செய்திகள் :

'ரஷ்ய தடைச் சட்டத்திற்கு நன்றி; பல மாற்றங்கள் வரலாம்'- ட்ரம்பிடம் பேசிய பின் ஜெலன்ஸ்கி சொல்வது என்ன?

post image

2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியது. இன்னும் அது தொடர்ந்துகொண்டிருக்கிறது.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை பொருளாதாரத் தடை போன்ற நெருக்கடிகளை ரஷ்யாவிற்குக் கொடுத்தும் இந்தப் போர் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

சமீபத்தில் கூட, இந்தப் போரை நிறுத்த ரஷ்யாவிற்கு நெருக்கடி கொடுக்க, அமெரிக்கா ‘ரஷ்ய தடைச் சட்டத்தை’ அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், நேற்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். அது குறித்துத் தனது எக்ஸ் பக்கத்தில் ஜெலன்ஸ்கி...
ஜெலன்ஸ்கி பதிவு
ஜெலன்ஸ்கி பதிவு

“நான் அதிபர் ட்ரம்பிடம் பேசினேன். இது ஒரு முக்கியமான உரையாடல். பல விஷயங்கள் குறித்து விரிவாகப் பேசினோம்.

நியூயார்க்கில் நேரில் சந்தித்துப் பேசப்போகிறோம். இந்தச் சந்திப்பு பல மாற்றங்களைக் கொண்டுவரலாம். தற்போது ஒரு நல்ல ராஜதந்திர முன்னேற்றம் சாத்தியமாகியுள்ளது.

போர் தீவிரத்தைக் குறைப்பதற்கான வழிகள் மற்றும் அடிப்படைப் பாதுகாப்புப் பிரச்சினைகளான எரிசக்தி பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு மற்றும் மனித உயிர்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றை எதிர்கொள்வதற்கான ஐடியாக்கள் எங்களிடம் உள்ளன.

இதற்காக, நாங்கள் அமெரிக்கக் குழுவுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். மிகவும் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருக்கிறோம்.

லின்ட்சே கிரகாம் மசோதாவில் கையெழுத்திட்டுச் சட்டமாக்கியதற்காக அமெரிக்க அதிபருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டேன்.

அமைதி நிலவ வேண்டும் என்பதில் நாங்கள் அனைவரும் ஒரே கருத்தைக் கொண்டுள்ளோம்.

உக்ரைனுடன் இணைந்து நிற்கும் அனைவருக்கும் நன்றி! உதவிக்கரம் நீட்டும் அனைவருக்கும் நன்றி!” என்று பதிவிட்டுள்ளார்.

`பொதுச் செயலாளர் பதவியை அவருக்காக வைத்திருக்கிறோம்!’ - புதிய கட்சியைத் தொடங்கிய அஜித் ரசிகர்கள்

திரைப்பட நடிகராக இருந்த விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து, 2026 தேர்தலில் ஆட்சியைப் பிடித்து முதலமைச்சர் பதவியைக் கைப்பற்றியிருக்கிறார். சினிமாவில் நடிகர் விஜய், அஜித் மட்டுமல்ல, அவரது... மேலும் பார்க்க

அமெரிக்கா செல்லும் ஈரான் அதிபர் - எதற்கு? ட்ரம்ப் வைத்திருக்கும் 'மூன்று' ஆப்ஷன்கள்!

இன்னும் ஆறு நாட்களில் ஈரான் போர் தொடங்கி ஏழு மாதங்கள் நிறைவடைந்துவிடும். ஆனால், இந்தப் போரின் முடிவு குறித்த எந்த நேர்மறையான முடிவும் இதுவரை எட்டப்படவில்லை.இந்த நிலையில், அமெரிக்காவின் நியூயார்க்கில் ... மேலும் பார்க்க

`இன்னும் பழைய அரசாங்கத்தையே குறைச் சொல்லிக்கொண்டிருப்பதில் நியாயமில்லை' - விஜய்யை சாடிய எல்.முருகன்

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ``சென்னையில் நேற்று நான் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கொண்ட... மேலும் பார்க்க

``ஸ்டாலின், பி.டி. ஆர்... தோற்றார்களா அல்லது தோற்கடிக்கப்பட்டார்களா?" - நடிகர் பிரகாஷ் ராஜ்

த.வெ.க ஆட்சி சரியில்லை என்றால், நான் கேள்வி கேட்பேன் என நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். திருச்சியில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் பிரகாஷ் ராஜ், `` முன்ன... மேலும் பார்க்க

``தமிழ்நாட்டில் இப்போது பல பவர் சென்டர்கள் உருவாகிவிட்டன" - ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்

புதுச்சேரியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``புதுச்சேரியை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்ட கட்சி தற்ப... மேலும் பார்க்க