செய்திகள் :

ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்; தமிழக வீராங்கனை இளவேனில் சாதனை

post image

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இளவேனில் வாலறிவன் சோனம் மாஸ்கர், விதர்சா வினோத் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1,898 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

இதன் மூலம் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் அணிப் பிரிவில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது.

இளவேனில் வாலறிவன்
இளவேனில் வாலறிவன்

இந்தப் போட்டியில் சீனா 1,904.2 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை வென்றது. இந்த ஸ்கோர் புதிய உலக சாதனையாகவும் பதிவானது. போட்டியை நடத்தும் ஜப்பான் 1,897.1 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றது. இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான வித்தியாசம் வெறும் 0.9 புள்ளிகள்!

தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வாலறிவன், சோனம் மஸ்கர் மற்றும் விதர்சா வினோத் ஆகியோர் அடங்கிய இந்தியக் கூட்டணி தொடக்கம் முதலே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் வெள்ளிப்பதக்கத்தை வென்றிருக்கிறது.

யார் இந்த இளவேனில் வாலறிவன்?

தமிழ்நாட்டின் கடலூரில் பிறந்து, குஜராத்தின் அகமதாபாத்தில் வசிப்பவர். சிறு வயதில் தடகளம், பேட்மின்டன் என பல விளையாட்டுகளில் ஆர்வம் இருந்திருக்கிறது. ஆனால், அவருடைய வாழ்க்கையின் திசையை மாற்றியது 13 வயதில் கையில் கிடைத்த ஒரு ஏர் ரைஃபிள்.

துப்பாக்கிச் சுடுதலை முதலில் அறிமுகமாகிப் பார்த்தவர், பின்னர் அதிலேயே தீவிரமாகப் பயிற்சி பெறத் தொடங்கினார். ஜூனியர் பிரிவிலேயே சர்வதேச அளவில் தனது திறமையை வெளிப்படுத்தியவர், 2018-ல் ISSF Junior World Cup-ல் தங்கம் வென்றார்.

இளவேனில் வாலறிவன்
இளவேனில் வாலறிவன்

அடுத்த ஆண்டே, 2019 ISSF World Cup-ல் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் தங்கம் வென்று சர்வதேச கவனத்தைப் பெற்றார். தொடர்ந்து டோக்கியோ 2020 மற்றும் பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

இப்போது, ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்காக வெள்ளிப் பதக்கம் வென்ற அணியின் முக்கிய வீராங்கனையாக மீண்டும் கவனம் பெற்றிருக்கிறார் இளவேனில்.

13 வயதில் தொடங்கிய அந்தப் பயணம்… இன்று ஆசிய விளையாட்டின் பதக்க மேடையில் நிற்க வைத்திருக்கிறது!

மகளிர் T20I: `அதிக ரன்கள் குவித்தவர்...' - வரலாற்றுச் சாதனை படைத்த ஸ்மிருதி மந்தானா

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, மகளிர் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து புதிய வரலாற்றுச் சாதனை படைத்... மேலும் பார்க்க

ஆசிய விளையாட்டுகள்: சொகுசு கப்பலில் வீரர்கள்; தங்குமிட திட்டத்தில் சிக்கல்.. ஜப்பானின் முன்னெடுப்பு!

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் என்றாலே பிரமாண்டமான கிராமங்கள், வண்ணமயமான அணிவகுப்புகள் நினைவுக்கு வரும். ஆனால், 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஜப்பான், வழக்கமான நடைமுறைகளை மாற்றி யோசித்து புதி... மேலும் பார்க்க

`ஒரு நாள் விளம்பரத்தில் நடிக்க ரூ.2 கோடி?'- அதிகரிக்கும் இளம் கிரிக்கெட் வீரர் சூர்யவன்ஷி செல்வாக்கு

15 வயதில் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தனது செல்வாக்கை நிலைநாட்டி இருக்கும் வைபவ் சூர்யவன்ஷியின் புகழ், கடந்த ஐ.பி.எல் போட்டியைத் தொடர்ந்து உச்சத்தை தொட்டு இருக்கிறது. அவருக்கு இந்திய அணியில்கூட வாய்ப... மேலும் பார்க்க

'ஆடையின்றி கவர்ச்சி விளம்பரம்' - சிட்னி ஸ்வீனிக்கு எதிராக ஒன்று கூடும் விளையாட்டு வீராங்கனைகள்!

பிரபல ஹாலிவுட் நடிகையான சிட்னி ஸ்வீனி 'நோவிக்' என்கிற ஸ்போர்ட்ஸ் சார்ந்த நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் ஆடைகளின்றி விளையாட்டு வீராங்கனை பாத்திரத்தில் கவர்ச்சியாக நடித்திருக்கிறார். சமூகவலைதளங்களில் இந... மேலும் பார்க்க

'வரலாறு படைத்த தீரஜ் பொம்மதேவரா' - வில்வித்தை உலகக்கோப்பையில் தங்கம் வென்று அசத்தல்!

2026 வில்வித்தை உலகக்கோப்பை இறுதிப்போட்டியானது, மெக்சிகோவின் சால்டிலோவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஆண்கள் தனிநபர் 'ரிகர்வ்' பிரிவில் இந்திய வில்வித்தை வீரர் தீரஜ் பொம்மதேவரா வெற்றி பெற்றார். ... மேலும் பார்க்க

4 வயதில் நோய்; முடியாது என்ற வார்த்தையை தாண்டி… US Open சாம்பியன்! - அம்மாவுக்கு நன்றி சொன்ன Zverev

“உன்னால் முடியாது” என்ற வார்த்தைகள் ஒரு குழந்தையின் கனவை முடக்கிவிடலாம். ஆனால், அந்த வார்த்தைகளையே தாண்டி இன்று உலக டென்னிஸின் உச்சத்தைத் தொட்டிருக்கிறார் ஜெர்மனி வீரர் Alexander Zverev.2026 US Open ஆ... மேலும் பார்க்க