செய்திகள் :

நெல்லை: பகலில் மீன்கடைத் தொழிலாளி; இரவில் பெண்களின் உள்ளாடைகள் திருடன் - இளைஞர் சிக்கியது எப்படி?

post image

நெல்லை மாநகரில் சமீப காலமாகவே வீடுகளில் கொடிகளில் காயப் போட்டிருந்த பெண்களின் உள்ளாடைகள் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக திருடு போய்க் கொண்டிருந்தன. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மகளிர் தங்கும் விடுதி வளாகத்தில் கொடிகளில் காயப் போட்டிருந்த உள்ளாடைகள் மட்டும் குறிவைத்து திருடப்பட்டு வந்துள்ளது. பாளையங்கோட்டை என்.ஜி.ஓ ’பி’ காலனியைச் சேர்ந்தவர் வள்ளி செல்வம். இவர், பெருமாள்புரம் ‘சி’ காலனியில் மகளிர் தங்கும் விடுதி ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 2 நாள்களுக்கு முன்பு கொடிகளில் பெண்களின் பிற துணிகள் தவிர உள்ளாடைகள் மட்டும் காணாமல் போயிருந்தது. ஒரு உள்ளாடை கூட இல்லாத நிலையில் பெண்கள், விடுதியின் வார்டன் கோபிஷாவிடம் கூறியுள்ளனர்.

திருநெல்வேலி

அதிர்ச்சி அடைந்த கோபிஷா, விடுதியின் உரிமையாளர் வள்ளி செல்வத்திடம் கூறியுள்ளார். விடுதியின் சி.சி.டி.வி கேமரா காட்சிகளை பார்த்த போது  அதிகாலை சுமார் 4 மணியளவில் இளைஞர் ஒருவர் இந்த விடுதியின் காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதித்து உள்ளே நுழைகிறார். ஆனால், முகமூடி எதுவும் அணியவில்லை. அவர், அங்குள்ள கொடிகளில் பெண்கள் துவைத்துக் காயப் போட்டிருந்த உள்ளாடைகளை ஒவ்வொன்றாக எடுத்து சேகரித்து அதனை ஒரு மூட்டையாகக் கட்டிக் கொண்டு பைக்கில் அங்கிருந்து தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதனையடுத்து விடுதி உரிமையாளர் வள்ளி செல்வம் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விடுதியிலுள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகள் மட்டுமல்லாமல் துணிகளை மூட்டையாகக் கட்டிக் கொண்டு பைக்கில் அந்த நபர் திரும்பிச் சென்ற பகுதிகளிலுள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். அப்பகுதியில் அதே நபர் இதே போல இரண்டு காம்பவுண்ட் வீடுகளிலும் பெண்களின் உள்ளாடைகளை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இத்திருட்டுச் சம்பவம் தொடர்பாக மேலப்பாளையத்தைச் சேர்ந்த தமீமுன் அன்சாரிதான் இந்த உள்ளாடைகள் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. காலை நேரங்களில் அங்குள்ள ஒரு மீன் இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்தது தெரிய வந்தது.

பெருமாள்புரம் காவல் நிலையம்

மற்ற நேரங்களில் இயல்பாக இருக்கும் அவர், பெண்களின் உள்ளாடைகளைப் பார்த்தால் மட்டும் அதை திருடி பத்திரப்படுத்தும் மனைநிலை கொண்டவர் என போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரை கைது செய்யும் அன்று கூட மேலப்பாளையம் பகுதியிலுள்ள ஒரு மகளிர் விடுதியில் உள்ளாடைகளை திருடியுள்ளார். அவரது வீட்டில் 4 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த உள்ளாடைகளை போலீஸார் மீட்டு மகளிர் விடுதிகளில் ஒப்படைத்தனர். பின்னர், அவரை கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  

'எண்ணெய்யில் பொறித்த மீன்; பார்சலில் ஈர வெங்காயம்'- விவசாயியிடம் லஞ்சமாக கேட்ட VAO பணியிடை நீக்கம்!

கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், தேவர்மலை கிராம நிர்வாக அலுவலராக கார்த்திக் என்பவர் பணியில் இருந்து வருகிறார். அப்பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்ற விவசாயி வங்கியில் கடன் பெறுவதற்காக சிட்டா கேட்டு விண்ணப்ப... மேலும் பார்க்க

”டூவீலரில் 229 கிலோ மீட்டர், திருட்டு நகையில் ஜாலி டூர்”- செயின் பறித்த நண்பர்கள் சிக்கியது எப்படி?!

தஞ்சாவூர் அருகே உள்ள மானோஜிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நிருபாமலர் இவரது கணவர் டாக்டர். கடந்த 8ம் தேதி மளிகை கடைக்கு சென்று விட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது, டூவீலரில் வந்த இருவர் நிருபாமலர் ... மேலும் பார்க்க

ஓசூர்: வழி கேட்பது போல் நடித்து பெண்களிடம் நகைப் பறிப்பு; சிக்கிய கர்நாடக தபால்காரர்!

காரில் வந்து வழிகேட்பது போல் நடித்து 4 பெண்களிடம் நகை பறித்த கர்நாடக மாநில தபால்காரர் கைது செய்யப்பட்ட சம்பவம், ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்க சங்கிலி பறிப்பு!கிருஷ்ணகிரி மாவட்டம் த... மேலும் பார்க்க

தொழிலதிபர் வீரமணி வழக்கு: ``20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த பாலியல் சுரண்டல்" - அதிர்ச்சி தகவல்!

பிரபல கிரானைட் தொழிலதிபர் ஆர். வீரமணி (85) சம்பந்தப்பட்ட போக்சோ (POCSO) வழக்கில், 2003-ம் ஆண்டுக்கும் முன்பிருந்தே பல சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் என்ற திடுக்கிடும் தகவல்... மேலும் பார்க்க

ChatGPT, ஏ.ஐ மூலம் தேர்வில் காப்பிடியத்த மும்பை ஐ.ஐ.டி மாணவர்: பிடிபட்டதால் விபரீத முடிவு!

மும்பை ஐ.ஐ.டியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர் சாஹில் வகோடே. எரிசக்தி அறிவியல் மற்றும் பொறியியல் துறையைச் சேர்ந்த சாஹில் வகோடே தேர்வின்போது விடைகளைக் கண்டரிய காப்பியடித்துள்ளார். அவர் இதற்காக தனது ம... மேலும் பார்க்க

புதுச்சேரி: பொய்ப் புகாரால் பெண்ணை பழிவாங்க நினைத்த முதியவர்! - போலீஸார் செய்த `சைலண்ட்’ சம்பவம்

புதுச்சேரி லாஸ்பேட்டை தாகூர் நகரைச் சேர்ந்தவர் கோபால். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஆர்.வி.ஜானகிராமனின் உதவியாளராகப் பணிபுரிந்த இவர், ஆட்சியாளர்கள், அரசு உயரதிகாரிகள், தனி நபர்கள் என அனைவரையும் விமர்சி... மேலும் பார்க்க