீங்கள் வர வேண்டாம். உங்கள் தந்தையை மட்டும் அனுப்பி வையுங்கள்' என்று கூறியுள்ளார். இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகவும் பரவி வருகிறது. எண்ணெயில் பொறித்த மீன் வறுவல் குழம்பு வாங்கி வர சொல்லி கிராம நிர்வாக அலுவலர் விவசாயியிடம் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்ததன் காரணமாக குளித்தலை சார்பு ஆட்சியர் அவரை தற்போது பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை: பகலில் மீன்கடைத் தொழிலாளி; இரவில் பெண்களின் உள்ளாடைகள் திருடன் - இளைஞர் சிக்கியது எப்படி?

நெல்லை மாநகரில் சமீப காலமாகவே வீடுகளில் கொடிகளில் காயப் போட்டிருந்த பெண்களின் உள்ளாடைகள் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக திருடு போய்க் கொண்டிருந்தன. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மகளிர் தங்கும் விடுத... மேலும் பார்க்க

”டூவீலரில் 229 கிலோ மீட்டர், திருட்டு நகையில் ஜாலி டூர்”- செயின் பறித்த நண்பர்கள் சிக்கியது எப்படி?!

தஞ்சாவூர் அருகே உள்ள மானோஜிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நிருபாமலர் இவரது கணவர் டாக்டர். கடந்த 8ம் தேதி மளிகை கடைக்கு சென்று விட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது, டூவீலரில் வந்த இருவர் நிருபாமலர் ... மேலும் பார்க்க

ஓசூர்: வழி கேட்பது போல் நடித்து பெண்களிடம் நகைப் பறிப்பு; சிக்கிய கர்நாடக தபால்காரர்!

காரில் வந்து வழிகேட்பது போல் நடித்து 4 பெண்களிடம் நகை பறித்த கர்நாடக மாநில தபால்காரர் கைது செய்யப்பட்ட சம்பவம், ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்க சங்கிலி பறிப்பு!கிருஷ்ணகிரி மாவட்டம் த... மேலும் பார்க்க

தொழிலதிபர் வீரமணி வழக்கு: ``20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த பாலியல் சுரண்டல்" - அதிர்ச்சி தகவல்!

பிரபல கிரானைட் தொழிலதிபர் ஆர். வீரமணி (85) சம்பந்தப்பட்ட போக்சோ (POCSO) வழக்கில், 2003-ம் ஆண்டுக்கும் முன்பிருந்தே பல சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் என்ற திடுக்கிடும் தகவல்... மேலும் பார்க்க

ChatGPT, ஏ.ஐ மூலம் தேர்வில் காப்பிடியத்த மும்பை ஐ.ஐ.டி மாணவர்: பிடிபட்டதால் விபரீத முடிவு!

மும்பை ஐ.ஐ.டியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர் சாஹில் வகோடே. எரிசக்தி அறிவியல் மற்றும் பொறியியல் துறையைச் சேர்ந்த சாஹில் வகோடே தேர்வின்போது விடைகளைக் கண்டரிய காப்பியடித்துள்ளார். அவர் இதற்காக தனது ம... மேலும் பார்க்க

புதுச்சேரி: பொய்ப் புகாரால் பெண்ணை பழிவாங்க நினைத்த முதியவர்! - போலீஸார் செய்த `சைலண்ட்’ சம்பவம்

புதுச்சேரி லாஸ்பேட்டை தாகூர் நகரைச் சேர்ந்தவர் கோபால். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஆர்.வி.ஜானகிராமனின் உதவியாளராகப் பணிபுரிந்த இவர், ஆட்சியாளர்கள், அரசு உயரதிகாரிகள், தனி நபர்கள் என அனைவரையும் விமர்சி... மேலும் பார்க்க